யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

இன்றைய (19.06.2017) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்"


110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.

அவை,

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.

* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு

* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.

பிறதுறை அறிவிப்புக்கள் :

* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.


* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர் பெயரில்
கட்டிடங்கள் கட்ட ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 

 புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசுகையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்  

Flash News:பள்ளிகளில் வை-பை வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்
அளித்துள்ளார்.

 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

SSA - 'INSPIRE AWARD' பதிவு செய்ய 30.06.2017 அன்று கடைசி நாளாகும் - இயக்குனர் செயல்முறைகள்

M.Phil Admission ( Part Time ) Notification | 2017 - 18

கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால்
ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும்? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.


இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

நில ஆவணத்தில் "ஆதார்" எண்ணை இணைக்காவிடில் "பினாமி" சட்டத்தின் கீழ் நடவடிக்கை!! - மத்திய அரசு!

CRC - PRIMARY & UPPER PRIMARY CRC- REG PROCEEDINGS.

UPPER PRIMARY CRC ON 01.07.2017& PRIMARY CRC ON 24.06.2017- திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

TRANSFER COUNSELLING FOR "BRTE" SOON

வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA

🌺 *இன்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்  ( ARGTA for BRTEs )* சார்பில்

✳ *தலைவர்  மா.ராஜ்குமார்*

✳ *மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன்*

✳ *மாநில பொருளாளர் நவநீதக்கிருஷ்ணன்*



ஆகியோர் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலருடன் இணைந்து நமது

✳ *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் (அ.க.இ) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இயக்குநர் (ப.க.து) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் ( மே.நி.க) அம்மா*

ஆகியோரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை அளித்தோம்.


✅  *SPD அய்யா* அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக படித்து நீண்ட நேரம்  கந்துரையாடல் மேற்கொண்டார். அதிவிரைவில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ARGTA நிர்வாகிகள் தங்களை சந்திக்க விருப்பப்படுவதை மாநில நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்று CONFERENCE HALL இல் அனைவரையும் பார்த்து கந்துரையாடினார். மேலும் CONVERSION &COUNSELING குறித்து 90 % பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை முடிந்ததும் அதிவிரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதியளித்த
*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✳ *மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அய்யா* அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✅ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் (மே.நி.க) அம்மா* அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க இரண்டாவதாக பெயர் பட்டியல் பாடவாரியாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

✳இன்று நிதி உதவி வழங்கிய மாவட்டங்கள்

✅ *திண்டுக்கள்       ₹53,500*
✅ *கரூர் ₹53,500*
✅ *வேலூர் ₹43,900*
✅ *தர்மபுரி ₹22,500*
✅ *இராமநாதபுரம் ₹20,000*
✅ *புதுக்கோட்டை ₹18,500*
✅ *விழுப்புரம் ₹11,500*
✅ *நீலகிரி ₹5,000*
✅ *பெரம்பலூர் ₹3,400*

✳ *இன்று சென்னைக்கு வருகைபுரிந்த ஒவ்வொரு மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*🙏🙏🙏🙏

🗣🗣🗣 *குறிப்பு புதியதாக தரம் உயர்த்தப்படும் உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்ட சில தினங்களுக்குள்ளோ /முன்னறோ நமது எண்ணம் நிறைவேறும்*🙏🙏🙏🙏


🙏 *STATE & DISTRICT  LEAVEL BEARERS,ARGTA.

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு !!

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாக்கி அதில் லட்சகணக்கானவர்களை குடியேற உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜூன் 16, 2017

நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது.

ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.


ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு ‘அஸ்கார்சியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார். அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சர்வதேச அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் மனு செய்து இருந்தனர்.
அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி காலனியில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளி நாடு உருவாக்க கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பபட உள்ளது. அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடை இருக்கும்.

தற்போது இந்த புதிய நாடு உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய நாடு விண்வெளியில் செலுத்தப்பட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக--வாசன் !!

பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றுதமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வ சிக்ஷா அபியான் (SSA) - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 
2012 ஆம் ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதில் 5,904பணியிடங்கள் - தொழிற்கல்விக்கும் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், தையல், தோட்டக்கலை, வாழ்க்கைக் கல்வி, கட்டிடப் பணி), 5,392 பணியிடங்கள் உடற்கல்விக்கும், 5,253 பணியிடங்கள் ஓவியப் பாடத்திற்கும் (கலை கல்வி) ஒதுக்கப்பட்டது.இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் பணி என்ற நியமனத்தில் மாதம் 12 நாட்கள் பணிபுரியும்போது மாதச் சம்பளமாக ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் மட்டுமே பள்ளிக்குச் செல்வதால் சம்பளம் போதுமானதல்ல என்ற நிலையில் கூடுதலாக வேறு பணிக்கு செல்ல முயற்சிக்கும் போது அதுவும் கிடைக்கவில்லை. மிக குறைவான சம்பளம் அவர்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும்போது அவர்களின் குடும்ப செலவிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.இச்சூழலில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், பல கட்டங்களில் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால் இதனையெல்லாம் தமிழக அரசு முக்கியப் பிரச்சினையாக கருதவில்லை என்பது வேதனைக்குரியது.

மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அப்பேற்பட்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போதிய ஊதியம் கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களின் நியாயமானகோரிக்கைகளை ஆளும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாமல், நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியபோது, 700 ரூபாய் ஊதிய உயர்வும், பணியிட மாறுதலும் வழங்குவதற்கு கையொப்பம் போட்டுவிட்டேன் என்று தெரிவித்தார்.ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சட்டப்பேரவைகூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை.

இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும் மத்திய அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. இதனை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' எண் நாளை(ஜூன்,20) வெளியீடு !!

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது.

இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம்.

ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.

67,000 அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனை அதிரடி!

சிறப்பாக பணியாற்றாதவர்களை கண்டறியும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை, அரசு துவக்கி உள்ளது.


மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர் களின் சேவைத் திறனை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.

அரசு தீவிரம்

இந்நிலையில், நாடு முழுவதும், மத்திய அரசு பணியில் உள்ள, 67 ஆயிரம் பேரின் சேவை தொடர்பான ஆவணக் குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுப்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம்.

இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களி டம் கூறியதாவது:மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களில், சேவையில் மெத்தனம் காட்டுபவர் களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடும் நடவடிக்கை

குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வராமை, தங்கள் பணிகளை குறித்த நேரத்தில்முடிக்காமல் காலந்தாழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீனங் கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி வரும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

நேர்மைக்கு ஊக்கம்!

மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர் கள் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும் என, அரசு விரும்புகிறது. ஊழியர்கள் ஊழல் செய் வதை மத்திய அரசு,துளிகூட பொறுத்து கொள்ளாது. அதேசமயம், நேர்மையான அதிகாரிகள், சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு, அரசு முன்னுரிமை அளிக்கிறது.

இதனால், அரசு ஊழியர்களின் பணித்திறன், அவ்வப் போது கடுமையான ஆய்வு களுக்கு உட்படுத்தப் படுகிறது. நேர்மையான ஊழியர்கள் ஊக்குவிக்கப் பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஆட்சியில், பணியிட மாற்றக் கொள்கை, சுற்றுலா செல்வ தற்கான சலுகைகள் உள்ளிட்ட
விஷயங்களில், விதிகள் கணிசமாக தளர்த்தப் பட்டுள்ளன.
அதேசமயம், ஊழியர்களின் பணித் திறனை ஆய்வு செய்து அறிந்து கொள்வதற் கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பதவி உயர்வுக்கான, ஊழியர் களின் தகுதியையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஜிதேந்திரா சிங் கூறினார்.

கட்டாய ஓய்வு!

கடந்த ஒரு ஆண்டில், பணியில் மெத்தனமாக இருந்த, திறன் குறைவான, மத்திய அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 129 பேருக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விதிப்படி, ஒரு ஊழியரின் பணித்திறன், அவரது சேவைக் காலத்தில், இரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

பணியில் சேர்ந்து, 15 ஆண்டுக்கு பின் ஒரு முறையும், 25 ஆண்டுக்கு பின், மற்றொரு முறையும், ஊழியரின் சேவைத் திறன் சோதிக்கப்படுகிறது.நாடு முழுவதும், 48.85 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் இருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்தது: சுவிஸ் வங்கி அறிவிப்பு!

சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள், குறைந்தளவே கணக்குகள் வைத்திருப்பதாக, சுவிஸ் நாட்டை சேர்ந்த, தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத் துள்ள கறுப்புப்பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளது குறித்த
விபரங்களை அளிப்பதற்கான ஒப்பந்தம், அந்நாட்டு அரசுடன் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த முடிவை, சுவிஸ் அரசு, சமீபத்தில் உறுதிப்படுத்தியது. வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கணக்குவிபரங்களை அளிப்பதற்கு, அவற்றின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, சுவிஸ் தனியார் வங்கிக ளின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:

சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளை ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகள் மிகக்குறைவு.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு துவக்குவதை விட, ஆசியாவில் நிதி மையங்களாக திகழும் நாடுகளில், இந்தியர்கள் வங்கிக் கணக்கு துவக்குவது சுலபம்.

சமீப காலமாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக குறைந்து வருகின்றன. 2015ம் ஆண்டு, இறுதி நிலவரப் படி, சுவிஸ் வங்கிகளில், 8,392 கோடி ரூபாய் மட்டுமே, இந்தியர்களின் முதலீடாக உள்ளது. இருப்பினும், பிற நாடுகளில், இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு!!!

ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்க ளுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் வெவ்வேறு நிற ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான 
தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன், மனு தாக்கல் முடிகிறது.

இந்த தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து மாநில, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட உள்ளனர். ஓட்டுச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எம்.பி.,க்களுக் கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், வெவ்வேறு நிறத்தில் ஓட்டுச் சீட்டு வழங்கப்பட உள்ளன.

இது பற்றி தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், 28ல் முடிகிறது. தே.ஜ., கூட்டணியும், எதிர்க் கட்சிகளும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, மனுவை யாரும் வாபஸ் பெற வில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் நடத்து வதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கும். எம்.பி.,க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.,க் களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்.
அருணாச்சல், பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், ம. பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கான ஓட்டுச் சீட்டுகளில், வேட்பாளர்களின் பெயர் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஹிந்திக்கு பதில், தங்கள் மாநில மொழியில் அச்சடிக்க கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், இந்த ஓட்டுச்சீட்டுகள் மட்டும், அந்தந்த மாநில மொழிகளில் அச்சடிக்கப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஹரியானாவில், 'இங்க்' பிரச்னை ஏற்பட்டது. அதனால், இம்முறை, 'சிறப்பு பேனா'க்கள் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஓட்டளிக்க செல்லும் போது, ஓட்டுச்சாவடியில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் இந்தப் பேனா வழங்கப்படும். இந்தப் பேனாவை பயன்படுத்தி தான் ஓட்டளிக்க வேண்டும்.

எம்.பி., யின் ஓட்டு மதிப்பு, 708 ஆக இருக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம், மக்கள் தொகைக்கு ஏற்ப மாறும். லோக்சபாவின், 543 எம்.பி.,க்கள், ராஜ்ய சபாவின், 233எம்.பி.,க்கள், அனைத்து மாநிலங் களிலும் உள்ள, 4,120 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

அந்தந்த மாநில தலைமை செயலகங்கள் மற்றும் பார்லிமென்ட் வளாகத்தில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும், டில்லிக்கு எடுத்து வரப் பட்டு, அடுத்த மாதம், 20ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ரொக்க மாகவே செலுத்த வேண்டும்:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செய் வதைமத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புப வர்கள், டிபாசிட் தொகையைான, 15 ஆயிரம் ரூபாயை, ரொக்கமாகவே செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தல் விதிப்படி, வேட்பு மனுதாக் கல் செய்பவர்கள், தேர்தல் அதிகாரியிடம், மனு தாக்கல் செய்யும் போதே, டிபாசிட் தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரியுடன், வங்கி அதிகாரி ஒருவரும் இருப்பார்.
அவர், பணத்தை வாங்கி, எண்ணி சரிபார்ப்பார். ரிசர்வ் வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு, அதன் ரசீதை, தேர்தல் அதிகா ரியிடம் வேட்பாளர்கள் வழங்க லாம். ஆனால், மின்னணு முறையிலோ, காசோலையாகவோ டிபாசிட் தொகையை செலுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்..

சர்வதேச யோகா தினத்தில் 92,000 கைதிகள் பயிற்சி!!!

சர்வதேச யோகா தினமான, 21ல், உ.பி., மாநில சிறைகளில் கைதிகளாக உள்ள, 92 ஆயிரம் பேர், யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும், 21ல் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடக்கும், உ.பி.,யில் உள்ள சிறைகளில், 92 ஆயிரம் கைதிகள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி, சிறைக் கைதிகளுக்கு, யோகா பயிற்சிகள் அளிக்கும் வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து, உ.பி., மாநில சிறைத்துறை இணையமைச்சர் ஜெய்குமார் சிங் ஜெய்கி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சர்வதேச யோகா தினத்தன்று, உ.பி., முழுவதும் உள்ள சிறைகளின் வளாகங்களில், 92 ஆயிரம் கைதிகள் பல்வேறு யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர். யோகா பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவதன் மூலம், சிறைக் கைதிகளை மனதளவிலும், உடலளவிலும் சிறந்தவர்களாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.யோகா பயிற்சி செய்வதால், கைதிகளின் கவன சக்தி படிப்படியாக அதிகரிக்கும்; தற்கொலை எண்ணம் மறையும். யோகா நிபுணர் மேற்பார்வையில், கைதிகள், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாநிலம் முழுவதும், சைக்கிள் யாத்திரை நடத்தி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட, சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது

அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை !!

சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் .

"மாணவர்களுக்குக் கல்விகடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

பல நூறு தொடக்கப் பள்ளிகள் மூடி வரும் நிலையில் 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றமே. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆரம்பப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை 10,000-க்கும் மேற்பட்ட தேவைப்பணி இடங்களும், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களும் இருக்கின்றன. ஆனால் 4,084 காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார் அமைச்சர். இதைப்போலவே, 60,000-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 17,000 பணியிடங்கள் நிரந்தரப்பணியிடங்களாக மாற்றப்படும் என்ற அறிவித்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும், இன்னும் 43,000க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்பணியிடங்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செயல்வழிக்கற்றல் அட்டைகளுக்கு 31.82 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதுவரை அரசால் சமச்சீர் கல்வியைத் தனியார் பள்ளிகளில் அமல்படுத்த முடியவில்லை. இதைப்போலவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வழங்குவது போல் செயல்வழிக்கற்றல் அட்டைகளை சுயநிதிப்பள்ளிகளிலும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கமுடியவில்லை என்றால் பொதுக்கல்வியைப் பாதுகாக்க முடியாது.

பகுதி நேரக் கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறும் அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வோம் என்ற அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.  விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் இல்லை.


பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். பென்சன் திட்டம் குறித்த ஆலோசனை குழு அறிக்கை தயாரித்து ஆலோசனைகளை ஏற்கெனவே வழங்கி விட்டது. இந்த நிலையில் பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். அதுவும் வெளியாகவில்லை. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் புதிய பென்சன் திட்டம் முற்றிலும் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதைப்போலவே, தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துவார்கள் என்ற அறிவிப்பு எதிர்நோக்கி இருந்த ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஊதியக்குழு கால தாமதம் ஆவதைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதுவும் அறிவிக்கப்படவில்லை. மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய அமைச்சர் ஆசிரியர்களின் நலன்கள் மீதும் அக்கறை காட்டி அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தால் பலத்த கரவேஷங்களோடு வரவேற்பு இருப்போம்" என்கிறார் .

பள்ளிகளில் இலவச வை-ஃபை !!

தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இலவசமாக வை-ஃபை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் 
தெரிவித்துள்ளார். இந்த  வை-ஃபை வசதியை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி: அமைச்சர் தங்கமணி தகவல் !!

அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 கோடி மதிப்பில் அலுவலக 
குடியிருப்பு அமைக்கப்படும் என்றும் சூரிய மின் சக்தி நீர் பம்புகள் மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி கூறியுள்ளார்

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்

*ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்.

*ஜிஎஸ்டி மசோதாவை பொறுப்புக்குழுவிற்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும்: ஸ்டாலின்.


*ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

*ஜி.எஸ்.டி. மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு !!

                                                          
பீகார் மாநில ஆளுநராக இருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.


*தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு.

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

*பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் முறைப்படி அறிவித்தார். குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார்.


பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானி அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரில் யாரேனும் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதற்கு சாத்தியங்கள் குறைவாக உள்ளது தெரிந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 71 வயதான ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிரமாக இயங்கிய அவர், இருமுறை ராஜ்ய சபா எம்.பியாகவும், பாஜகவின் எஸ்.சி பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பீகார் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார்.

பழங்குடியின மக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்; சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.


 *மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20கணினிகள் வழங்கப்படும்; உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் & இதர பணிகள் ரூ.39 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.



 *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.


*7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலை உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்- முதலமைச்சர்.


*எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் பெயரில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு புதிய கட்டடம்.


 *268 புதிய பாடப்பிரிவுகள் 2017-2018 ம் ஆண்டு தொடங்கப்படும்; இதற்காக  660 பேராசிரியர் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.


 *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல் குளம் கட்டப்படும் - முதலமைச்சர்.


 *உயர் கல்வித்துறை அறிவிப்புகள் : 40 கலை & அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப் படும்.


 *3090 கிராமப்புற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் SmartClass ஏற்படுத்தப்படும்.


*தமிழகத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


*அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ.40 கோடி செலவில் விரல் ரேகை அச்சுப்பொறி வழங்கப்படும்.


 *கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறு வணிகக்கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு !! Posted: 19 Jun 2017 06:58 AM PDT ஜனவரி* 01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம். 05 - உலக டீசல் எந்திர தினம் 06 - உலக வாக்காளர் தினம் 08 - உலக நாய்கள் தினம் 09 - உலக இரும்பு தினம் 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க தினம் 27 - World Fuckers Day 30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம் 30 -தியாகிகள் தினம் *பிப்ரவரி* 01 - உலக கைப்பேசி தினம் 03 - உலக வங்கிகள் தினம் 14 - உலக காதலர் தினம் 15 - உலக யானைக்கால் நோய் தினம் 19 - உலக தலைக்கவச தினம் 24 - தேசிய காலால் வரி தினம் 25 - உலக வேலையற்றோர் தினம் 26 - உலக மதுபான தினம் 28- தேசிய அறிவியல் தினம் *மார்ச்* 08 - உலக பெண்கள் தினம் 15 - உலக நுகர்வோர் தினம் 20 - உலக ஊனமுற்றோர் தினம் 21 - உலக வன தினம் 22 - உலக நீர் தினம் 23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 24 - உலக காசநோய் தினம் 28 - உலக கால்நடை மருத்துவ தினம் 29 - உலக கப்பல் தினம் *ஏப்ரல்* 01 - உலக முட்டாள்கள் தினம் 02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம் 05 - உலக கடல் தினம் 05 - தேசிய கடற்படை தினம் 07 - உலக சுகாதார தினம் 12 - உலக வான் பயண தினம் 15 - உலக பசும்பால் தினம் 18 - உலக பரம்பரை தினம் 22 - உலக பூமி தினம் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம் *மே* 01 - உலக தொழிலாளர் தினம் 03 - உலக சக்தி தினம் 08 - உலக செஞ்சிலுவை தினம் 09 - உலக கணிப்பொறி தினம் 11 தேசிய தொழில் நுட்ப தினம் 12 - உலக செவிலியர் தினம் 14 - உலக அன்னையர் தினம் 15 - உலக குடும்ப தினம் 16 - உலக தொலைக்காட்சி தினம் 18 - உலக டெலஸ்கோப் தினம் 24 - உலக காமன்வெல்த் தினம் 27 - உலக சகோதரர்கள் தினம் 29 - உலக தம்பதியர் தினம் 30 - உலக முதிர்கன்னிகள் தினம் 31 - உலக புகையிலை ஒழிப்பு தினம் *ஜீன்* 01 - உலக டயலசிஸ் தினம் 02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏 04 - உலக இளம் குழந்தைகள் தினம் 05 - உலக சுற்றுப்புற தினம் 10 - உலக அலிகள் தினம் 18 - உலக தந்தையர் தினம் 23 - உலக இறை வணக்க தினம் 25 - உலக புகையிலை தினம் 26 - உலக போதை ஒழிப்பு தினம் 27 - உலக நீரழிவாளர் தினம் 28 - உலக ஏழைகள் தினம் *ஜீலை* 01 - உலக மருத்துவர்கள் தினம் 08 - உலக யானைகள் தினம் 10 - உலக வானூர்தி தினம் 11 - உலக மக்கள் தொகை தினம் 14 - உலக மஞ்சள் தினம் (Turmeric) 16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை) *ஆகஸ்ட்* 01 - உலக தாய்ப்பால் தினம் 03 - உலக நண்பர்கள் தினம் 06 - உலக ஹிரோஷிமா தினம் 09 -வெள்ளையனே வெளியேறு தினம் 09 - உலக நாகசாகி தினம் 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 29 - உலக தேசிய விளையாட்டு தினம் 30 - மாநில விளையாட்டு தினம் *செப்டம்பர்* 05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 06 - ஹிந்தி தினம் 07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி) 08 - உலக எழுத்தறிவு தினம் 10 - உலக பேனா தினம் 12 - உலக மின்சார தினம் 13 - உலக மாலைக்கண் நோய் தினம் 16 - உலக ஓசோன் தினம் 18 - உலக அறிவாளர் தினம் 20 - உலக எழுத்தாளர்கள் தினம் 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம் 25 - உலக எரிசக்தி தினம் 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம் 27 - உலக சுற்றுலா தினம் 28 - உலக எரிமலை தினம் 29 - உலக குதிரைகள் தினம் *அக்டோபர்* 01 - உலக மூத்தோர் தினம் 02 - உலக சைவ உணவாளர் தினம் 04 - உலக விலங்குகள் தினம் 05 - உலக இயற்கைச் சூழல் தினம் 08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம் 08 இந்திய விமானப்படை தினம் 09 - உலக தபால் தினம் 16 - உலக உணவு தினம் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம் 30 - உலக சிந்தனை தினம் *நவம்பர்*🛏 14-குழந்தைகள் தினம் 18 - உலக மனநோயாளிகள் தினம் 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம் 26 - உலக சட்ட தினம் 27 - உலக காவலர்கள் தினம் 28 - உலக நீதித்துறை தினம் *டிசம்பர்*🛏🛏 01 - உலக எய்ட்ஸ் தினம் 02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம் 10 - உலக மனித உரிமைகள் தினம் 14 - உலக ஆற்றல் தினம் 15 - உலக சைக்கிள் தினம் 23 - விவசாயிகள் தினம் 25 - திருச்சபை தினம் www.sstaweb.com அனைத்து தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி ?

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில்  உணவு உண்ணும் மாணவர் 32 எனில்

MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
 என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..

நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்

MDM A20 B36 C00
(MDMspaceA20spaceB36spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
 குறுஞ்செய்தி இலவசம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..! என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் பாலசந்தர்.
"மாணவர்களுக்குக் கல்விக்கடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

பி.இ. சேர்க்கை: நாளை சமவாய்ப்பு எண் வெளியீடு

பி.இ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு (ரேண்டம்) எண் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 22) தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும்.
தமிழகம் முழுவதும் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன. இதில் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ. இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27 -ஆம் தேதி தொடங்க உள்ளது.

கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகுமா?

இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்நிலையில், கவுன்சிலிங் தாமதத்தாலும், விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா என்ற சந்தேகம் காரணமாகவும், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர் . ஆனால், அவர்களால், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம், இந்த ஆண்டு, இன்னும் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடவில்லை. இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், பல்கலை தேர்வுத் துறையும் இணைந்து, இந்த பட்டியலை வெளியிட வேண்டும்.

ஆனால், பல்கலை தரப்பில் கால தாமதம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது. அதனால், சரியான கல்லுாரிகளை தேர்வு செய்ய முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்

11TH BLUE PRINT REGARDING: பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'



பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். ஆனால், தற்போது பள்ளிகளில் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கான, வினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவியரின் சீருடை நீக்கப்பட்ட கொடூரம்:

பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவியரின் சீருடைகளை கழற்றி, அவர்களை ஆசிரியை வெளியே அனுப்பிய சம்பவம், பீஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்தவர், சுன்சுன் சாஹ். இவருக்கு, 7 மற்றும் 6 வயதில், இரண்டு மகள்கள். இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில், இரண்டு மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, இரண்டு குழந்தைகளுக்கும், பள்ளி நிர்வாகமே, சீருடை வழங்கியது. அதற்கான தொகையை உடன் செலுத்தும்படி, குழந்தைகளின் தந்தை, சுன்சுன் சாஹிடம், பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
அவரால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில், இரண்டு குழந்தைகளும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வர, சுன்சுன் சென்றார். அப்போது, சீருடைக்கான பணத்தை செலுத்தும்படி, சுன்சுன் சாஹிடம், ஆசிரியை ஒருவர் கூறினார்.

'என்னிடம் இப்போது பணமில்லை. சில நாட்கள் அவகாசம் கொடுங்கள்; பணத்தை செலுத்தி விடுகிறேன்' என, சுன்சுன் கெஞ்சினார். இதற்கு, ஆசிரியை மறுப்பு தெரிவித்தார். மேலும், பலர் முன்னிலையில், மாணவியர் இருவரும் அணிந்திருந்த சீருடையை கழற்றிய ஆசிரியை, அவர்களை, பள்ளியிலிருந்து அழைத்து செல்லும்படி கூறினார்.
அதிர்ச்சியடைந்த சுன்சுன் சாஹ், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளியின் முதல்வர் மற்றும் சீருடையை கழற்றிய ஆசிரியையை கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து, மாநில கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரி கூறுகையில், ''நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஜி.எஸ்.டி., பற்றி கேள்வி

சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வில், ஜி.எஸ்.டி., பற்றியும், மோடி அரசின் திட்டங்கள் பற்றியும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, ஆண்டுதோறும் மூன்று பிரிவாக நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, நேற்று நடந்தது. இந்த தேர்வை எத்தனை பேர் எழுதினர் என்ற விபரத்தை யு.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை. இந்த தேர்வில், ஜூலை முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி., குறித்தும், மத்திய மோடி அரசின் திட்டங்கள் குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

மேலும், மோடி அரசின் பினாமி சட்டம், வித்யாஞ்சலி யோஜனா உட்பட பல திட்டங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

நவ.19-ல் 'நெட்' தகுதித்தேர்வு: ஜூலை 24-ல் விரிவான அறிவிப்பு வெளியாகும்:

இலக்கியம் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான 'நெட்' தகுதித்தேர்வை யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் என 2 தடவை நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டிய 'நெட்' தேர்வு நடைபெறவில்லை.இந்த நிலையில் 'நெட்' மற்றும் ஜெஆர்எப் தகுதித்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 'நெட்' தேர்வு தொடர்பான விரிவான அறிவிப்பு ஜூலை மாதம் 24-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் ஆகஸ்டு 1 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

CBSC 12TH EXAM RELATED NEWS:

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வில் 'பெரும் குளறுபடி' - மாணவ மாணவிகள் 'கடும் அதிர்ச்சி'!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.-யின் 12-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளன. இதனால், தேர்வு எழுதி மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12-ம் வகுப்பு
 சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி நாடுமுழுவதும் வௌியாகின. தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு முடிவுகள்வந்துவுடன் மறுகூட்டல் மற்றும் மறு மதிபீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் மறுகூட்டல் மட்டுமே செய்ய முடியும், மறுமதிப்பீடு என்பது நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றபின் செய்யலாம்..