யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/11/17

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொது,நிகழ்ச்சியில்,மாணவர்கள்,பங்கேற்க,55கட்டுப்பாடுகள்,அரசியல்,நிகழ்ச்சிக்கு,அனுமதி,இல்லை
தமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது.
பின், அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்
* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை
* அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது. 
நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது 
* தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது
* போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது
* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்
* கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
* மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது 
* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
* குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்
* சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்
* உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்
* அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும் நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம். 
* மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்
* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்
* வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது 
* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்
* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்
* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

கல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்

சென்னை : குழந்தைகளின் கல்வி செலவுக்கான முன் பணத்தை வழங்காததால், போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவும் வகையில், 5,000 ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டு வந்தது.
இதை பெறும் ஊழியர்கள், வட்டியின்றி, 10 மாதங்களில் செலுத்துவர். இந்த முன்பணம், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேதாஜி தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: கல்வி முன்பணம் நிறுத்தப்பட்டது குறித்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தில், கேள்வி எழுப்பினோம். 13வது ஊதிய ஒப்பந்தத்தில், இதுகுறித்து பேசப்பட்டு வருவதாக, போக்குவரத்து துறையின் மனிதவள மேம்பாட்டுத்துறை, முதுநிலை துணை மேலாளர் பதில் அளித்து உள்ளார்.அதிகாரிகள் வேண்டுமென்றே, வழங்க மறுக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?


கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.
முதன்முதலாக தேர்வு எழுதுவோர், *6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2* வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். *பொருளாதாரம்* குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.
தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான *கணிதக்* கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.
*நடப்பு நிகழ்வுகள்* குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் *செய்தித்தாள்களைப்* படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.
*அறிவியல்* பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். *கம்ப்யு ட்டர் சயின்சில்* அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.
பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், *10 மாதிரி தேர்வுகளை* எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.
*முக்கிய குறிப்புகள்:*
தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.
*அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!*
ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், *மொழியறிவு* நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, *தாய்மொழி, ஆங்கிலம்* மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.
குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.
மூன்றாவதாக அடிப்படை *கணித அறிவு* முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.
பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
*வினாத்தாள் பற்றிய விவரங்கள்:*
பொதுத் தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : *100 வினாக்கள்*
பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள்!!!
*1. வரலாறு - 16 வினாக்கள்* 
*2.பொருளாதாரம் - 09 வினாக்கள்*
*3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்*
*4. புவியியல் - 06 வினாக்கள்*
*5. இயற்பியல் - 04 வினாக்கள்*
*6. வேதியியல் - 03 வினாக்கள்*
*7.தாவரவியல் - 02 வினாக்கள்*
*8. விலங்கியல் - 06 வினாக்கள்*
*9. முக்கிய தினங்கள், திட்டங்கள்* - *03 வினாக்கள்*
*10. கணிதம் - 25 வினாக்கள்*
*11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்*

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு  கூடுதல் ஊதியம் பெற்று  வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 
அதிர்ச்சி அளிக்கிறதா ? நண்பர்களே ...
உண்மைதான் ..
��மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்காக பல ஆண்டுகளாக நாம் போராடிவருகிறோம் ...
��உண்மையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்குவதைவிட அதிக ஊதியம் வழங்கி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ?
��குழம்ப வேண்டாம் பொறுமையாக படிக்க ..மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200.  தமிழக மாநில இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750(1.1.2011க்கு பிறகு ), 5200+2800(1.1.2011க்கு முன்பு ...
��இப்போது மூன்று வித ஊதியங்களில் இருந்து பதவி உயர்வு பெறுவதால் பெறும் ஊதிய நிர்ணயங்களை இங்கே காண்போம் ..
��அடிப்படை ஊதியம் மூன்று கணக்கீட்டிற்கும் 10000என்று வைத்துக் கொள்வோம் ..
31.12.2010 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம்  10000
தர ஊதியம்.   2800
------------------------------ --
மொத்தம்.      12800
------------------------------ --
பதவி உயர்வு
 பணப்பலன் 3%
12800*3%= 384@390
பட்டதாரி பதவி உயர்வு
 நிர்ணயம் 
அ. ஊதியம்  10000
3%                        390
தர ஊதியம்.   4600
------------------------------ --
மொத்தம்.      14990
------------------------------ --
��  1.1.2011 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம்  10000
தர ஊதியம்.   2800
தனி ஊதியம்.  750
------------------------------ --
மொத்தம்.      13550
------------------------------ --
பதவி உயர்வு
 பணப்பலன் 3%
13550*3%= 406.50@410
பட்டதாரி பதவி உயர்வு
 நிர்ணயம் 
அ. ஊதியம்  10000
3%                        410
தனி ஊதியம்.  750
தர ஊதியம்.   4600
------------------------------ --
மொத்தம்.      15760
------------------------------ --
குறிப்பு :
-------------
பதவி உயர்வில் தனி ஊதியம் அடிப்படை ஊதியத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது .
இதுவே மத்திய அரசைவிட கூடுதல் ஊதியம் பெற வழிவகை செய்கிறது ..
�� 1.1.2011ல் மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டால்
 9300+4200
பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம்  10000
தர ஊதியம்.   4600
------------------------------ --
மொத்தம்.      14600
------------------------------ --
பதவி உயர்வு
 பணப்பலன் 3%
14600*3%= 426@430
பட்டதாரி பதவி உயர்வு
 நிர்ணயம் 
அ. ஊதியம்  10000
3%                        410
தர ஊதியம்.   4600
------------------------------ --
மொத்தம்.      15010
------------------------------ --
முடிவு :
----------
��மத்திய இணை ஊதியம் பெற்று பதவி உயர்வில் சென்றால் பெறும் ஊதியம் 15010
��தற்போதைய நிலையில் பதவி உயர்வில் பெறும் ஊதியம் 15760
மத்திய அரசைவிட அதிகமாக வழங்கும் ஊதியம் ..
      15760
      15010
------------------
          750
------------------
��தமிழக கல்வித்துறையில் 1.1.2011க்கு பிறகு
 5200+2800+750பெற்று பதவி உயர்வில் செல்பவர்களுக்கு AEEOக்களும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்  மத்திய அரசு தரும் ஊதியத்தைவிட அதிக ஊதியத்தை வழங்கி பெரும் உதவி செய்து வருகிறார்கள் ..
��மேலும் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசின் பணத்தை தொடர்ந்து  வாரி வழங்கும் கர்ண பிரபுக்களை பாராட்டியே ஆக வேண்டும் ..
��இத்தகை நிர்ணயங்களை தணிக்கை அலுவலர்களும் கவனிப்பை எதிர்நோக்கி கண்டும் காணாமல் போவதும் கல்வித்துறையில் பெறும் குழப்பங்களை முரண்பாடுகளையும் உருவாக்கி வருகிறது ..
��கர்ண பிரபுக்கள் கைங்கர்யம் மற்றும் தணிக்கை அலுவலர்களின் காட்டில் மழை பெய்யும் வரை அரசு பணம் வீணாகும் ...
��தொடரட்டும் மத்திய அரசை விட கூடுதல் மாநில பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் ...
ஆக்கம் 
------------
சுரேஷ் மணி 
நாமக்கல் 
9943790308

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 25.11.2017 சனிக்கிழமை பள்ளி வேலை நாள்:


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தான் அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும், எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு 2010ல் வெளியான அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

TNPSC : MODEL QUESTIONS :

VAO EXAM STUDY MATERIALS :

கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை: வேலூர் அருகே சோகம் :

கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை: வேலூர் அருகே சோகம்
வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பான தகவலறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீபா, சங்கரி ஆகியோரின் உடல்களை மீட்டனர்.


மணிஷா மற்றும் ரேவதி உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலியான மாணவிகளின் சடலங்களை கண்டு பெற்றேர்கள் மற்றும் உறவினர்கள் அழுதது நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருந்தது.

ஆசிரியர்கள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.