யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/6/17

11TH BLUE PRINT REGARDING: பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'



பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். ஆனால், தற்போது பள்ளிகளில் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கான, வினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக