யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி : விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது, என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யும்படி, தமிழக பள்ளி கல்வித்துறை
செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  இந்தவழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:

பள்ளிகளில்கழிப்பறை வசதி எப்படி உள்ளதுஎன்பது குறித்து, ப்ள்ளி கல்வித்துறை செயலர்தாககல் செய்த அறிக்கை போதியஅளவில் இல்லை. 44 லட்சம் மாணவர்களுக்கு 42 ஆயிரம்கழிப்பறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வி செயலர் விரிவானஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும், 18ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடக்கக் கல்வி - பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு - பேரிடர் மேலாண்மைக் குழு அமைப்பு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்த செயல்முறைகள்


 

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்தியஅரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவயோஜனா’ என்ற புதிய திட்டத்தைஅறிமுகப்படுத்தி
உள்ளது. டில்லியில், நேற்றுமுன்தினம், திறன் மேம்பாடு மற்றும்தொழில் முனைவு துறை அமைச்சர்ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடு நடைபெற்றது.


பெரும்பான்மைமாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்றஇந்த மாநாட்டில், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான தொழில் முனைவோர் பயிற்சித்திட்டத்தை, ராஜீவ் பிரதாப் ரூடிஅறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்குதொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் புதியதிட்டத்தின் கீழ், அடுத்த ஐந்துஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்வி மையங்களில், இந்தபயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ., பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர் பயிற்சியைவெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில் இளைஞர்களுக்கு, மேலும் அதிக வேலைவாய்ப்புகளைஉருவாக்கும் நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 2,200 கல்லுாரிகள், பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்திய தொழிற்கல்வி மையங்கள், 50 தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாக தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில் முன்னோடிகளின் ஆலோசனைகள்உட்பட, தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம். தேசிய மற்றும் சர்வதேசதரத்திலான தொழில் முனைவோர் கல்விப்பயிற்சி, இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர் திறன் மேம்பாட்டுதிட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநிலஅரசுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிமையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சி சாதனங்களின்தரம் உள்ளிட்டவை தொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய அரசின்திட்டங்கள், அதகளவில், முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்க உதவும். இவ்வாறு அவர்கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாகசெயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட, முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள் வழங்கப்படும்என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரைச் சந்தித்து மனு.

23/08/2010  க்குப் பிறகு அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளிகளில்முறையான கல்வித் தகுதிகளுடன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக்கல்வி உரிமை சட்ட
அடிப்படையில்TET நிபந்தனைகளை கூறி பணியை தொடரஅனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருசில பணப் பயன் மறுக்கப்பட்டநிலையில்  பணியில்உள்ள இந்த ஆசிரியர்கள் பணிநிபந்தனை காலம் வரும் நவம்பர்15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.

ஆசிரியர்தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும் பட்சத்தில்  சுமார்மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழக அரசால் பாதுகாக்கப்படும்.


இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகுதமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின்மாநிலம் தழுவிய பிரதிநிதிகள் சந்தித்துமனு கொடுத்து  உள்ளனர்.


இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்விஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும் அவர்களின்ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்


மிகவும்பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர்.


மாண்புமிகுதமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டுசெல்லப் பட்டு விரைவில் பணியில்உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்லதீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்டஆசிரியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

TNPSC : Group 1 syllabus

200% PENALTY என்பது எவ்வளவு : வங்கிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும்போது எவ்வளவு தொகைக்கு எவ்வளவு வரி பிடித்தம் செய்வார்கள் ..???

SR verification form for digitalization of SR

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் இனி எப்படி தேர்ந்தெடுக்க போகிறார்கள்?

ஆசிரியர்தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும்பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவிவருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும்குழப்பம் அடைந்துள்ளனர். எனவே
தற்போதைய உண்மைநிலை என்ன என்பதை பற்றிஎடுத்துரைக்க இந்த கட்டுரையை நண்பர்களுக்குவெளியிடுகிறோம்.

ஆசிரியர்தகுதித்தேர்வு என்பது இந்திய அரசின்மூலம் இயற்றபட்ட கட்டாய கல்விச்சட்டப்படி இத்தேர்வுஎழுதுவது ஆசிரியர்களுக்கு கட்டாயம்.

இதனை தமிழக அரசு நேரடியாககொண்டுவரவில்லை ஒரு சில மாநிலங்களைதவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் இவைநடைமுறையில் உள்ளது. எனவே NCERT விதிகள்படி ஆசிரியர் தகுத்தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள்வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வுபோன்றவற்றை அறிவித்துள்ளது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதைநீங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன்ஒப்பிட்டால் தெரியும்.
தமிழகத்தில்ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் இனிதேர்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில்ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்து வந்த பாதைஅனைவரும் அறிந்ததே வெயிட்டேஜ் முறை மற்றும் மதிப்பெண்தளர்வு குறித்த இரு வேறுவழக்கில் மதுரை கிளை மற்றும்சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு திர்ப்பைவழங்கியதால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்தவழக்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்புவெளியிடப்பட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில்வெயிட்டேஜ் முறை உண்டு மற்றும்5% மதிப்பெண் தளர்வு உண்டு அதாவது82 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் தேர்ச்சிபெற்றவர்கள் என்று தமிழக அரசுஅறிவித்த GO Ms. 71 மற்றும் GO Ms. 25 ஆகிய அரசாணைகள் செல்லும்இதன் மூலம் 2013 ல் நடைபெற்ற ஆசிரியர்தகுதித்தேர்வில் 55% மதிப்பெண் பெற்றால் போதும் என்று உச்சநீதிமன்றம்மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தமிழகஅரசு எடுக்கும் முடிவே இறுதி எனவும்உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது,
குழப்பம்
தற்போதுவிகடன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கடந்த தேர்வில் 60% மதிப்பெண்பெற்றவர்கள் மூலம் ஆசிரியர் தேர்வுசெய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்தபேட்டி அளித்தவரை தொடர்பு கொண்டபோது எனசெய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இவை ஆசிரியர்தேர்வு வாரியம் அனைத்து பத்திரிக்கைகளுக்கும்அளித்த பேட்டி இல்லை மேலும்இவை அதிகாரபூர்வ தகவல் இல்லை அதாவது55% மதிப்பெண் தளர்வு கொண்ட GO Ms.25 அரசாணைதற்போது நடைமுறையில் உள்ளது வேறு எந்தபுதிய அரசாணையும் இல்லை இது குறித்துஅதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லைஎனவே குழப்பம் தேவையில்லை 82 மதிப்பெண் மேல் 2013 ல் பெற்றவர்கள் தேர்ச்சிபெற்றவர்களே என்பதில் எந்த சந்தேகமும் குழப்பமும்தேவையில்லை... இனி வரும் தேர்வுக்கும்55% மதிப்பெண் போதும்.
விரைவில்ஆசிரியர் தகுதித்தேர்வு
இன்னும்ஒரு வாரம் அல்லது இந்தமாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அறிவிப்பு வரும் அதில் 55% (82) மதிப்பெண்பெற்றால் போதும் என்றே அறிவிப்புவரும் என்பதை எதிர்பார்க்கலாம் மேலும்வெயிட்டேஜ் உண்டு இவை நீதிமண்றங்களின்உத்தரவுப்படி வெளியிட்டுள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. நவம்பர் மாதத்துடன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் விரைவில் அறிவிக்கபடலாம் கேள்வித்தாள் மிக எளிமையாக அமையவாய்ப்பு உள்ளதால் அதிக மதிப்பெண் பெறமுயற்சிக்கவும். தற்போது இருந்தே படிக்கவும்.
இப்படிக்கு

கார்த்திக்பரமக்குடி

SCERT - 1 முதல் 10ம் வகுப்பு வரை, திங்கள் முதல் வெள்ளி முடிய நடத்தவேண்டிய தேர்வுகளின் வினாத்தாள்...இயக்குநர் செயல்முறைகள்.

ரத்தாகப் போகிறது புதிய பென்ஷன் திட்டம் ..அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி -காவிரிக்கதிர் பத்திரிக்கை செய்தி

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

கறுப்புபணம், கள்ள நோட்டு பிரச்னைக்குதீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடைசெய்த மத்திய அரசு, அடுத்தஅதிரடியாக, சொத்து
பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளைஆராய துவங்கி உள்ளது.


கறுப்புபணம், கள்ள நோட்டு புழக்கத்தைகட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன, மத்திய அரசு அறிவித்துஉள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம்என கூறப்படுகிறது.


சொத்துபத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதைகட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவுஅசையா சொத்து உள்ளது என்பதைகண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக


கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத்துக்காக உருவாக்கப்பட்ட, வரைவு விற்பனை பத்திரநகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும், ஆதார் மற்றும் பான்எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக் கப்பட்டு உள்ளது.


பரிமாற்றத்துக்குவரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்துயார் பெயருக்கு செல்கிறது என்பது, இதனால் வெளிச்சத்துக்குவந்துவிடும்.


இதேபோலபரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர்பெயரில் நீண்ட காலமாக இருக்கும்சொத்துக்களின் பத்திரங்களி லும், ஆதார் எண்களைசேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்தியஅரசு தயாராகி வருகிறது.


விற்பவர், வாங்குபவரின் நிலவரத்தை ஆதார் எண்ணை பயன்படுத்திகண்காணிக்க இது உதவ லாம். மேலும் விற்பனைக்கு வராத சொத்துக்களை, கணக்கில்கொண்டுவரும் முயற்சியாக, அதிலும் ஆதார் எண்சேர்ப்பதை கட்டாயமாக்க போவதாக தெரிகிறது.


இதுகுறித்து, சட்ட வல்லுனரும், கேரள அரசின் ஆலோசகருமானஷியாம் சுந்தர் கூறியதாவது:


சொத்துபத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதில்,சில நடைமுறை சிக்கல்கள்இருக்கின்றன. ஆனாலும்,


ஒவ்வொருசொத்துக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்குவது, அரசின் நோக்கத்தை நிறைவேற்றும். சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், பகுதி, பதிவு செய்யப்பட்ட ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பிரத்யேக எண் இருக்க வேண்டும்.



கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இத்திட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டாதது, முறைகேடுகளுக்குவழிவகுப்ப தாக உள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.

EMIS' இணையதளத்தில் ஏகப்பட்ட தகவல் 'மிஸ்'

EMIS' இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின்தகவல்களை அடிக்கடி அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வுநடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர, ஆதார்எண் சேகரிக்குமாறு, அரசுத் தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதை, இம்மாத இறுதிக்குள்சேகரித்து, தகவல் பதிவு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகபுலம்புகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி தகவல்மேலாண்மை மையம் (எமிஸ்) என்றதிட்டம், கடந்த, 2012ல் துவங்கப்பட்டது.இதில், அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர், வயது, ரத்தவகை, ஆதார் எண் உள்ளிட்டஅனைத்து தகவல்களும் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

இதற்கு, பள்ளி வாரியாக பிரத்யேக, பயனர்பெயர், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை, கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே, ஒருங்கிணைத்து பார்வையிட முடியும். ஆனால், ஆன்லைன் பதிவேற்றம்செய்வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின்தகவல்கள் முழுமையாக திரட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால், அனைத்து கல்வி சார் செயல்பாடுகளுக்கும், மாணவர்களின் தகவல்களை அளிக்குமாறு, அடிக்கடி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இதை திரட்டி அனுப்ப, ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.
தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும்14ம் தேதி, முன் அரையாண்டுதேர்வுகள் துவங்கவுள்ளன. இதற்கு பின், டிச., 7ம் தேதி, அரையாண்டு தேர்வுநடக்கிறது.தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் என, ஆசிரியர்கள் 'படுபிசி'யாக சுழன்று கொண்டிருப்பர். இந்நேரத்தில், ஆதார் எண் சேகரிக்குமாறுஉத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்சிலர் கூறியதாவது:மாணவர்களின் ஆதார் எண், எமிஸ்இணையதளத்தில் உள்ளது. இதை, கல்வித்துறைஅதிகாரிகள் முறையாக, 'அப்டேட்' செய்யாததால், பள்ளிகளில் இருந்து அடிக்கடி தகவல்அளிக்க உத்தரவிடுகின்றனர்.

தேர்வுநேரத்தில், ஆதார் எண் சேகரித்தல், அட்டை இல்லாத மாணவர்களுக்கு முகாம்நடத்துதல் என, புதிய உத்தரவுகளைபிறப்பித்துள்ளனர்.இணைய வசதியில்லாத பள்ளிகளில், தனியார் பிரவுசிங் சென்டர்களை தேடி சென்று, தகவல்களைபதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்றதகவல் சேகரிப்பு பணிகளை, கல்வியாண்டு துவங்கும்போதே, முறையாக திட்டமிடாமல், அவசரகதியில்குறுகிய கால அவகாசத்தில் செய்வதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இனிவரும்காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை திணிக்காமல்இருக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப்பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர்பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர்பணியிடங்கள், 30 மாவட்ட
கல்வி அலுவலர்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஎதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையேஎழுந்துள்ளது.
இதுகுறித்துதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கமாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்திகூறியது:
பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல்கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம்கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும்புதியப் பாடத் திட்டம் அகிலஇந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு(நீட்) போன்ற போட்டித் தேர்வுகளைதமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில்அமையும் என நம்புகிறோம்.

இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றிநடைபெற ஏதுவாக அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில்4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர்பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்டகல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள்ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை மற்றும் அகவிலைப்படி வழங்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? "விஜயகாந்த் கேள்வி

ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி?

500, 1000 ரூபாய்நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அச்சப்பட வேண்டாம், ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட், வருமான வரித்
துறைக்கு தெரிவிக்கப்படாதுஎன்று மத்திய நிதி அமைச்சகம்உறுதி அளித்துள்ளது.
பொதுமக்கள்வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் அறிமுகம் இல்லாதநபர்களின் பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யவோ, மோசடியில் சிக்கிக்கொள்ளவோ வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், “விவசாய வருமானத்துக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு தொடரும். சிறு வணிகர்கள், குடும்பத்தலைவிகள், கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் எவ்வித அச்சமும்இன்றி தங்கள் வங்கிக் கணக்கில்பணத்தை டெபாசிட் செய்யலாம்” என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்துநாளேடுகளில் நிதி அமைச்சகம் நேற்றுவெளியிட்டுள்ள விளம்பரத்தில், “ரூ.2.50 லட்சம் வரையிலானடெபாசிட், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாது. விசாரணையோ அச்சுறுத்தலோ இருக்காது. நேர்மையான அனைத்து குடிமகன்களும் அச்சமடையத்தேவையில்லை. விவசாயிகளின் வருமானத்துக்கு வரி கிடையாது. இதைஎளிதாக வங்கியில் டெபாசிட் செய்யலாம்” என்று கூறியுள்ளது.
உரிய கணக்கு இல்லாமல் வங்கியில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்அபராதம்?
வருவாய்த்துறைச்செயலர் ஹஷ்முக் ஆதியா தகவல்
வங்கிகளில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும்பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால், வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும்என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைசெயலர் ஹஷ்முக் ஆதியா நேற்றிரவுகூறியதாவது:
நேற்றுமுதல் டிசம்பர் 30-ம் தேதி வரையிலான50 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின்விவரங்கள் பெறப்படும். பணத்துக்கு முறையான கணக்கு இல்லைஎன்றால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
வங்கிகளில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும்வாடிக்கையாளர்களின் வருமான வரி கணக்குகளை, வருமான வரித் துறையினர் ஒப்பிட்டுபார்ப்பார்கள். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர் தெரிவித்துள்ள வருமான வரி கணக்குகள்சரியாக இல்லை என்றால், வரிஏய்ப்பு செய்தவராக கருதப்படுவார்.
சிறு வணிகர்கள், வீட்டுப் பெண்கள், தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ரூ.1.5 லட்சம்முதல் ரூ.2 லட்சம் வரைவங்கியில் டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகை வரிவருவாயை விட குறைவாக இருப்பதால்வருமான வரித் துறையினரால் அவர்களுக்குதொந்தரவு இருக்காது.
தங்க நகை வாங்குபவர்களிடம், ‘பான்’ எண் வாங்காமல் விற்பனை செய்யும் நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர்10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரைடெபாசிட் செய்யப்படும் அனைத்து தொகை கள்பற்றிய அறிக்கைகள் வருமான வரித்துறையிடம் இருக்கும். ஒரு வங்கிக் கணக்குக்கு 2.5 லட்சம்மட்டுமே உச்சவரம்பு. வருமான வரித் தாக்கல்செய்துள்ளதற்கும் டெபா சிட் செய்துள்ளதற்குமானவித்தியா சம் ஒப்பிட்டு பார்க்கப்படும். ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை முதல் ரூ.100, ரூ.50
இன்று முதல் ஏடிஎம் இயந்திரங்களில் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய்நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த பணத்தைஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளமுடியும். பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம்எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல்இலவச சேவையை வழங்குமாறு வங்கிகளுக்குரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஏடிஎம்களில்உடனடியாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள்கிடைக்காது
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. தற்போது புதிய 2,000, 500 ரூபாய்நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளைவங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில்கொடுத்து மாற்றிவருகின்றனர்.
உடனடியாக2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில்கிடைக்காது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின்அமைப்புக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில்மாற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகே ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகிடைக்கும். எனவே பொதுமக்கள் அதற்குஏற்ப முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கானசெயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும்இன்னும் சில மாதங்களில் புதிய1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தஇருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்ததாஸ் கூறுகையில் ``புதிய வடிவத்தில் புதியவண்ணத்தில் இன்னும் சில மாதங்களில்ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பையும்இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே இன்னும் சில மாதங்களில்புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம். புதிதாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பதுதொடர்ந்து கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டைமக்கள் பயன்படுத்தி ஆதரவு கொடுப்பதற்கு ஏற்பஅரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் கணக்கில் பணம் செலுத்த தடை

வங்கி வாடிக்கையாளர்கள், தங்களதுகணக்கில் நேரடியாக பணம் எடுப்பது, செலுத்துஉள்ளிட்ட பணிகள் துவங்கின. ஆனால், ஒருவரது
வங்கி கணக்கில், மற்றவர்கள்பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ள   மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பால், நவ., 9ல், வங்கிகள்இயங்கவில்லை. நேற்று முன்தினம், பழையநோட்டுகளை மாற்றும் பணி துவங்கியது. நேற்றுமுதல், அவரவர் வங்கி கணக்கில்பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற பரிவர்த்தனைகள் ஆரம்பித்தன. பணம் செலுத்துவோர், தங்களது வங்கி கணக்கில்எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், வங்கியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்செலுத்துவோர், 'பான்' கார்டு நகல்அல்லது கணக்கு எண்ணை குறிப்பிடவேண்டும்; ஆதார் எண்ணும் கட்டாயம். வங்கி கணக்கு வைத்திருப்போர் மட்டுமேநேரடியாக பணம் செலுத்த முடியும். ஒருவரது கணக்கில் மற்றவர்கள் பணம் செலுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மிகவும் இயலாதவர்களாக இருந்தால்பணம் செலுத்தும் சீட்டில், அவர்களின் கையெழுத்தை சோதனை செய்து பணம்பெறப்படுகிறது. வணிக நிறுவனங்களின் கணக்குக்கு, உரிமையாளர் கையெழுத்து மற்றும் நிறுவன முத்திரையுடன்பணம் பெறப்படுகிறது.வங்கி கணக்கிலிருந்து, வங்கிகவுன்டர்கள் மூலம் நேரடியாக பணம்வழங்கும் முறையும் நேற்று துவங்கியது. ஒருநாளைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், ஒருவாரத்தில், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமேஎடுக்க முடியும். இக்கட்டுப்பாட்டால், மற்றவர்களின் வங்கி கணக்கில், வெளியூர்களிலிருந்து, சி.பி.எஸ்., என்றஒருங்கிணைந்த, ஆன்லைன் முறையில் பணம்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணம் மாற்ற தடையில்லை : ஒருவங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, ஆன்லைன்முறையில் பணம் மாற்ற எந்தகட்டுப்பாடும் இல்லை. தபால் நிலையங்களில்பணம் எடுக்கவும், பெறவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் செயல்படும் அதிகாரப்பூர்வ பணம் மாற்றும் சேவைமையங்கள், டாடா நிறுவனத்தின், 'இன்டிகேஷ், இந்தியா ஒன்' போன்ற, அங்கீகாரம்பெற்ற தனியார், ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கிகள் பணம் வழங்கும் முறைக்குகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.