யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/16

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம்நேற்று நடந்தது.

சென்னை கல்லூரிச் சாலையில்உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில்நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில்அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்ககல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறைஇயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள்கலந்து கொண்டனர். 


நடப்புகல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில்செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்துசெயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும்விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவமாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாகவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன்நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும்கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும்உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக