யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/10/18

பள்ளியில், 'டிஜிட்டல்' வருகைப்பதிவு: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் :

பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு கட்டடத்தை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.


அவர் அளித்த பேட்டி: இலவச சைக்கிள் மற்றும்
, 'லேப்டாப்' அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இணையதள இணைப்புடன் கூடிய, ஐ.சி.டி., என்ற, கணினி முறை கல்வி வகுப்பு, 3,000 பள்ளிகளில், நவம்பர் இறுதிக்குள் அமைக்கப்படும்.அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், டிஜிட்டல் முறையில், வருகை பதிவேடு திட்டம் வர உள்ளது. சில பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த பள்ளியில், இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என, முதல்வருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை, டிசம்பர் இறுதிக்குள் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழக அரசின் நகரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையான, டி.டி.சி.பி., அங்கீகாரம் பெறாத கட்டடங்களில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே, 2019 வரையில், ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை, பள்ளி நிர்வாகிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான புயலுக்கு பெயர் 'டிட்லி' - வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. புதிய புயலுக்கு இந்திய வானிலை மையம் டிட்லி என்று பெயர் சூட்டியுள்ளது.
டிட்லி என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஒடிசா கோபால்பூருக்கு 530 கி.மீ தொலைவிலும், கிலிங்கப்பட்டிணத்திற்கு 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:  புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்திற்கு மித மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மத்திய, வங்க அரபிக்கடலுக்கு அக்.13ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு


கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு - கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான
சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, “இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார். ஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.
இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பென் ஸ்மித் கூறுகையில், “உபயோகிப்பாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும்” என்று குறிப்பிட்டார்.
‘’பேஸ் புக் சமூக வலைத்தள நிறுவனமும், தனது உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு போனதால் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

மாதம் ரூ.10,000க்கும் அதிகமாக ஊதியமா?: மத்திய அரசின் மருத்துவ காப்பீடு இல்லை :

மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும்
அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பம், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு வரம்புக்குள்வராது.
பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பான தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஹெச்.ஏ.), மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் ஆகியவை சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பங்கள் மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு வரம்புக்குள் வராது

2, 3 அல்லது 4 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகனங்கள், மீன்பிடி படகுகள், 3 அல்லது 4 சக்கர விவசாய வாகனம், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பில் விவசாய கடன் அட்டை, தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர், அரசு ஊழியர், வருமான வரி, வர்த்தக வரி செலுத்துவோரும், விவசாயம் சாராத நிறுவனங்களும் இந்த வரம்புக்குள் வர மாட்டார்கள்.

2.5 ஏக்கருக்கும் அதிகமாக பாசன நிலம் மற்றும் பாசன உபகரணங்கள் வைத்திருப்போர், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமாக பாசன நிலம் ஆகியவற்றை 2 அல்லது அதற்கும் அதிகமான பயிர் பருவங்களில் வைத்திருப்போர், 7.5 ஏக்கர் நிலம் மற்றும் பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் ஆகியோரும் தேசிய மருத்துவ காப்பீடு திட்ட வரம்புக்குள் வர மாட்டார்கள். இத்தகைய குடும்பத்தினரை தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து மாநிலங்கள் நீக்கிவிட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு :

உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.

பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து,  இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம் நடத்த முடியும்.இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின்புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்திமற்றும் உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்

அன்பார்ந்த பெற்றோர்களே., தங்களுடைய குழந்தைகள் இன்றைய கல்வி மாற்றத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டுமா?

அதற்காகவே நாங்கள் QB365 App உருவாக்கியுள்ளோம்.
இந்த App மூலம் தங்கள் குழந்தைகளுக்கு நீங்களே ஒரு ஆசிரியராக செயல்பட்டு அவர்களுக்கு வழிகாட்டவும்,  வழி நடத்தவும் உதவுகிறது.
மேலும் புத்தக வினா இன்றி மேலும் பல கூடுதல் வினாக்கள் உடன் அவர்களை தயார் செய்ய இந்த செயலி முழுக்க முழுக்க பயன்படுகிறது. இதன் மூலம் தங்களுடைய குழந்தைகள் பள்ளியின் முதல் மாணவனாக திகழலாம்.
இந்த அரிய செயலியை பெற இந்த QB365 APPlink ஐ click செய்யவும்.