யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/18

82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்

மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை  குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. இதற்காக த னியாக குழு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளதாக ெதரிகிறது. மேற்கண்ட குழு கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ள நிலையில் தற்போது 500 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

எஸ்எஸ்ஏ சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கான செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் தமிழகத்துக்கு கிடைக்க  வேண்டிய நிதி நிறுத்திக் வைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து கொடுத்த பிறகே மத்திய அரசின் நிதி  கிடைக்கும் என்று தெரிகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது இல்லத்தில் செய்தியாளா்களை சந்தித்த போது, இலங்கை யாழ்ப்பாளத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களும், தமிழா்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்களும், இந்து பள்ளிகள் பத்துக்கு தலா 500 நூல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு வைக்கப்பட்டுள்ளது
அதில் வெற்றி பெறும் ஆசிரியா்களை கொண்டு காலிப்பணி இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியா் கழகத்தின் மூலம் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பணிகள் இன்னும் ஒரிரு நாட்களில் நிறைவடையும்
ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதியவா்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்
9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் கணினிமயமாக்கவும், 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்
மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்பில் பொதுத்தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுதி வெற்றி பெற இரண்டு மறு தோ்வுகள் நடத்தப்பட்டது
அது அடுத்தாண்டு முதல் ஜூன் மாதம் மட்டுமே மறு தோ்வு எழுதி வெற்றி பெறுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இரு முறை தோ்வு என்பதை மாற்றி ஒரு முறை தோ்வு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தோ்வு எழுதி வெற்றி பெறும் மாணவா்கள் உயர்கல்விச் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 500 மதிப்பெண்கள்தான் கணக்கிடப்படுகிறது என்றார்

கல்வி அதிகாரியை தள்ளிவிட்ட எம்.எல்.ஏ!

கம்யூட்டர், பிரிண்டர் வசதி இல்லாததால் 'ஆன்லைன் சம்பள பில் முறை' அரசு பள்ளிகளில் கேள்விக்குறி, கிராமப்புற தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

NEET & JEE EXAM 2019 - Important Dates!

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை விண்ணப்பம் & விண்ணப்பம் அனுப்பும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!

பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை எவர்சில்வர் வாட்டர் பாட்டில் விற்பனை அதிகரிப்பு :

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரம் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வரு கின்றனர். அங்கன்வாடி பணியாளர் கள், உதவியாளர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.விழிப்புணர்வு பணிஇதுமட்டுமின்றி, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட் டும் தாய்மார்களுக்குஇணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

5,000 அங்கன்வாடி பணியாளர்கள்

ஆனால், அங்கன்வாடி மையங் களில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்காததால் இந்தப் பணிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, தமிழகம் முழுவதும் சிவகங்கை, திருவா ரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

5 மையங்கள் வரை...

காலிபணியிடங்கள் உள்ள மாவட்டங்களில், ஒரு அங்கன்வாடி பணியாளர், 5 மையங்கள் வரை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இத னால், அங்கன்வாடி மையங்களின் பலன்களை முழுமையாகப் பெற முடியாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள்பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டெய்சி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணி யாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதுதவிர, குறிப்பிட்ட கால இடைவேளியில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய 2,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்தப் பணியிடங்களும் அவ்வப்போது நிரப்பப்படவில்லை.இதனால், ஒரு அங்கன்வாடி பணியாளர் 5 மையங்கள் வரை நிர் வகிக்க வேண்டியுள்ளது. அன்றாடப் பணிகளை மேற்கொள்ளக்கூட சிரம மாக உள்ளது. எனவே, காலி பணியிடங்கள் அனைத்தையும்உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு

இதுகுறித்து , ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங் களைச் சிறப்பாகவே நிர்வகித்து வருகிறோம். எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும் - ஆசிரியர்களுக்கு I.A.S அதிகாரி அட்வைஸ்:

போக்குவரத்துக் காவலராய் உருவெடுத்தப் பள்ளி ஆசிரியை!

ஒரு காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது மாலாவின் சிறுவயதுக் கனவு. இருப்பினும், தன் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப, தன் கனவை விட்டுக்கொடுத்து, ஒரு ஆசிரியையாக மாறினார். காக்கியை ஒரு நாளும் அணிய இயலாது, தன்னுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என எண்ணினார் மாலை.  ஆனால் விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.“2006 ஆம் ஆண்டில், தான் வேலை செய்த பள்ளிக்கு, தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பிடமிருந்து, ஆசிரியர்களை, போக்குவரத்து பாதுகாவலர்களாக, தன்னார்வப் பணி செய்வதற்கு அழைப்பு விடுத்து, சுற்றறிக்கை ஒன்று வந்தது. நான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக விருப்பப்பட்டது, எனது பள்ளிமுதல்வருக்கு தெரிந்திருந்ததால், இந்த தன்னார்வப் பணியை ஏற்க எனக்கு விருப்பமா எனக் கேட்டார். சிறிதும் தயக்கமின்றி, உடனே எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்”, எனக் கூறினார்.அன்றிலிருந்து, தான் எடுத்த முடிவிலிருந்து, மாலா, திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக, ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும், காக்கி உடை அணிந்து, மயிலாப்பூரின் பரபரப்பான சாலைகளில், போக்குவரத்தை நிர்வகிக்கின்றார். சென்னை மாநகரில் பணிபுரியும், இரண்டு பெண் போக்குவரத்து பாதுகாவலர்களில், மாலாவும் ஒருவர் ஆவார்.
"நான் பணியில் சேர்ந்த போது, சில பெண்கள் போக்குவரத்து காவலர்களாக இருந்தனர்,  ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பணியிலிருந்து வெளியேறினார்கள்," என்கிறார் 37 வயதான, மாலா. மேலும் பல பெண்கள் இவ்வாறான தன்னார்வப் பணி செய்ய முன்நோக்கி வரவேண்டும் எனக் கூறுகிறார்.இரு குழந்தைகளின் தாயான, மாலா, திருமணமோ அல்லது குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்போ, அவரது தன்னார்வ சேவைக்கு இடையூறாக இருக்கவில்லை. மாங்காடு முதல் மயிலாப்பூர் வரை பயணம் செய்வது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை, அவருக்கு. இதைப்பற்றி அவர் கூறுகையில், “போக்குவரத்தைச் சீர் செய்து, மக்களைப் பாதுகாப்பாக பயணிக்க உதவி புரிகையில், தொலைதூரப் பயணம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்கிறார். மேலும், என் கணவர் மற்றும் குழந்தைகள், நான் செய்யும் சேவையை நினைத்து பெருமை கொள்கின்றனர், எனக்கு ஆதரவாகவும் திகழ்கின்றனர்”, என்று அவர் கூறுகின்றார்.ஒரு போக்குவரத்து வார்டன் என்ற முறையில், ஆர்.எஸ்.பீ கேடட்ஸ்களை முன்னின்று வழிநடத்துவது, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது ஆகியவை மாலாவின் பொறுப்புக்களாகும். இதைத்தவிர, தான் வேலை செய்யும், மயிலாப்பூர் சில்றன்ஸ் கார்டன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு பற்றிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார். “மக்கள் பாதுகாப்பிற்கு, என்னுடைய சிறிய பங்களிப்பு தான், நான் செய்யும் இந்தப் பணி. விபத்து இல்லாத நகரமாக சென்னை கூடிய விரைவில் மாற வேண்டும் என விரும்புகிறேன்”, என்று கூறுகின்றார்.ஆசிரியர் மற்றும் போக்குவரத்துக் காவலர், எனப் பொது பணிக்குத் தன்னை அர்ப்பணம் செய்து, மக்கள் சேவையே மகேசன் சேவை, என்று வாழும் மாலா அவர்களை மனதாரப் பாராட்டுவோம். மேலும், மாலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நாம் அனைவரும் தன்னார்வப் பணியில் ஈடுபட விழைவோமாக!

Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி :

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. ,சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை :

              
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன் அனுமதி இல்லாமல் அங்கு கூடியதால் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கலைந்து செல்லும் படி கூறினர். உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசிய பின்பே போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்டையில் 16,500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்கள்.

 அதன்படி தமிழகம் முழுவதும் நேர்காணல் நடத்தி கிட்டத்தட்ட 14,500 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ஒன்றுக்கு ரூ.5500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஊதிய உயர்வு எங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 2200 ஊதிய உயர்வு சேர்த்து தற்போது 7,700 நாங்கள் சம்பளம் பெற்று கொண்டிருக்கிறோம். ஆனால் பள்ளியில் கோடைகால விடுமுறையில் பணி இல்லை என்பதால் எங்களுக்கு சம்பளம் கிடையாது. தற்போது விற்கும் விலைவாசி அடிப்படையில் குறைந்த சம்பளத்தை வைத்து கொண்டு சிரமப்பட்டு வருகிறோம். இதனால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இறந்துவிட்டனர்.

 தொடர்ந்து நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறோம். 6, 7 ஆண்டுகளில் 10 கல்வி அமைச்சர்கள் மாறிவிட்டனர். அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை சொல்லும் போதெல்லாம் செய்கிறோம் செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர யாரும் செய்யவில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற தொகுப்பூதியத்தில் இருப்பவர்களுக்கு 16,500 சம்பள உயர்வு கொடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.  ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 முன்பு அதிமுக ஆட்சியில் 1996ல் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியனம் செய்யப்பட்ட ஆசிரியர்களாக இருந்து 2006 திமுக ஆட்சியில் 13500 பேரை பணி நிரந்தரம் செய்தனர். அதை முன் உதாரணமாக கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். தற்போதுள்ள கல்வி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த போது நிதி ஆதாரமில்லை என்று சொன்னார். தற்போது, 12,500 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க போகிறோம். உறுதி மொழி அளிக்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் இந்த வளாகத்தில் இரவு பகலாக போராட்டத்தை தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்