யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/18

போக்குவரத்துக் காவலராய் உருவெடுத்தப் பள்ளி ஆசிரியை!

ஒரு காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது மாலாவின் சிறுவயதுக் கனவு. இருப்பினும், தன் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப, தன் கனவை விட்டுக்கொடுத்து, ஒரு ஆசிரியையாக மாறினார். காக்கியை ஒரு நாளும் அணிய இயலாது, தன்னுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என எண்ணினார் மாலை.  ஆனால் விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.“2006 ஆம் ஆண்டில், தான் வேலை செய்த பள்ளிக்கு, தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பிடமிருந்து, ஆசிரியர்களை, போக்குவரத்து பாதுகாவலர்களாக, தன்னார்வப் பணி செய்வதற்கு அழைப்பு விடுத்து, சுற்றறிக்கை ஒன்று வந்தது. நான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக விருப்பப்பட்டது, எனது பள்ளிமுதல்வருக்கு தெரிந்திருந்ததால், இந்த தன்னார்வப் பணியை ஏற்க எனக்கு விருப்பமா எனக் கேட்டார். சிறிதும் தயக்கமின்றி, உடனே எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்”, எனக் கூறினார்.அன்றிலிருந்து, தான் எடுத்த முடிவிலிருந்து, மாலா, திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக, ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும், காக்கி உடை அணிந்து, மயிலாப்பூரின் பரபரப்பான சாலைகளில், போக்குவரத்தை நிர்வகிக்கின்றார். சென்னை மாநகரில் பணிபுரியும், இரண்டு பெண் போக்குவரத்து பாதுகாவலர்களில், மாலாவும் ஒருவர் ஆவார்.
"நான் பணியில் சேர்ந்த போது, சில பெண்கள் போக்குவரத்து காவலர்களாக இருந்தனர்,  ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பணியிலிருந்து வெளியேறினார்கள்," என்கிறார் 37 வயதான, மாலா. மேலும் பல பெண்கள் இவ்வாறான தன்னார்வப் பணி செய்ய முன்நோக்கி வரவேண்டும் எனக் கூறுகிறார்.இரு குழந்தைகளின் தாயான, மாலா, திருமணமோ அல்லது குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்போ, அவரது தன்னார்வ சேவைக்கு இடையூறாக இருக்கவில்லை. மாங்காடு முதல் மயிலாப்பூர் வரை பயணம் செய்வது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை, அவருக்கு. இதைப்பற்றி அவர் கூறுகையில், “போக்குவரத்தைச் சீர் செய்து, மக்களைப் பாதுகாப்பாக பயணிக்க உதவி புரிகையில், தொலைதூரப் பயணம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்கிறார். மேலும், என் கணவர் மற்றும் குழந்தைகள், நான் செய்யும் சேவையை நினைத்து பெருமை கொள்கின்றனர், எனக்கு ஆதரவாகவும் திகழ்கின்றனர்”, என்று அவர் கூறுகின்றார்.ஒரு போக்குவரத்து வார்டன் என்ற முறையில், ஆர்.எஸ்.பீ கேடட்ஸ்களை முன்னின்று வழிநடத்துவது, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது ஆகியவை மாலாவின் பொறுப்புக்களாகும். இதைத்தவிர, தான் வேலை செய்யும், மயிலாப்பூர் சில்றன்ஸ் கார்டன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு பற்றிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார். “மக்கள் பாதுகாப்பிற்கு, என்னுடைய சிறிய பங்களிப்பு தான், நான் செய்யும் இந்தப் பணி. விபத்து இல்லாத நகரமாக சென்னை கூடிய விரைவில் மாற வேண்டும் என விரும்புகிறேன்”, என்று கூறுகின்றார்.ஆசிரியர் மற்றும் போக்குவரத்துக் காவலர், எனப் பொது பணிக்குத் தன்னை அர்ப்பணம் செய்து, மக்கள் சேவையே மகேசன் சேவை, என்று வாழும் மாலா அவர்களை மனதாரப் பாராட்டுவோம். மேலும், மாலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நாம் அனைவரும் தன்னார்வப் பணியில் ஈடுபட விழைவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக