யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/8/17

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
இதற்காக 2017-2018ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் பணிமனைகள் அமைத்து மாதந்தோறும் 2 பயிற்சி என்ற வீதத்தில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. அதன்படி 2017-2018ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 40 மையங்களில் 80 பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது.
இன்டர்மீடியட் மற்றும் அட்வான்ஸ்டு’ என மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு ஆசிரியர்களின் கணினி பயன்பாட்டின் முன்னறிவை சோதித்து அதனடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த மூன்று நிலைகளிலும் பயிற்சி பெற தகுந்த ஆசிரியர் மாவட்டம் தோறும் ‘டயாக்னிஸ் டெஸ்ட்’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 40 மையங்கள் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ- - மாணவியருக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 84 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். சில ஆண்டுகளாக, இந்த விடுதிகளில், 40 சதவீதம் வரை காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஒரு காப்பாளர், மூன்று விடுதிகள் வரை கவனித்து வருகிறார். விடுதியை சரியாக நிர்வகிக்க முடியாததால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2014ல், காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதாக அரசு அறிவித்தது; அது, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. இதேபோல, சமையலர், இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, சத்தான உணவும் கிடைப்பதில்லை.
இரவு நேரத்தில் உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவமனை செல்வதற்கும் வழியில்லை. 
எனவே, காலியாக உள்ள விடுதி காப்பாளர்கள், இரவு காவலர், சமையலர் பணி இடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை

இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும், மாணவ - மாணவியரை ஏற்ற மறுத்து, அவமதிக்கும் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. 
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட நிறுத்தங்களில், டிரைவர்கள், பஸ்களை நிறுத்தாமல் செல்வதாகவும், கண்டக்டர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, 'அரசு பஸ்களில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யாத ஊழியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், எச்சரித்து உள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது: பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரிடம், கண்டக்டர்கள் கனிவுடன் பேச வேண்டும்.அனைத்து நிறுத்தங்களிலும், அரசு பஸ்சை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். தகாத வார்த்தைகளை, கண்டிப்பாக பேசக்கூடாது. இதை மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த விஷயத்தில், 
மண்டல துணை மேலாளர் மற்றும் பஸ் நிலைய பொறுப்பாளர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை, 8:00 மணி முதல் 10:00 மணி வரை, கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், துணை மேலாளர்கள், அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட, பஸ் நிறுத்தங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'

சென்னை: தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 12 ஆயிரம் இடங்களுக்கு, இதுவரை, 1,200 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து 800 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதி வரை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன கல்லுாரிகளில், மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவர் என, பள்ளிக் 
கல்வித்துறை அறிவித்துள்ளது.
'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக, தங்கள் சான்றிதழ்களை எடுத்து சென்று, ஆசிரியர் டிப்ளமா படிப்பில் சேரலாம்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தெரிவித்துள்ளார்

சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'

சென்னை: சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்துணவு மையங்களுக்கு வழங்க, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அலுமினியம் அல்லது, 'இண்டோலியம் பிரஷர் குக்கர்' வாங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரஷர் குக்கர் வாங்க, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க, செப்., 11ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பினார். இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகளை, அவர்கள் அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டயப்படுத்த முடியாது என குறிப்பிட்டது. கட்டமைப்பு வசதிகளுக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பெற்றோர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் அவர்களது குழந்தைகளை தாமாகவே முன்வந்து அரசு பள்ளியில் சேர்ப்பார்கள். பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்ற உரிமை அவர்களுக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, கடந்த 4 ஆண்டில் உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்பது என்பது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு:


திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
புதுடெல்லி:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும், செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர். 

நாடு தழுவிய வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: செப்.23-ல் எழுத்துத்தேர்வு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக் கான போட்டித்தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வுசெப் டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.தேர்வுக்கான ஆன் லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 27-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன் லைனில் (www.trb.tn.nic.in) விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


முதல்முறையாக போட்டித்தேர்வு இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படை யிலேயே நிரப்பப்பட்டு வந்தன. தொடக்கத்தில் மாவட்ட அள விலான பதிவுமூப்பு அடிப்படை யிலும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையிலும் சிறப்பாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.தற்போது தான் முதல்முறையாக போட்டித் தேர்வுமூலமாக சிறப்பாசிரியர் பணிநியமனம் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 100 மதிப்பெண் ணில் 90மதிப்பெண் எழுத்துத்தேர் வுக்கும், எஞ்சிய 5 மதிப் பெண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் எழுத்துத்தேர்வில், ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப் படுவர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அப்போது, பதிவுமூப்புக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும்.இறுதியாக எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியில் சேரும் சிறப்பாசிரியர்கள் உரிய கல்வித்தகுதி இருந்தால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VAO : கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:
கிராம கர்ணம், கிராம முன்சீப் தேர்வில் 1980 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 2009 -ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 747 கிராம நிர்வாக அலுவலர்களின் பணி, தகுதியின் அடிப்படையில் விரைவில் வரன்முறை செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணக்குப் பராமரிப்பு, அலுவலகங்களைப் பராமரிப்புக்காக, ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வரும் ரூ.2,500 பராமரிப்புச் செலவுக்கான தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தாலுக்கா அலுவலகங்களில் இணைய வழி பட்டா வழங்கும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள 254 கணினி பதிவேற்றுநர்களின் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் இணையதள சான்றிதழ்களின் பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், எல்காட் நிறுவனம் மூலம் இணையதள வசதி, எழுதுபொருள் செலவினம் ஆகியன அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களை நிர்வாக சாத்தியக்கூறுகள், வழிவகைகளுக்கு உட்பட்டு, அவர்களது சொந்த உள்வட்டம், வட்டத்தில் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் முதல்வர்.