யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி?

500, 1000 ரூபாய்நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அச்சப்பட வேண்டாம், ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட், வருமான வரித்
துறைக்கு தெரிவிக்கப்படாதுஎன்று மத்திய நிதி அமைச்சகம்உறுதி அளித்துள்ளது.
பொதுமக்கள்வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் அறிமுகம் இல்லாதநபர்களின் பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யவோ, மோசடியில் சிக்கிக்கொள்ளவோ வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், “விவசாய வருமானத்துக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு தொடரும். சிறு வணிகர்கள், குடும்பத்தலைவிகள், கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் எவ்வித அச்சமும்இன்றி தங்கள் வங்கிக் கணக்கில்பணத்தை டெபாசிட் செய்யலாம்” என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்துநாளேடுகளில் நிதி அமைச்சகம் நேற்றுவெளியிட்டுள்ள விளம்பரத்தில், “ரூ.2.50 லட்சம் வரையிலானடெபாசிட், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாது. விசாரணையோ அச்சுறுத்தலோ இருக்காது. நேர்மையான அனைத்து குடிமகன்களும் அச்சமடையத்தேவையில்லை. விவசாயிகளின் வருமானத்துக்கு வரி கிடையாது. இதைஎளிதாக வங்கியில் டெபாசிட் செய்யலாம்” என்று கூறியுள்ளது.
உரிய கணக்கு இல்லாமல் வங்கியில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்அபராதம்?
வருவாய்த்துறைச்செயலர் ஹஷ்முக் ஆதியா தகவல்
வங்கிகளில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும்பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால், வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும்என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைசெயலர் ஹஷ்முக் ஆதியா நேற்றிரவுகூறியதாவது:
நேற்றுமுதல் டிசம்பர் 30-ம் தேதி வரையிலான50 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின்விவரங்கள் பெறப்படும். பணத்துக்கு முறையான கணக்கு இல்லைஎன்றால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
வங்கிகளில்ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும்வாடிக்கையாளர்களின் வருமான வரி கணக்குகளை, வருமான வரித் துறையினர் ஒப்பிட்டுபார்ப்பார்கள். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர் தெரிவித்துள்ள வருமான வரி கணக்குகள்சரியாக இல்லை என்றால், வரிஏய்ப்பு செய்தவராக கருதப்படுவார்.
சிறு வணிகர்கள், வீட்டுப் பெண்கள், தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ரூ.1.5 லட்சம்முதல் ரூ.2 லட்சம் வரைவங்கியில் டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகை வரிவருவாயை விட குறைவாக இருப்பதால்வருமான வரித் துறையினரால் அவர்களுக்குதொந்தரவு இருக்காது.
தங்க நகை வாங்குபவர்களிடம், ‘பான்’ எண் வாங்காமல் விற்பனை செய்யும் நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர்10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரைடெபாசிட் செய்யப்படும் அனைத்து தொகை கள்பற்றிய அறிக்கைகள் வருமான வரித்துறையிடம் இருக்கும். ஒரு வங்கிக் கணக்குக்கு 2.5 லட்சம்மட்டுமே உச்சவரம்பு. வருமான வரித் தாக்கல்செய்துள்ளதற்கும் டெபா சிட் செய்துள்ளதற்குமானவித்தியா சம் ஒப்பிட்டு பார்க்கப்படும். ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை முதல் ரூ.100, ரூ.50
இன்று முதல் ஏடிஎம் இயந்திரங்களில் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய்நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த பணத்தைஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளமுடியும். பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம்எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல்இலவச சேவையை வழங்குமாறு வங்கிகளுக்குரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஏடிஎம்களில்உடனடியாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள்கிடைக்காது
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. தற்போது புதிய 2,000, 500 ரூபாய்நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளைவங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில்கொடுத்து மாற்றிவருகின்றனர்.
உடனடியாக2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில்கிடைக்காது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின்அமைப்புக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில்மாற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகே ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகிடைக்கும். எனவே பொதுமக்கள் அதற்குஏற்ப முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கானசெயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும்இன்னும் சில மாதங்களில் புதிய1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தஇருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்ததாஸ் கூறுகையில் ``புதிய வடிவத்தில் புதியவண்ணத்தில் இன்னும் சில மாதங்களில்ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பையும்இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே இன்னும் சில மாதங்களில்புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம். புதிதாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பதுதொடர்ந்து கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டைமக்கள் பயன்படுத்தி ஆதரவு கொடுப்பதற்கு ஏற்பஅரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக