யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/8/16

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மே, ஜுன் மாதங்களில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவன இளங்கலை, முதுகலை படிப்புகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் படிப்புகள் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பு களுக்கான தேர்வுகளின் முடிவுகள் 29-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் படும். 
தேர்வெழுதிய மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். www.ideunom.ac.in, www.unom.ac.inமறு மதிப்பீட்டுக்கு, உரிய தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 8-ம் தேதி ஆகும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிப்பு: வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

தமிழக வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் முடிந்துள்ளது.
அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில், 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவுகள் அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடமும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததால், புதிய வாக்காளர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதனால், 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவை தேர்தல் போல், வாக்காளர் பட்டியல் தொடர்பான குழப்பம் இதிலும் வந்துவிடக் கூடாது என்பதால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரி தகவல்

இது தொடர்பாக, தேர்தல் துறை அதிகாரி ஒருவர் ‘ தி இந்து’விடம் கூறியதாவது:தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 3.75லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்டியல், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்கள், இந்த பட்டியலில் உள்ள பெயர்களை மீண்டும் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் எந்தஇடத்தில் தற்போது இருக்கிறார் என்பதை உறுதி செய்து, மற்றொரு இடத்தில் இருக்கும் பெயர் அவரது அனுமதியுடன் நீக்கப்படும். தொடர்ந்து இந்த பணிகள் நடக்கும். புதிய வாக்காளர்கள் வழக்கம் போல், இணையதளத்தில் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். அதுபோல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்

அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர். தமிழக அரசின் பல பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.
இவர்களை, பணி நிரவல் என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

l பள்ளியில், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.

கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர் மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும், அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

TRB:ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இப்பணி களுக்கு விண்ணப்பித்தவர்களில் 194 பேரின் விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதியின்மை, அதிக வயது, விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாமை உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள் ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிராக ரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியலை பெயர் மற்றும் நிரா கரிப்புக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கெடு.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழங்குடியின நலத்துறை சார்பில் பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 40 நாள்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி நடைபெறும் 40 நாள்கள் உணவு வழங்கப்படுவதுடன், பயிற்சிக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, ஜாதி, பட்டப்படிப்புக்கான சான்று, ஆதார் அடையாள அட்டை எண் உள்ளிட்ட சான்றுகளுடன் பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி மின் அஞ்சல் மூலம் tntribalwelfare@yahoo.com என்ற முகவரிக்கு வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப்அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை.

 எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்:

Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.

இருந்தாலும் ஃபேஸ்புக்கின் இந்த நிலை பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.