யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

சர்வதேச யோகா தினத்தில் 92,000 கைதிகள் பயிற்சி!!!

சர்வதேச யோகா தினமான, 21ல், உ.பி., மாநில சிறைகளில் கைதிகளாக உள்ள, 92 ஆயிரம் பேர், யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும், 21ல் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடக்கும், உ.பி.,யில் உள்ள சிறைகளில், 92 ஆயிரம் கைதிகள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி, சிறைக் கைதிகளுக்கு, யோகா பயிற்சிகள் அளிக்கும் வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து, உ.பி., மாநில சிறைத்துறை இணையமைச்சர் ஜெய்குமார் சிங் ஜெய்கி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சர்வதேச யோகா தினத்தன்று, உ.பி., முழுவதும் உள்ள சிறைகளின் வளாகங்களில், 92 ஆயிரம் கைதிகள் பல்வேறு யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர். யோகா பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவதன் மூலம், சிறைக் கைதிகளை மனதளவிலும், உடலளவிலும் சிறந்தவர்களாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.யோகா பயிற்சி செய்வதால், கைதிகளின் கவன சக்தி படிப்படியாக அதிகரிக்கும்; தற்கொலை எண்ணம் மறையும். யோகா நிபுணர் மேற்பார்வையில், கைதிகள், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மாநிலம் முழுவதும், சைக்கிள் யாத்திரை நடத்தி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட, சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக