யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/4/18

முத்துகருப்பன் ராஜினாமா நிராகரிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கால அவகாசம் முடிந்த நிலையில், அதற்கான பணிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. மாறாக உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாதம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. வரும் 5ஆம் தேதி முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதலாவது நபராக அதிமுக மாநிலங்களவை எம்.பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமாகிய வெங்கைய்யா நாயுடுவிடம் இன்று (ஏப்ரல் 2) அனுப்பி வைத்தார்.

கடிதத்தில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பிரதமர் மோடி காலம் தாழ்த்துவது எனக்கு மிகவும் மன வேதனையைத் தருகிறது. இதற்காக முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தார்கள். அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடினார்கள். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் ஆலோசனை கேட்டுத் தொடர்ந்து போராடிவருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் மிகுந்த மனவேதனையுடனும், மன உளைச்சலுடனும் இருக்கிறேன். எனக்கு இரண்டு வருடம் வரை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக் காலம் இருந்தும், என்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் தனது ராஜினாமா கடிதத்தை வாசித்து காட்டிய முத்துகருப்பன், ராஜினாமா முடிவிலிருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுபோலவே மக்களவை உறுப்பினர்கள் கடலூர் அருண்மொழித் தேவன், அரக்கோணம் கோ.அரி, திருச்சி ப.குமார் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முத்துகருப்பனின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு ஏற்க மறுத்தார். ராஜினாமாவிற்கான காரணங்களைக் குறிப்பிட்டும், தமிழில் ராஜினாமா கடிதத்தை அளித்ததாலும் கடிதம் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களை குறிப்பிட்டு ராஜினமா செய்தால் ஏற்க முடியாது என விதி இருப்பதால் அதை அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதே காரணத்தைக் குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக