யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/4/18

4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு

வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி' வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்படஉள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

2019 மார்ச் வரை, அபராதத்துடன் வரி செலுத்த முடியும். இந்த ஆண்டில் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றுவோரை கண்டறிய, பல உத்திகளை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர்.வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வருவாயை காண்பிக்காமல், பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர, இந்த ஆண்டு, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், பல ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பட்டியலை, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தபெற்று, அதற்கான வருவாய் ஆதாரம் குறித்து விளக்கம் கோரவுள்ளனர்.

இதுதவிர, வேறு சில திட்டங்களை செயல்படுத்தவும், அதன் வாயிலாக, வரி கட்டாதவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது,கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் மீண்டும் B.Ed படிப்பு:

ஆசிரியர்களின் பற்றாக்குறையுடன் இயங்கும் ஐஐடிகள்!!!

நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 23 ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கல்லூரிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குகின்றன. ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.



கோவா ஐஐடியில் 62 சதவிகிதமும், கர்நாடக மாநிலம் தாராவாட் ஐஐடியில் 47 சதவிகிதமும், கோரக்பூர் ஐஐடியில் 46 சதவிகிதமும், கான்பூர் ஐஐடியில் 37 சதவிகிதமும், டெல்லி மற்றும் மும்பை ஐஐடியில் 27 சதவிகிதமும், சத்தீஸ்கரில் உள்ள ஐஐடியில் 58 சதவிகிதமும், சென்னை ஐஐடியில் 28 சதவிகிதமும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் தேவைக்கு அதிகமாக 4 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதுபோன்று, நாட்டிலுள்ள ஐஐடிகளில் மிக மோசமான இடத்தில் சத்தீஸ்கர் ஐஐடி இடம்பிடித்துள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிகளிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது

“ஐஐடி மற்றும் என்ஐடி தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில், ஆசிரியர்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதற்கு தகுதிவாய்ந்த மற்றும் கிடைக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் உயர்வு இல்லை. 50 சதவிகித பட்டதாரிகள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர், எஞ்சியுள்ள பெரும்பாலானவர்கள் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். சம்பள உயர்வு மற்றும் மேற்படிப்புக்கான ஊக்குவித்தல் போன்ற காரணங்களிலும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது” எனக் கல்வி நிபுணர் சீதா ராமு கூறியுள்ளார்.

மே 8ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ ஜியோ முடிவு :

கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ -ஜியோ முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சென்னையில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பு உயர்மட்ட குழுக்கூட்டம் நடந்தது. அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து ஏப்ரல் 23 முதல் 27 ம்தேதி வரை 11 மண்டலங்களில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களை சந்திக்க உள்ளோம். ஏப்ரல் 14 ல் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர்குழு காலநீட்டிப்பு செய்வதை கண்டிக்கிறோம், என்றார்.

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி
தி ஹிந்து

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு...!

ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும்.
உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள இரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச்  செய்கிறது. உடல் எடை குறைவதால் ஏற்படும் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. பயன்படுத்திய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியும். உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு எந்தவிதமான பாதக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
உடலில் சிறுநீரகக்குழாய், பிறப்பு உறுப்பு செரிமான மண்டலக்குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களால் எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும்.  இதனை சரிசெய்ய ஒரு தம்ளர் கரும்பு சாறு போதும். சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி  செய்வதற்கு உதவுகிறது.

வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு  தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.

சிறுநீரக கற்களை கரைப்பது கரும்பின் பணி. பொதுவாக உடலில் ஏற்படும் வறட்சியால் இந்த கற்கள் உருவாகும். அதை தடுப்பதற்காகத்தான் அடிக்கடி தண்ணீர்  குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கற்கள் ஏற்படாமல் கழிவுகளை வெளியேற்றி விடும். போதிய தண்ணீர் மட்டுமின்றி  கரும்பு சாறும் குடித்தால் இரட்டை பலன் கிடைக்கும்.

கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது  பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

கரும்பில் உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் கனிமச்சத்துக்களுடன் பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. இதனை உண்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இருமல், சளி, தொண்டை வலி இருப்பவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள். அது தவறானது. இந்த பிரச்சனைகளுக்கு கரும்பே சிறந்தது.

கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இனிப்பானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக  வைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி அளவோடு சாப்பிடலாம்.

EMIS NEWS: அனைத்துவகை பள்ளிகளும் நாளைக்குள் (03/04/2018) மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

TET - தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப நடவடிக்கை - தேர்வில் தேறியோர் கோரிக்கை :


உங்கள் மொபைலில் சார்ச்ஜ் இல்லையென்றாலும் Google உங்களை கண்காணிக்க முடியும்

                            

உங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைலை அனைத்து விட்டு GPS மற்றும் ரேடார் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அது , தவறான யுகம்! இருப்பிடத் தகவல் சேவைகள் செயலற்றதாக மாற்றப்பட்டாலும், Android ஸ்மார்ட்போன்களிலிருந்து இருப்பிட தகவலை Google கண்காணிக்க முடியும் என்று சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஒரு ஸ்மார்ட்போனின் மதர்போர்டு மேல் ஒரு மினி ஐஆர்சி பேட்டரி அமர்ந்திருப்பதை ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டரி உங்கள் கண்காணிப்பு இருப்பிடத்தை செலுத்துவதற்கான பொறுப்பாகும். இருப்பினும், தொலைபேசி ஆஃப் செய்யப்படும் போது தரவு(Data) கூகிள்க்கு இடமாற்றம் செய்யப்படும், இணைப்பு இல்லை என்று கருதி கொள்ளலாம். எனவே வெளிப்படையாக, உங்கள் தகவல் அடுக்கி வைக்கப்பட்டு, மீண்டும் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்படும் போது, உங்கள் முழு நாளையும் கூகிள்க்கு அனுப்பப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற அறிக்கை குவார்ட்ஸ் பகிரப்பட்டு இருந்தன அதில் குறி இருபதாவது என்னதான் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருப்பிடத் தகவல் சேகரிக்கும் சேவைகள் அணைக்கப்பட்டு irundhalum “பயனர் தகவல்கலை சேகரிக்க படுகின்றன நீங்க சிம் கார்டை போடவில்லை என்றாலும் உங்களின் இருப்பிட தகவல்களை சேகரித்துக் கொண்டுருக்கின்றன.

இந்த மாதிரியான தனிமனித இருப்பிட தரவுகளை கூகிள் நிறுவனம் 2017 ஆரம்பத்தில் இருந்து சேகரிக்க படுகின்றன. இது பயனர்களின் சிறந்த அனுபவத்திற்காக இந்த தரவுகளை சேகரிக்க படுகின்றன என்று கூகிள் நீட்டுவனிதின் தாய் நிறுவனமான அல்பாபெட் கூறுகிறது.


Facebook-ஐ தொடர்ந்து Whatsapp தகவல்களும் திருடப்படும் அபாயம்

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்சாப் தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chatwatch எனப்படும் செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட, Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Apple App Store -ல் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்ட நிலையில், android play store ல் தற்போது கிடைக்கிறது. இந்த Chatwatch பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர Whatsapp ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலில் விழுந்த விண்வெளி ஆய்வு நிலையம் ???



டியாங்காங்-1 எனப்படும் சீன விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி இன்று பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ‘டியாங்காங்-1’ என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா டியாங்காங்-1 (Tiangong-1) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பியது. அன்று முதல் 2016ஆம் ஆண்டு வரை அந்த விண்வெளி நிலையத்தைச் சீனா பராமரித்துவந்தது. ஆனால் அதன் பிறகு விண்வெளி நிலையம் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகச் சீனா 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பூமியை நோக்கி நொறுங்கி விழும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மேலும் வளிமண்டல உராய்வின் காரணமாக இந்த ஆய்வு நிலையம் எரிந்து சிதைந்துவிடும் என்றும், சிதைவுகள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4 மணியளவில் பூமியின் வளிமண்டலத்துக்குள் டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம் வெடித்துச் சிதறியதாகவும், அதன் சிதைவுகள் தென் பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி மையத்தின் பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்டதாலும், கடலில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதாலும் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

TNTET 2018 - தேர்வுக்கு திட்டமிடுவது எப்படி?

மக்களுக்கு குட் நியூஸ்: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை!!!

சேலம்: வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு 45.50 குறைந்து, 1,232.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு வர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதனால் இதன் விலையை ஒவ்வொரு மாதமும், எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் 1,143க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூலையில் 1,074, ஆகஸ்டில் 1,023, செப்டம்பரில் 1,138, அக்டோபரில் 1,215.50. நவம்பரில் 1,285, டிசம்பரில் 1,370, ஜனவரியில் 1,360.50, பிப்ரவரியில் 1,358.50, கடந்த மாதம் (மார்ச்) 1,278 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு மாதம் (ஏப்ரல்) 45.50 விலை குறைக்கப்பட்டு, 1,232.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் இவ்விலையில் தான், வர்த்தக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும்.


மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, கடந்த மாதம் 722க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் 36 குறைந்து, 686 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், விலை குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் அரசு மற்றும் நிதிஉதவிப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!! வேறுபள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள்???


குரூப்-5ஏ சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சட்டம், நிதித்துறை தவிர்த்து பிறதுறைகளில் 
குரூப்-5ஏ பணியிடங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in - -இல் அறிந்து கொள்ளலாம்.

25 சதவீதம் இட ஒதுக்கீடு தராத பள்ளிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

6-9 வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு அட்டவணை!!!

ஏப்ரல்-ஜுன் வரை கடுமையான வெப்பம் இருக்கும்- இந்திய வானிலை மையம் எச்சரிகை!!!


EMIS NEWS: அனைத்துவகை பள்ளிகளும் நாளைக்குள் (03/04/2018) மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!


முத்துகருப்பன் ராஜினாமா நிராகரிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கால அவகாசம் முடிந்த நிலையில், அதற்கான பணிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. மாறாக உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாதம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. வரும் 5ஆம் தேதி முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதலாவது நபராக அதிமுக மாநிலங்களவை எம்.பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமாகிய வெங்கைய்யா நாயுடுவிடம் இன்று (ஏப்ரல் 2) அனுப்பி வைத்தார்.

கடிதத்தில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பிரதமர் மோடி காலம் தாழ்த்துவது எனக்கு மிகவும் மன வேதனையைத் தருகிறது. இதற்காக முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தார்கள். அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடினார்கள். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் ஆலோசனை கேட்டுத் தொடர்ந்து போராடிவருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் மிகுந்த மனவேதனையுடனும், மன உளைச்சலுடனும் இருக்கிறேன். எனக்கு இரண்டு வருடம் வரை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக் காலம் இருந்தும், என்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் தனது ராஜினாமா கடிதத்தை வாசித்து காட்டிய முத்துகருப்பன், ராஜினாமா முடிவிலிருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுபோலவே மக்களவை உறுப்பினர்கள் கடலூர் அருண்மொழித் தேவன், அரக்கோணம் கோ.அரி, திருச்சி ப.குமார் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முத்துகருப்பனின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு ஏற்க மறுத்தார். ராஜினாமாவிற்கான காரணங்களைக் குறிப்பிட்டும், தமிழில் ராஜினாமா கடிதத்தை அளித்ததாலும் கடிதம் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களை குறிப்பிட்டு ராஜினமா செய்தால் ஏற்க முடியாது என விதி இருப்பதால் அதை அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதே காரணத்தைக் குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் 
போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழகத்தில் நாளை முதல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 2) விசாரித்த நீதிமன்றம், போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி 
நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில் இன்று டில்லி ஜனாதிபதி மாளிகையில் 2வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண், நாட்டுப்புறபாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார்.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.a