யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/16

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

அரசூழியர்களைப்பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டுவகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநிலஅரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவைஎன்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வதுகட்டாயமாகும்.
ந.க எண் = நடப்புக்கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டுமுடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டுமுடிவு எண்
நி.மு. எண் = நிரந்தரமுடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டுமுடிவு எண்
தொ.மு எண் = தொகுப்புமுடிவு எண்
ப.வெ எண் = பருவவெளியீடு எண்
நே.மு.க எண்= நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமேஅதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்டஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கானபதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில்எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமைதவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக