யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/8/18

அனைவருக்கும் சுதந்திர தினம் நல்வாழ்த்துகள்


வட மாநிலங்களுக்கு நகருது கன மழை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை, :வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், வட கிழக்கு மாநிலங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், கர்நாடகா மற்றும் கேரளாவிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், கன மழை கொட்டுகிறது.

வட மாநிலங்களுக்கு நகருது கன மழை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

கேரளாவில் வெள்ளப் பெருக்கால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 'இன்னும் இரண்டு நாட்களுக்கு, கேரளா,கர்நாடகாவில் கன மழை தொடரும்; அதன்பின், வட மாநிலங்களை நோக்கி மழை நகரும்' என, வானிலை மையம் கணித்துள்ளது.இதற்கிடையில், வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட கிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச் சந்திரன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, நீலகிரி மற்றும் கோவை

மாவட்டங்களில் மட்டும், இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் திடீர் மழை பெய்யலாம்.கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண படுக்கை வசதிகள் ஏசியாக மாற்றம்: தெற்கு ரயில்வே எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

சாதாரண படுக்கை வசதிகளை
 ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளாக மாற்றி வருவாயைக் கூட்ட தெற்கு ரயில்வே அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் சாதாரண படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கு கொடுத்து வந்த கட்டணத்தை விட ரூ.500 முதல் ரூ.800 வரை கூடுதல் கட்டணத்தை பொதுமக்கள் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இதுவரை இருந்த 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 702 ஆகக் குறைக்கப்படுகிறது. இதுவரை 12 பெட்டிகளுடன் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுடன் இயங்கி வந்த பாண்டியன் விரைவு ரயிலில் 9 புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இஸ்ரோவின் சூப்பர் பிளான்.. மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 2 டிவி சேனல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும், பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பயிற்சி முகாமைt  நடத்துவதற்காகவும் 2 டிவி சேனல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், "8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக இஸ்ரோ மாணவர்களின் திறன் வளர்க்கும் திட்டங்களை உருவாக்கும்" என்று தெரிவித்தார்

 தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளி முகமை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 25 முதல் 30 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி காலங்களில் மாணவர்கள் தங்களுடைய சிறிய செயற்கைகோள்களைத் தயாரிக்க ஆய்வகங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்" என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் சென்றடையும் வகையில் டிவி சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளது பற்றி கூறுகையில், 
நம்மிடம் அறிவியலுக்காக தனியாக டிவி சேனல் எதுவும் இல்லை. அதனால், இஸ்ரோ தொடங்கும் டிவி மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என்று கூறினார். விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சிந்தனைகளுடன்t வருபவர்களுக்காக ஒரு காப்பீட்டு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது பற்றி இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். \
இது குறித்து சிவன் கூறுகையில், "நமக்கு புதிய விண்வெளி சிந்தனையாளர்களுக்கான ஒரு காப்பீட்டு மையம் தேவை. இதில் எங்களுடைய நோக்கம் சிறந்த அறிவு, சிறந்த ஆராய்ச்சி. இதில் ஏற்படும் வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபடும் புதிய அறிவியலாளர்கள் எங்களுடன் சேராமலே இஸ்ரோவுக்கு பங்களிப்பு செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்பில் இதெல்லாம் நடக்குதா? அதிர்ச்சிக்கே அதிர்ச்சி!!

இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியான வாட்ஸ் அப்பில் ஹேக் செய்ய முடியும் என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவி, பல அப்பாவிகள் அடித்தே கொல்லப்பட்டனர். இதனை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாட்ஸ்அப் நிறுவனமும், இதனை தடுக்கும் விதமாக, போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில், ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் வசதி அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றி அமைக்க முடியும் என்று, செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
இதனை அவர்கள் ஒரே ஒரு கிளிக்கில் செய்து முடித்து விடுவார்களாம், அதாவது நாம் அனுப்பும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க முடியுமாம், மேலும், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவைக்களிலும், நீங்கள் அனுப்பியதாக ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்ப இயலுமாம்.
என்ன சொல்லி என்ன பண்ண., ''முதலை வாயில் தலையை விட்ட கதை தான் இன்றய இணைய பயன்பாடு'', நாம் நம் இரகசியங்களை நேரில் வைத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது என்று சமூக ஆர்வலர்களை கருத்து தெரிவிக்கின்றனர்.

தொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம்

தமிழகத்தில், சென்னை மற்றும்  அண்ணா பல்கலைகள் மட்டும், தொலைநிலை கல்வியில், படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புக்கு அனுமதி தரப்படவில்லை.தொலைநிலை கல்வியில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அமல்படுத்தி வருகிறது.

பரிசீலனைஇதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொலை நிலை கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு மட்டும், அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் அங்கீகார விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.
அனைத்து பல்கலைகளுக்கும், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு அனுமதி வழங்கப் படவில்லை.அதேபோல, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, அனுமதி தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையை பொறுத்த வரை, பி.ஏ., - எம்.ஏ., பொது நிர்வாகம், எம்.ஏ., அரசியல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும், அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.அதிர்ச்சிஅண்ணாமலை பல்கலை, அழகப்பா, பாரதியார், மதுரை காமராஜர், பெரியார், திருவள்ளுவர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் உட்பட, 10 பல்கலைகளின் பெயர்கள், அங்கீகார பட்டியலில் இல்லை. இதனால், பல்கலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன

இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது :

இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

வினாத்தாள்,அவுட்,ஆகாது,சி.பி.எஸ்.இ.,மைக்ரோசாப்ட்,உதவி
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.
இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.
இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,
பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.
அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்து சோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

பள்ளியிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு :

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில்  (https://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து 16.8.2018 முதல் 30.8.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே  பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி  கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த  வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு  அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்

SPD PROCEEDINGS-BRTE COUNSELING ONLINE ENTRY தொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் கடிதம்

தமிழக ஓய்வூதியர்கள் மற்றும் விரைவில் ஓய்வூதியம் பெற இருப்பவர்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பெறுவது சார்பான கருவூலத்துறை முதன்மை செயலாளர் கடிதம் !