யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/17

SSA- தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கற்றல் விளைவுகள் "சார்ந்த பயிற்சி -நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ,பயிற்சிக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் பயிற்சிகள் நடைபெறும்

G.O and Express Pay Order for Newly Upgraded High School- Released

FLASH NEWS-அரசாணை -224-நாள் 04.11.2017- -பொது நிகழ்ச்சிகள் ,RALLIES ,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு -

தமிழ் மெல்லக் கற்பவருக்கான கற்றல் அட்டைகள்


 No automatic alt text available.
Image may contain: 1 person
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, smiling
No automatic alt text available.

Phonetic Sound Cards with Picture - Primary Student Study Materials

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
நீதிமன்ற தலையீட்டால் போராட்டம் நிறுத்தப்பட்டது.பின்னர் கடந்த அக்டோபர் மாதம், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இந்தப் பரிந்துரை அடிப்படையில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அது தொடர்பான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்தக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை தர வேண்டும். நீதிபதியை விமர்சித்ததாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.24-ம் தேதி தாலுகாதோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், வரும் 22-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடக்கும் வழக்கு விசாரணை முடிவு அடிப்படையில், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல் ஜாக்டோ -ஜியோ கிரெப் சார்பில் நடந்த மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில், நவ.18-ம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது என்றும், டிசம்பர் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை விளக்ககூட்டம், டிச.7-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம், ஜனவரி 6-ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

SSA - SCHOOL TEAM VISIT - REG DHARMAPURI | SSA CEO - PROCEEDINGS...



SG PAY - JACTTO GEO வழக்கில் Affidavit தாக்கல்


தோழமையுடன்,_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்

டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும்
செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது


தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.


இந்தஇரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து
வருகிறது.

 தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தசம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.

நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.


அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுப்பள்ளியில் காவல்துறை புகார்பெட்டி!!