நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக
தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 நபர் நிபுணர் குழு புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கடந்த மாதம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கல்வி கொள்கை இந்திய பாரம்பரியத்தையும் அறிவியலையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.