யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/19

நீதிக்கதை---சிந்தனை கதைகள்



ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..

அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..

ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..

அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..

ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..

குரூப்-1 பதவிக்கு 21ம் தேதி நேர்காணல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான நேர்காணல் வருகிற 21ம் தேதி தொடங்கும்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது


இது குறித்து டி.என்.பிஸ்.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பு


 குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் உள்ள  தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது


இது தொடர்பான தகவல்  விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது


  மேலும், நேர்முகத்தேர்வுக்கான குறிப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


விண்ணப்பதாரர் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.  குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது


 நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும்,  முழுத் தகுதி பெற உறுதி  அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

ஜனவரி 23, 24ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்கள் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்


 இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது


 தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்


நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தை தேர்வு செய்யும்போது கண்டிப்பாக தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக எழுத வேண்டும்


முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 2019 மார்ச் 1ம் தேதி பதினான்கரை வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்


 மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், 9ம் வகுப்பு வரை படித்து இடையில் நின்றவர்கள், பிற துறையால் நடத்தப்படும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


 பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத் தேர்வு இருப்பதால், செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து செய்முறைத் தேர்வு எழுதிய பிறகே அறிவியல் பாடத் தேர்வை எழுத முடியும். செய்முறை பயிற்சி வகுப்பில் சேர கடந்த 8.6.18 முதல் 30.6.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது


மேற்படி தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது அறிவிக்கப்படும் தேதியில் பதிவு செய்து 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்


ஏற்கெனவே அறிவியல் பாடத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் செய்முறை அல்லது எழுத்து தேர்வு இதில் எந்த பகுதியில் தோல்வி அடைந்தார்களோ அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்


 தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் குறித்த விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்


 பத்தாம் வகுப்புக்கு தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் ₹125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50 சேர்த்து செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்


 மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் ஆன்ைலனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்

அண்ணா பல்கலை வினாத்தாள், 'லீக்' : போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை

சென்னை: அண்ணா பல்கலையின் வினாத்தாள், 'லீக்' விவகாரத்தில், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க, போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில், தேர்வுத் துறை முறைகேடு, பேராசிரியர்கள் நியமனம், நிர்வாக பிரச்னை என, பல்வேறு விதிமீறல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி., - சி.ஐ.டி., போலீசார், விசாரித்து வருகின்றனர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல், தேர்வு துறையின் பெண் ஊழியர் வரை, முறைகேடு விவகாரங்களில் சிக்கியுள்ளனர்.ஏற்கனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கிய விவகாரம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச., 3ல், பருவத் தேர்வுக்கான கணித வினாத்தாள், லீக் ஆன விவகாரம், அண்ணா பல்கலைக்கு, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்னையில், இன்ஜி., கல்லுாரிகளின் இரண்டு மாணவர்களும், தேர்வு துறை தலைமை அலுவலக ஊழியர் ஒருவரும், சி.பி., - சி.ஐ.டி., போலீசிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், பல தேர்வுகளுக்கு வினாத்தாள் லீக் ஆனதாக, தகவல் வெளியாகியுள்ளது.முந்தைய தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தாலும், அவை ரகசியமாக வைக்கப்பட்டதால், ஊழியர்கள் யாரும் சிக்கவில்லை என்றும், இந்த முறை, 'வாட்ஸ் ஆப்'பில் பகிர்ந்ததால் சிக்கியதும், தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், தேர்வுத் துறையின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, சந்தேகத்துக்குரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களை விசாரிக்க, அண்ணா பல்கலை தரப்பில் ஒப்புதல் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால், வினாத்தாள், லீக் ஆன வழக்கு விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. உண்மையை கண்டறிய, போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துஉள்ளது.

குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை வெளியேற்ற தடை

சென்னை: 'அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கியுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக்கின்றன.கடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மாணவருக்கும், டி.சி., கொடுத்து, கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு - பொதுச்செயலாளர் தகவல்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 16.12.2018 மாநிலச் செயற்குழு தீர்மானத்தின்படி 2019 ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கிறது.
*மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டக் கிளைகளும் துண்டுப்பிரசுரம் மற்றும் வால்போஸ்டர் வெளியிட மாதிரி இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.விரைந்து துண்டுப்பிரசுரம்,வால்போஸ்டர் வெளியிட்டு களப்பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

*தோழமையுடன்
*ச.மயில்
*பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

8,909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர் : குறைவான மாணவர்கள் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
சத்துணவு சாப்பிடும் 10-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சமூக நலத்துறை மூலம் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் பட்டியலில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தில் வேலூர் (451), மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் (420), நான்காவது இடத்தில் சிவகங்கை (417), ஐந்தாவது இடத்தில் திருப்பூர் (409) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
அதேபோன்று ஆறாவது இடத்தில் திண்டுக்கல் (385), ஏழாவது இடத்தில் திருநெல்வேலி (371), எட்டாவது இடத்தில் ஈரோடு (355) ஆகிய மாவட்டங்களும் உள்ளன.
தலைநகரான சென்னையில் மொத்தம் 55 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, மீண்டும் ஒரு முறை சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வு இணைப்பு இல்லை' :

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை இணைக்கும் எவ்வித திட்டமும் இல்லை
இரு தேர்வுகளும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்
டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை, நேற்று முன்தினம் வெளியானது
இதில், குரூப் 1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட அனைத்து முக்கிய தேர்வுகளும், இந்த ஆண்டுக்கான அட்டவணையில் வந்திருப்பது, தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
கடந்தாண்டு, குரூப்4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்
இது தொடர்பாக, சமூகவலைத்தளங்களில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது
டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமாரிடம்கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்
ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம் :

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது
இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன
இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்
ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது
எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன
இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது*l
அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன
இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்
தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்

கல்வித்துறை உதவியுடன் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கம்:

திருவள்ளூரில் முதற்கட்டமாக 27 பள்ளிகளில், கல்வித்துறை உதவியுடன்நேற்று மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. இதனால், சமூகத்தில் நடக்கும் பல சீர்கேடுகள் களையப்பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில், செடிகளை பாதுகாப்பதற்கு பசுமை படை, சுகாதாரம் மேம்பாட்டிற்கு நாட்டு நலப்பணி திட்டம், மருத்துவம் தொடர்பாக ‘’ஜூனியர் ரெட் கிராஸ்’’’’,அறநெறி தொடர்பான விழிப்புணர்விற்கு பாரத சாரண சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் உள்ளன.

இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, கல்வித்துறையுடன் சேர்ந்து மாவட்டம் முழுவதும், 132 பள்ளிகளில், மாணவர் காவல் படை துவக்கப்பட உள்ளது. நேற்று திருவள்ளூரில் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பிக்கள் கங்காதரன், சர்தார், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். 
இதில், மாவட்ட எஸ்.பி., பொன்னி கலந்துகொண்டு பேசுகையில், ‘’எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரை ஒரு வகுப்புக்கு தலா 22 மாணவர்கள் வீதம், 44 பேர் தேர்வு செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட 15 தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.  இவர்களுக்கு, வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு வகுப்பு மூலம், காவல், தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், சிறப்பு வகுப்பில் பங்கேற்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள உள்ளது’’’’ என்றார். இதில், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தமிழ்வாணன், ரஜினிகாந்த், முருகன், முரளிதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேணுகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பயிற்சிகள்
மாணவர் காவல் படையில் உள்ள மாணவர்களுக்கு குற்றம் தடுப்பு சார்ந்த நற்பண்புகள், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வரதட்சணை, பாலியல் துன்புறுத்தல், ஜாதி வன்கொடுமை உள்ளிட்ட சமுதாயத்திற்கு எதிரான தீய பழக்கங்களை களைதல், நல்ல தொடுதல், தீய தொடுதல் என குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, நல் ஒழுக்கத்துடன் நற்போதனை, சகிப்பு தன்மை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் பிறரிடம் நடந்துக் கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு, மனம் மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் முறைகள், பெரியவர்களை மதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்:

கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.கரூர், சின்னதாராபுரம், நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 31. இவர் நேற்று, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:எங்கள் ஊரில், பைப் கம்பெனி நடத்தி வருகிறேன். 2015ம் ஆண்டு, கோவை, தனியார் இன்ஜி., கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். அப்போது, என்னிடம் கோவைபுதுாரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 50, என்பவரின் மகன் ஹரிநாராயணன், 23, படித்தார்.தன் தந்தை அரசியலில் மேலிட செல்வாக்கு உடையவர் எனவும், பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாகவும், ஹரிநாராயணன் தெரிவித்தார். பின், அவரது தந்தையை அறிமுகம் செய்து வைத்தார். 'அரசு வேலைக்கு, 4 லட்சம் ரூபாய் செலவாகும்; பணம் கொடுத்தால் உடனடியாக பணி வாங்கி தருகிறோம்' என, தெரிவித்தனர்.இதை நம்பி, 4 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மூன்று ஆண்டுகளாக வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் உள்ளனர். கேட்டால், 'பணத்தை கொடுக்க முடியாது; வெளியே சொன்னால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர், சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்-மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு:

பெற்றோர் - மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் ஒரே பாடதிட்டம் கொண்டுவரவும் அரசு பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
*நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மாயமான தனது மகளை ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணையின் போது, அந்த மாணவி ஆஜர்படுத்தப்பட்டார்
*அப்போது, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தந்தை கண்டிப்பார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறியுள்ளார்
*இதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த நீதிபதிகள், மாணவர்களின் உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கு தீர்வு காணவேண்டும்.
எனவே, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவினர் தற்ேபாதைய கல்வி மற்றும் தேர்வு முறை, பெற்றோர்-ஆசிரியர் உறவு, மாணவர்-ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்
இதன்படி, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அளித்த உத்தரவு
மாணவர்கள் நல்ல மனநிலையில்தான்  இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வட்டார அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்
பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் பங்கேற்காதவர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை தொலைபேசியில் தெரிவிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். மாணவர்களின் உடல் நலம், கல்வி திறன் உள்ளிட்ட விபரங்களை பதிவேட்டில் அந்தந்த ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும்
நாடு முழுவதும் ஒரே பாடதிட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும். மாணவர்களின் கல்வி திறன், மனநிலையை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை கையேடாக மாவட்ட நூலகத்தினர் வெளியிட வேண்டும்
மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி முறையை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களிடையே வாட்ஸ்அப் குழு ஏற்படுத்த வேண்டும்
மாணவர்களுக்கு ஒழுக்கம், நன்னெறி, வழிகாட்டுதல்கள் வழங்க கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். மேல்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்த வேண்டும்
பாடங்கள், அரசு உதவிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்டவற்றை மாணவர்கள் சிரமமின்றி அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த வெப்சைட் ஏற்படுத்த வேண்டும்
மாணவர்கள், பெற்றோரின் குறைகள், பரிந்துரைகள், கருத்துக்களை தெரிவிக்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் பொறுப்பை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

மாணவர்களுக்கு குஷியான செய்தி..! சூப்பர் சலுகை அறிவித்து அரசு அதிரடி..!

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க
அனுமதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும்,புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் 1,791 பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த 3.10 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?நன்றி விகடன் :

ப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போதெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்துவைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி விளக்குகிறார்...

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்

* பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்துவைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
* வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயைவைத்திருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
சீஸ்
* சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை. சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
* இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையைஅனிதா பாலமுருகன் இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சித் துண்டுகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப்பயன்படுத்த வேண்டும்.
* தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
* மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
உலர் பழங்கள்
* உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்துவைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்
* கீரைகள்: கறிவேப்பிலை, கொத்தமல்லியைப்போலவேதான் கீரைகளும். பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாள்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டுவைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. 
* எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தையுமே அப்படிவைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்டத்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்துவைத்துவிடவேண்டியது அவசியம். 
கேரட்
* கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாள்களுக்குக் காற்றோட்டமாக, வெளியில் வைத்திருக்க வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.  
* ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onions): வெங்காய வகைகளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாள்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ் என்பது, உணவின் வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு சாதனம். அதற்காக அனைத்து உணவுப் பொருள்களையும் ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்துப் பயன்படுத்துவது, அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்துவது தவறு.

PS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை!

GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.

Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings Transfer from CPS to GPF Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings
GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.



தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல் :

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

                   à®¤à®®à®¿à®´à®• அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல்

சென்னை:

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.

தொலைக்காட்சி சேனல் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது நம்பரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


பள்ளி மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமாக பயிற்சி, போட்டித்தேர்வு, கல்வி உதவித் தொகை தகவல் போன்றவைகள் பற்றிய நிகழ்ச்சிகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்படுகிறது.


மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆசிரியர்கள் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். #EducationTVChannel

நீதிக்கதை :


பறக்கும் போட்டி


அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.


அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.


இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.