யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/8/18

ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I : 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.
தாள்-II : 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம், அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.
ஆக, தாள்-I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்-II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
தாள் - I எழுதுபவர்கள் 1 - 8 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம்.
தாள்- II எழுதுபவர்கள் 6 - 12 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ளகல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.
150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண்பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும்'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை.
தேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை மாதிரித்தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வுகளின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில்கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாகஉணர்ந்திருக்கிறார்கள். 
எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம்.
நன்றி : அல்லா பக்‌ஷ்

TNTET_அறிவியல்_பாடத்தை_படிக்கும்_போது_கவனிக்க_வேண்டியவை:-

அறிவியல் தாள் I - க்கு 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வரை படித்தால் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற முடியும். சூழ்நிலை அறிவியல் என்பதனால் சூழ்நிலை பற்றிய வினாக்கள் சற்று அதிகமாக கேட்கப்படும். இவை தவிர அடிப்படை அறிவியல் சம்பந்தமான அறிவைப் பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, உயிரியலில் நமது சுற்றுச்சூழல், உடல் உறுப்பு மண்டலம், வேதியியலில் வேதிவினைகள், நிலக்கரி மற்றும் பெட்ரோலியம், இயற்பியலில் அளவீடுகள், அளவிடும் கருவிகள் போன்றவற்றைப் படித்திருக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பாடப் புத்தகமான, இரண்டு வருடத்திலும் உள்ள அறிவியல் கற்பித்தல் என்ற புத்தகத்தை முழுவதுமாகப் படித்தல் வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை மிக எளிமையான பாடப்பகுதி இருக்கும் இவை தேவையில்லை என்று ஒதுக்கவேண்டாம்.
அறிவியல் தாள் - II க்குப் படிக்க வேண்டிய பாடப் பகுதி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு.
உதாரணமாக: தாவரவியலில் - தாவர உலகம், செல் அமைப்பு
விலங்கியலில் - நுண்ணுயிரிகள் விலங்கு உலகம்
வேதியியலில் - வேதிவினைகள், கரிமச் சேர்மங்கள்
இயற்பியலில் - அளவீடுகள் ஒளியியல், ஒலியியல், மின்காந்தவியல் போன்றவற்றை மட்டும் நன்கு படித்தால் போதுமானது. 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு புத்தகம் முழுமையாக படிக்க வேண்டும்.. பி.எட். பட்ட வகுப்புகளை அறிவியல் கற்பித்தல் பாடப் புத்தகத்தை முழுமையாகப் படித்தல் வேண்டும். இவற்றிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். இதன் மூலம் அறிவியல் கற்பித்தல் முறைகளை அறிய முடியும்.
"முந்தைய போட்டித் தேர்வின் மாதிரி வினாத்தாள்களை பயிற்சி செய்தல் வேண்டும்.

FLASH NEWS :-கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம்..உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேர் தலைமையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் விசாரிக்கப்படும் என்றும் 4 மண்டலமாக முறைகேடு விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முறைகேடு நிரூபிக்கப்பட்டால் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கூட்டுறவு தேர்தலை நடத்தினாலும் முடிவை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம்:

WhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ( WhatsApp group call) அப்டேட் செயல்முறைக்கு வந்தது. வாட்ஸ்அப் செயலி உலகில் இருக்கும் அனேக திறன்பேசி பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலி ஆகும்.
மிகவும் பயனுள்ளதாக இந்த செயலினையினை உபயோகிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அப்டேட்டினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 பில்லியன்கள் மக்கள் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ்அப் செயலில் புதிதாக வந்திருக்கும் அப்டேட் தான் க்ரூப் கால்.
வீடியோ கால்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் இரண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பேச்சு வார்த்தையினை மிகவும் எளிதாக்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில் க்ரூப் கால்கள் செய்வதற்கான வாய்ப்பினையும் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அந்நிறுவனத்தின் ப்ளாக் ஸ்பாட்டில் "உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் இணைய சேவைகள் பொறுத்து இது மாற்றம் அடையும்" என்று இது குறித்து குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் (WhatsApp group call) செய்வது எப்படி?
மற்ற வாட்ஸ்அப் காலினைப் போலவே ஒருவரை மட்டுமே அழைக்க முடியும்.
பின்னர் அதில் "ஆட் பார்ட்டிசிபெண்ட்" ( add participant ) என்ற வசதியினை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை இந்த குருப் காலில் இணைத்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனான 2.18.189 and v2.18.192 - ல் WhatsApp group call சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது இந்த புதிய அப்டேட்.

மொத்தம் நான்கு நபர்கள் WhatsApp group video and audio call மூலம் ஒரே நேரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுமன் ஆகியோர் கூறியதாவது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சிக்கு ரூ.11 முதல் ரூ.12 கோடி மிச்சமானது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்.

பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 4 தேர்வை எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும். 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அது முடிந்ததும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். நாங்களே அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்போம். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தன

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வினவினார். மேலும் ஆகஸ்ட் 6-க்குள் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்ற வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆதிக்கம் : கொங்கு மண்டல கல்லூரிகளுக்கு அதிக மவுசு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கணினி அறிவியல் பாடப்பிரிவை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். முதல் சுற்றில், பெரும்பாலானோர், கொங்கு மண்டல கல்லுாரிகளுக்கு
முக்கியத்துவம் அளித்துள்ளனர்.அண்ணா பல்கலை சார்பில், 509 கல்லுாரிகளில் உள்ள, 1.70 லட்சத்து, 628 இடங்களுக்கு, பொதுப் பிரிவு ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதல் சுற்றில், 190 வரையில், 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 10 ஆயிரத்து, 734 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 7,347 பேர் மட்டும், கட்டணம் செலுத்தினர். அதிலும், 7,303 பேர், விருப்ப பாடப்பிரிவை பதிவு செய்தனர். இவர்களில், 6,768 பேர் மட்டும், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். திருநெல்வேலி, நாகர்கோவில், ஆரணியில் உள்ள, பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளிலும், அதிக இடங்கள் நிரம்பின.

மேலும், கோவை, பி.எஸ்.ஜி., - மதுரை தியாகராஜர் கல்லுாரி, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, அரசு தொழில்நுட்ப கல்லுாரி, கோவை குமரகுரு, ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி ஆகியவற்றிற்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரிகளை பொறுத்தவரை, எஸ்.எஸ்.என்., கல்லுாரி, திருவள்ளூர், ஆர்.எம்.கே., கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லுாரி, சோழிங்கநல்லுாரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லுாரி ஆகியவற்றை, அதிகம் தேர்வு செய்துஉள்ளனர். மாணவர்கள் இடங்கள் பெற்றுள்ள பல கல்லுாரிகள், தன்னாட்சி கல்லுாரிகள்.

பாடப்பிரிவு வாரியாக, கணினி அறிவியலை, 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்துஉள்ளனர். அரசு ஒதுக்கீட்டு கட்டணத்தில், கணினி அறிவியல் கிடைக்காதோர், சுயநிதி கல்லுாரிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.சுயநிதி கல்லுாரிகளிலும், கணினி அறிவியல் இடம் கிடைக்காதோர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவான, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவை உறுதி செய்துள்ளனர். மெக்கானிக்கல் உட்பட மற்ற பாடப்பிரிவுகள், மெதுவாகவே நிரம்புகின்றன.
விருப்ப பட்டியல் முக்கியம்

ஆன்லைனில் விருப்ப பதிவு செய்த மாணவர்களில் முதல் 3,000 இடங்கள் வரை தரவரிசை பெற்றவர்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தமுதல் 10 பாடப்பிரிவுகளுக்குள் கிடைத்துள்ளது. தரவரிசையில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 59வது விருப்ப பதிவு வரை இடங்கள் கிடைக்கவில்லை.ஒரு மாணவருக்கு அவர் பதிவு செய்த 60வது விருப்ப பாடமேகிடைத்துள்ளது. இதேபோல் 1,000 மாணவர்கள் வரை 30 முதல் 60வது விருப்பம் வரை பதிவு செய்த இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில் 175 முதல் 190 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருப்ப பதிவு நேற்று துவங்கியது. நாளை மாலை 5:00 மணிக்கு பதிவு முடிகிறது. இதில் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை அதிகம் பதிவு செய்வது நல்லது.அதேநேரம் தங்களின் கட் ஆப் மதிப்பெண் நிலவரத்துக்கு எந்த கல்லுாரி கிடைக்கும் என்பதை சரியாக கணித்து பதிவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
'ஹவுஸ் புல்' கல்லுாரி

முதல் சுற்றில் அண்ணா பல்கலையின் நேரடி மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் 2,080; அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில் 2,430 மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் 2,258 இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில் 18 பாடப்பிரிவுகளில் 241 இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அதிலும் சிவில் இன்ஜி., மற்றும் மெக்கானிக்கல் இன்ஜி., பாடப்பிரிவில் தமிழ் வழியில் தலா 60 இடங்கள் வீதம் 120 இடங்கள் உள்ளன.

ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா? ஒரு நபர் குழு ஆய்வு இன்று முடிகிறது

ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், 
ஜனவரி மாதம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது, 'கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 'அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்' என, அறிவித்தார். அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. 'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, இன்று கமிட்டி சார்பில், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு

பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், 
தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 
அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர் குழுவில் இடம் பெறுவர். 
விசாரணை : குழுவினர், ஒவ்வொரு பள்ளியின் அடிப்படை தேவை குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். 90 நாட்களுக்கு ஒருமுறை கூடி, பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும், இரு பள்ளிகளில் உணவு மாதிரிகளை எடுத்து, பாதுகாப்பு அலுவலர், ஆய்வு கூட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும்.ஏதேனும் பள்ளிகளில், தரமில்லாத உணவு தயாரித்திருப்பின், ஆய்வு கூட்டத்துக்கு பின், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

12th - Government Model Question Paper Published by TNSCERT