யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/16

ஒரே Click-ல் நீங்களே கல்விச் சேவை யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...

  கல்விச் சேவை யில் Whatsapp group  புதிய வசதி 
 தொடர்ந்து பல்வேறு கல்விச் சேவை வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது கல்விச்செய்தியில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்களை விரைவாக பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

 
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்விச் சேவை வாசகர்களையும் ஒன்றாக Whatsapp செயலி மூலமாக இணைக்கும் புதிய முயற்சி இது.

 கல்விச் சேவை Whatsapp Group ல் எவ்வாறு இணைவது?

 
முதலில் Google chrome, Firefox போன்ற Browser -ல் உங்களது Mobile -ல் இருந்நது நமது கல்விச்செய்தியின் இந்த பதிவினை Open செய்து கொள்ளவும்.

கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள Whatsapp Groupல் எந்த நிலையில் வருவீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஆசிரியர் கல்விச் சேவை


https://chat.whatsapp.com/3KviyyfTsvRAWuckAuO7go

கல்விச் சேவை  3


கல்வி சேவை 4



 
இவற்றில் உங்களது சரியான குழுவினை தேர்வு செய்து Click செய்தவுடன் இந்த Link -ஐ உங்களது Whatsapp செயலியில் Open செய்து Join group என்பதை தேர்வு செய்து இணைந்து கொள்ளவும்.

*
ஒரு குழுவில் 256 நபர்கள் மட்டுமே இணையமுடியும் என்பதால் குழு 1,2,3... என்று பிரிக்கப்பட்டுள்ளது.

*
மற்ற குழுக்களும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.

குறிப்பு:

 *
குழுவில் கல்வி தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிடவும்,பகிரவும் செய்ய வேண்டும்.
*
நாகரிகமற்ற கருத்துக்கள்,செய்தி,படங்கள் வெளியிடுவோர் குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
*
உங்களது பலரின் பல நல்ல கருத்துகள்,செய்திகளை அனைவருக்கும் பயன் படும் என்ற நோக்கிலேயே இந்த குழுவானது பலவாக பிரிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த முயற்சிக்கு அனைவரும் சரியான முறையில் ஒத்துழைப்போம்.
நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம்.
                                                                                                          
நன்றி...

                                                                                                        -
அன்புடன்

                                                                                                       கல்விச் சேவை

JACTTA NEWS-Cps. வல்லுந‌ர் குழு ஜாக்டா விற்கு அழைப்பு :

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை(ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2
மணி முதல் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

www.tngdc.gov.in என்றஇணையதளத்தில் DEPARTMENT OF EXAMINATION என்பதை கிளிக் செய்து தோன்றும்பக்கத்தில் HSC September/October 2016 Hall Ticket Download என்பதனைகிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவுசெய்தால் அனுமதி சீட்டு கிடைக்கும்.

செய்முறைத்தேர்வு: செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள்கட்டாயம் செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும்உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும். அதோடு, மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி(தமிழ்) பாடத்தில்கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு தேதி குறித்தவிவரங்களை தனித்தேர்வர்கள் தாம் தேர்வு எழுதும்மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக எக்காரணம் கொண்டும் உரிய தேர்வுக் கூடஅனுமதிச் சீட்டின்றி தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு தேர்வுகள்இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்தபணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில்வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை
தவிர்க்கும் வகையில்சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
அதன்படிவாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 1 ல் மாநிலஅரசு பணியில் உதவியாளர் தகுதிஅல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்குகுறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல்அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள்சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர்தகுதி அல்லது அவர்கள் சம்பளவிகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்கவேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களைநியமிக்க கூடாது.

அரசியல்சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தையதேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்தகூடாது. அதிக வாக்காளர்கள் அல்லதுபர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள்நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம்காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண்வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஒரே வாக்குச்சாவடியில்ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள்நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால்வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமேநியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

   அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகைசெய்யும் மகப்பேறு மசோதா இன்று
ராஜ்யசபாவில்ஒருமனதாக நிறைவேறியது.

  தனியார் நிறுவனங்கள் உள்படஅனைத்துத் துறைகளிலும்  பணியாற்றும்பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3 மாத மகப்பேறுவிடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறுஆதாய சட்டத் திருத்த மசோதாஇன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி,அனைத்துத்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு காலவிடுப்பு கிடைக்கும்
50க்கும்மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில்குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்பச்சிளம்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்

மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

 பிரபல இணைய தேடுபொறிநிறுவனமான கூகுள் 'அல்லோ என்றபெயரில் புதிய செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

          கூகுள் நிறுவனம் இந்தஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவைவசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும்
செய்தி பரிமாற்ற செயலிஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.  

அதைத் தொடர்ந்து கடந்த மாதம்  'டியூ' சேவை முறைப்படிஅறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்துலட்சம் பேர் அதனை தங்கள்அலைபேசிகளில்  பதிவிறக்கம்செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள்தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன்வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவதுஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்புவசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள்  கணக்கை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.
இத்துடன்இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்குஏதுவான 'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்' இடம் பெற்றுள்ளன.
ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள்  பரிமாற்றம்மற்றும் குரல்வழி  அழைப்புவசதி போன்ற வசதிகள் தற்போதுஇந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால்வெகுவிரைவில் குரல்வழி  அழைப்புவசதி 'அல்லோ ' செயலியில் இடம்பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினமணி

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம்நேற்று நடந்தது.

சென்னை கல்லூரிச் சாலையில்உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில்நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில்அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்ககல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறைஇயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள்கலந்து கொண்டனர். 


நடப்புகல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில்செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்துசெயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும்விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவமாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாகவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன்நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும்கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும்உத்தரவிட்டார்.

பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் அட்டை!

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

அரசூழியர்களைப்பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டுவகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநிலஅரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவைஎன்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வதுகட்டாயமாகும்.
ந.க எண் = நடப்புக்கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டுமுடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டுமுடிவு எண்
நி.மு. எண் = நிரந்தரமுடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டுமுடிவு எண்
தொ.மு எண் = தொகுப்புமுடிவு எண்
ப.வெ எண் = பருவவெளியீடு எண்
நே.மு.க எண்= நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமேஅதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்டஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கானபதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில்எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமைதவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது.