யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/6/18

புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக தொடக்கக்கல்வி அமைச்சர்!

வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மகேஷ் என்பவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சாம்ராஜ் நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஒரு கருத்தை தெரிவித்தார்.

பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விரைவில், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு நடக்க இருக்கும் தேர்வுகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும்.

அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்படும்.
இதுகுறித்து பல நிபுணர்களிடமும், மனோதத்துவ மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருவதாகவும் மேடையில் பேசினார். இந்த பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

CBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க புதிய நடைமுறை

கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 

அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மறுதேர்வுகள் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கும் வகையில் மின் அஞ்சல் மூலமாக கேள்வித் தாள்களை அனுப்பி வைக்கும் முறையை சோதனை செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இவை 1000 மாணவர்களுக்கு குறைவாக தேர்வு எழுதும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தேர்வு கூட கண்காணிப்பாளர் பாஸ்வர்ட் மூலமாக ஒரு பிரிண்ட் எடுத்து பின்பு மாணவர்களுளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜெராக்ஸ் எடுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒவ்வோரு தேர்வு மையத்திற்கும் சிபிஎஸ்இ சார்பில் ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். மேலும் ஒவ்வொரு  மையத்திற்கு தனிப்பட்ட கடவுசொல் வழங்கப்படும். இந்த சோதனையில் எதிர்பார்த்த விளைவு வந்ததால், அடுத்த வருடம் நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளின் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு!

திருத்தப்பட்ட ஆசிரியர்- மாணவர்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ). இந்த அமைப்பு ஆசிரியர்கள்- மாணவர்கள் தொடர்பான விகிதாசாரங்களை சமீபத்தில் மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டது. 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்த விதியை மாற்றி, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அமைத்து உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில் ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்வதை ஏஐசிடிஇ ஒருபோதும் அனுமதிக்காது. ஏஐசிடிஇயின் கீழ் அங்கீகாரம் பெற்ற எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக ஆசிரியர்கள் ஓய்வு பெறுதல் அல்லது சுயவிருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்தால் மட்டுமே விகிதாசாரத்தை ஈடு செய்ய வேண்டும்.

வேறு எந்த வகையிலும் ஆட்குறைப்பு செய்து இந்த விகிதாச்சாரத்தை ஈடு செய்யக்கூடாது. ஏஐசிடிஇ அங்கீகரித்த எந்த கல்வி நிறுவனமும் திருத்தியமைக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் காரணமாக ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை இல்லை என்பதை மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஏஐசிடிஇ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க 11 பேர் குழு

சென்னை: நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ கல்லுாரிகளில், கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அரசு நியமித்துள்ள, கல்வி கட்டண நிர்ணய குழு, நிகர்நிலை பல்கலையில் இயங்கும் கல்லுாரிகளுக்கு, கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை.
எனவே, நிகர்நிலை பல்கலை நடத்தும் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான, ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்திருந்திருந்தார்.இந்த மனுவை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, பி.டி.ஆஷா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்து, 'யு.ஜி.சி., அமைக்கும் கட்டண நிர்ணய குழு, விரிவான ஆய்வு மேற்கொண்டு, கல்வி கட்டணத்தை பரிந்துரைக்க வேண்டும். 'அதுவரை, தற்போது சேர்க்கப்படும் மாணவர்களிடம், ௧௩ லட்சம் ரூபாய், நிபந்தனை அடிப்படையில் பெறலாம்' என, இடைக்கால உத்தரவிட்டது.இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகி, ''நிகர்நிலை பல்கலையில் இயங்கும் மருத்துவ கல்லுாரிகளில், கட்டணத்தை ஒழுங்குபடுத்த, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனரான, பேராசிரியர் ஆர்.சி.தேக்கா தலைமையில், ௧௧ பேர் அடங்கிய குழுவை, யு.ஜி.சி., நியமித்துள்ளது. ''இக்குழு, கல்லுாரிகள், மாணவர்கள் என, சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதித்து, நான்கு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்,'' என்றார்.

ஓவர்டைம்' படி ரத்து : மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: அரசு ஊழியர்களுக்கு, 'ஓவர் டைம்' எனப்படும், பணி நேரத்தை விட கூடுதலான நேரம் பணியாற்று வோருக்கான, படி வழங்குவதை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில், 'ஆப்ரேஷனல் ஸ்டாப் எனப்படும், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவிர, மற்றவர்களுக்கு, 'ஓவர் டைம்' படிகள் வழங்குவதை நிறுத்தலாம்' என, கூறப்பட்டுள்ளது.சில ஆண்டுகளில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்று, பணி நேரத்துக்கு கூடுதலான நேரத்தில் வேலை செய்வதற்கு வழங்கப்படும் படிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பணிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊழியர்கள் பட்டியலை தயாரிக்கும்படி, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு படிவம்!!!

பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு

அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.