யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/18

நீதிக்கதை----சிந்தனை கதைகள்,



காளான்களின் ராணி!

நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும ் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.

இவ்வளவு நன்மைகள் செய்யும் ராணிக்கு, சிறப்பான பரிசு தர வேண்டும் எனப் பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் காளான்களோடு ஆலோசனை நடத்தின.

‘‘நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.

CPS-ஐ நீக்கினால் ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு*

CPS நீக்கம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான *ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்* ஈடுபட அறிவித்துள்ளது.


டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ள கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறும் சூழலில் ஜாக்டோ-ஜியோவின் நடவடிக்கை பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விளக்கமளித்துள்ள *ஜாக்டோ-ஜியோவின் நிதிக்காப்பாளரான திரு.ச.மோசஸ்,* "பல ஆண்டுகாள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே இத்தகைய நிலைக்குள் ஜாக்டோ-ஜியோ தள்ளப்பட்டுள்ளது.

 நேற்றைய ஜாக்டோ-ஜியோவின்  ஊடகச் சந்திப்பிலேயே  *ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கஜா புயல் நிவாரணப் பணிகள் துளியளவும் பாதிக்காது.* மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் *பிற மாவட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்* என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் *சில ஊடகங்கள் இதனை மறைத்து வெறும் வேலைநிறுத்தச் செய்தியை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன.*

ஜாக்டோ-ஜியோவைப் பொறுத்தவரை புயல் *பாதிப்பிற்குள்ளான மாவட்ட மக்களின் உணர்வுகளையும் எமது உறுப்பினர்களின் உரிமையையும் ஒருங்கே மதித்தே வேலைநிறுத்தப் போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டுள்ளோம்.*
மேலும், நிவாரணப் பணிகளோடே நின்று விடாது *நிதி உதவி வழங்குவதிலும் ஜாக்டோ-ஜியோவின் உறுப்பு சங்கங்கள் தனித்தனியாகவும் பல இலட்சக்கணக்கான ரூபாய்* மதிப்பிலான பங்களிப்புகளைச் செய்துள்ளதோடே ஜாக்டோ-ஜியோ சார்பாக *ஒரு நாள் ஊதியத்தையும் வழங்க* அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புயல் நிவாரணப் பணிக்காக ரூ.15,000/- கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதும் எமது போராட்டக் கோரிக்கைகளில் முதன்மையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எமது பிடித்தத்தில் நாளது தேதி வரை அரசு செலுத்தியுள்ள 10% தொகையான ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள* ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், CPS திட்டத்தினை இரத்து செய்வதன் வழியாக அரசிற்கு *இந்த டிசம்பர் 1-ம் தேதி முதலே மாதம் தோறும் ரூ.250 கோடி நிதிச் செலவினம் குறையும்."* என்று தெரிவித்துள்ளார்.

இணைப்பு : மோசஸ் அவர்களின் பேட்டி https://youtu.be/yFiZ9TyxtMs

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி! மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் வகுப்பில் எளிய எந்திரங்கள் என்னும் தலைப்பில் உள்ள பாடப்பொருளை (திறன்), மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் வழி :

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 1 தேர்வை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அந்த மதிப்பெண் படி, பிளஸ் 1ல், உரிய பாட பிரிவுகளைப் பெற முடியும். பிளஸ் 2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், உயர்கல்விக்கு செல்ல முடியும்.நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. இனி, தனி தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்க உள்ளன. இந்த ஆண்டு முதல், தனி தேர்வர்களுக்கு மார்ச் மற்றும் ஜூனில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான, வினாத்தாள் பட்டியலை, அரசு தேர்வு துறை தயாரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், பாட வாரியாக வினாத்தாள்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு பாடத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள வினாக்களை எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வினாத்தாளையோ, தேர்வு துறை இறுதி செய்யும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, அவை, அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மிக கடினமான கேள்விகள் இன்றி, மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெறும் என, தெரிகிறது.மாணவர்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகள் மற்றும் பாடத்தின் பின்பக்க கேள்விகளை மட்டுமின்றி, பாடங்களின் அனைத்து அம்சங்களையும் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், பாடங்களின் எந்த பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும் என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்:

அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஏழாம் வகுப்பு முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில் காலாண்டு வரையிலான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படும்.அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.1ல் நடக்க இருந்த திறனாய்வு தேர்வு கஜா புயல் பாதிப்பால் டிச.15ல் நடக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அரையாண்டு தேர்வு டிச.10ல் தொடங்கி, 22-ல் முடிகிறது. தேர்வுகளுக்கு இடையில் திறனாய்வு தேர்வை வைத்துள்ளதால், மாணவர்கள் எந்த தேர்வுக்கு படிப்பது என குழம்பியுள்ளனர். எனவே, அரையாண்டு முடிந்த பிறகு விடுமுறை நாளிலோ, அல்லது ஜனவரி மாதத்திலோ இந்த தேர்வை வைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக்:

அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ள, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினரும், அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பினர், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.பட்டியல்இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் விபரங்களை, போலீஸ் வாயிலாக பட்டியல் எடுக்க, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுஉள்ளது.
அதேபோல, அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் உட்பட, பள்ளிக்கு வராமல் போராட்டத்துக்கு செல்லும் ஆசிரியர்களை, ஒவ்வொரு நாளும் பட்டியல் எடுக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.இந்த பணிகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பட்டியலின் படி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, கறுப்பு பட்டியலில் இடம் பெற செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கறுப்பு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வின் போது, பணி மூப்பு பட்டியலில் பிந்தைய இடத்துக்கு தள்ளவும், சங்கம் இன்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.அபாயம்இந்த திட்டத்தால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும்; முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாகவும்; தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு பெறுவது பாதிக்கப்படும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது:

சென்னை : 'வங்கக்கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குடி தண்ணீருக்கு பற்றாக்குறை வருமோ என்ற அச்சத்தில் உள்ள, வட மாவட்ட மக்கள், இந்த மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம், நவம்பர், 23க்கு பின், குறைந்து காணப்படுகிறது. இதனால், ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, கணிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 40 சதவீதத்துக்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இந்நிலையில், 'நாளை முதல், மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



மழை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: வங்கக்கடலின் தென்கிழக்கில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, மேற்கு திசையில் நகரும் நிலையில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யலாம்.

கன மழை :

நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களின் சில இடங்களில்,
கனமழை பெய்யும். மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மழை குறைவால், குடிநீருக்கு திண்டாட்டம் வருமோ என்ற, அச்சத்தில் உள்ள, வட மாவட்ட மக்கள், மூன்று நாள் மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

சென்னை வானிலை மையத்தின், மாவட்ட வாரியான முன் கணிப்பின்படி, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிக மழை பெய்யும்.
வரும், 5ம் தேதி, எந்த மாவட்டத்துக்கும் கனமழை எச்சரிக்கை இல்லை. 6ம் தேதி, வேலுார், திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு, மழை முன்னறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

'திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதை ஒட்டி உள்ள, சென்னையின் சில பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இடைவெளி விட்டு, இரண்டு நாட்கள் மழை பெய்யும்' என, தனியார் வானிலை யாளர்கள் கணித்துஉள்ளனர்.
வெயில் :

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் எந்த இடத்திலும், 1 செ.மீ., கூட மழை பதிவாகவில்லை. சென்னை, வேலுார், சேலம், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் மிதமாகவும், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகவும் வெயில் கொளுத்தியது. மாலையிலும், அதிகாலையிலும், குளிர்பனி நிலவியது.

இனி தமிழக அரசு பள்ளிகளில்., இட்லி, பூரி, பொங்கல்., களத்தில் இறங்கியது தமிழக அரசு.!!

தமிழக அரசு பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் அய்யா அவர்களால் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டத்தை, பின் மறைந்த முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியை போக்கி, கல்வியை போதித்தனர்.

இந்த திட்டம் இன்றுவரை மென்மேலும் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி கொடுப்பதற்கு தமிழக அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக, தமிழக அமைச்சர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் எம்.மணிகண்டன், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி, சீருடைகள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக'' தெரிவித்தார்.


மேலும், தற்போது சிறப்பாக மசெயல்பட்டு வரும் சத்துணவு திட்டத்தோடு, கூடிய விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

TRB - சிறப்பாசிரியர் பணி நியமனம் - இடஒதுக்கீட்டிலும் முறைகேடு - வழக்கு தொடர தேர்வர்கள் ஆயத்தம்!

ஜாக்டோ ஜியோ போராட்டம்திங்கட்கிழமை வரை போராட்டத்தை ஒத்தி வைக்க இயலுமா என தகவல் பெற்று தெரிவிக்க ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!



ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - முழு விவரம் :

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்படுவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(டிச.,04) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் லோகநாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்யதிருந்தார். இதில், கஜா புயல் பாதிப்பு, அரையாண்டு தேர்வு சமயத்தில் போராட்டம் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்கப்பட்டிருந்தது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இன்று (டிச.,3) பகல் 1 மணிக்கு இந்த அவசர வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, போராட்டத்தை டிச.,10 வரை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன் பகல் 1.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதில், கோர்ட் அறிவுறுத்தலை ஏற்று டிச.,10 வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ ஊதிய விவகாரம் தொடர்பாக கடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு நபர் கமிஷனின் பரிந்துரையையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

போராட்டத்திற்கு தடை இல்லை - தற்காலிகமாகவே ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

                         


ராஜஸ்தானில் தமிழ் கற்கும் குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள் :

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குழந்தைகளுக்கு தமிழ் வழிக் கற்றல் பயிற்சியை இளைஞர் ஒருவர் அளித்துவருகிறார். இலவசப் பயிற்சி மூலம் தமிழ் கற்றுக் கொள்ளும் குழந்தைகளின் பேச்சாற்றலைப் பார்த்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலக அளவில் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. உலகம் முழுவதும் போற்றப்படும் தமிழ் மொழியை ராஜஸ்தானில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார் முருகானந்தம். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று ஒரு திட்டம் தொடர்பாக ராஜஸ்தான் சென்றுள்ளார். தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வரும் முருகானந்தம், அங்குள்ள தமிழர்கள் குடும்பங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் வகுப்பை நடத்தி வருகிறார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பது என்பது கடினமாக உள்ள சூழலில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்சி அளிக்கிறார் முருகானந்தம்.திருக்குறள், ஆத்திச்சூடி, புறநானூறு மற்றும் பாரதியார் பாடல்களை கற்கும் குழந்தைகள் தமிழை சரளமாக பேசக் கற்றுக்கொண்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சிபொங்க தெரிவிக்கின்றனர்.மூத்த மொழியான தமிழை கற்பதில் பெருமைகொள்வதாக பயிற்சி பெற்று வரும் குழந்தைகளும் தெரிவிக்கின்றனர். இதேபோன்று உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம், தமிழின் பெருமை பரவிக்கிடக்கும் என்பதில் ஐயமில்லை

கேள்வி கேட்கும் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை

மேட்டுப்பாளையம்: ஆசிரியா்களிடம் மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என பெங்களூரு இஸ்ரே முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூலத்துறை நடுநிலைப் பள்ளியின் 133-வது ஆண்டு விழாவில், பெங்களூரு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:அரசுப் பள்ளியில்தான் எனது படிப்புத் தொடங்கியது. கல்வி கற்கும்போது மாணவா்களுக்குத் தடை ஏதும் இருக்கக் கூடாது. கிடைக்கு சந்தர்ப்பங்களை பள்ளி மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவா்களின் எதிர்காலம் ஆசிரியா்களின் கையில்தான் உள்ளது.

இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாணவர்களின் கல்வி அறிவு அவசியமாக உள்ளது. ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடிக்குமேல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு செலவு செய்து வருகிறது. இதை மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியா்களிடம் மாணவா்கள் கேள்வி கேட்கும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

 திறமையும், தகுதியான பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிறைய போ் உள்ளனர் என கூறினார்

புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் ரத்து? - தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் சீரமைப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தேவைக்கு அதிகமாகவே உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீர் செய்யும் பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர் ரோகிணி:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடந்த இந்த விழாவில் மனவளர்ச்சி குன்றிய செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர். விழாவில் 15 கிலோ எடையுள்ள பெரிய கேக் வெட்டி, குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.