யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/16

மற்றவர்கள் கணக்கில் பணம் செலுத்த தடை

வங்கி வாடிக்கையாளர்கள், தங்களதுகணக்கில் நேரடியாக பணம் எடுப்பது, செலுத்துஉள்ளிட்ட பணிகள் துவங்கின. ஆனால், ஒருவரது
வங்கி கணக்கில், மற்றவர்கள்பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ள   மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பால், நவ., 9ல், வங்கிகள்இயங்கவில்லை. நேற்று முன்தினம், பழையநோட்டுகளை மாற்றும் பணி துவங்கியது. நேற்றுமுதல், அவரவர் வங்கி கணக்கில்பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற பரிவர்த்தனைகள் ஆரம்பித்தன. பணம் செலுத்துவோர், தங்களது வங்கி கணக்கில்எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், வங்கியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்செலுத்துவோர், 'பான்' கார்டு நகல்அல்லது கணக்கு எண்ணை குறிப்பிடவேண்டும்; ஆதார் எண்ணும் கட்டாயம். வங்கி கணக்கு வைத்திருப்போர் மட்டுமேநேரடியாக பணம் செலுத்த முடியும். ஒருவரது கணக்கில் மற்றவர்கள் பணம் செலுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மிகவும் இயலாதவர்களாக இருந்தால்பணம் செலுத்தும் சீட்டில், அவர்களின் கையெழுத்தை சோதனை செய்து பணம்பெறப்படுகிறது. வணிக நிறுவனங்களின் கணக்குக்கு, உரிமையாளர் கையெழுத்து மற்றும் நிறுவன முத்திரையுடன்பணம் பெறப்படுகிறது.வங்கி கணக்கிலிருந்து, வங்கிகவுன்டர்கள் மூலம் நேரடியாக பணம்வழங்கும் முறையும் நேற்று துவங்கியது. ஒருநாளைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், ஒருவாரத்தில், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமேஎடுக்க முடியும். இக்கட்டுப்பாட்டால், மற்றவர்களின் வங்கி கணக்கில், வெளியூர்களிலிருந்து, சி.பி.எஸ்., என்றஒருங்கிணைந்த, ஆன்லைன் முறையில் பணம்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணம் மாற்ற தடையில்லை : ஒருவங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, ஆன்லைன்முறையில் பணம் மாற்ற எந்தகட்டுப்பாடும் இல்லை. தபால் நிலையங்களில்பணம் எடுக்கவும், பெறவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் செயல்படும் அதிகாரப்பூர்வ பணம் மாற்றும் சேவைமையங்கள், டாடா நிறுவனத்தின், 'இன்டிகேஷ், இந்தியா ஒன்' போன்ற, அங்கீகாரம்பெற்ற தனியார், ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கிகள் பணம் வழங்கும் முறைக்குகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக