யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்

புதிய தேசிய கல்வி வரைவுகொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்கஇருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில்
சீர்திருத்தம்மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகம் நியமித்தது.
இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்விவரைவு கொள்கையை கடந்த மே மாதம்சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலானஅம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவுகொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டிஅமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்றுகூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறந்தகல்வியாளர்கள் கொண்ட புதிய குழுஇன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில்அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்யவேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றைமேற்கொள்ள அரசு தயங்குவதாக ஏற்கனவேசுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழுஅமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா எனஅமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின்வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்கவேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு

வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராகபோர்ச்சுகல் நாட்டின்
முன்னாள் பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தற்போதைய பொதுச்செயலாளர் பான்கீ மூன்பதவி பிரமாணம்செய்து வைத்தார்.

ஐக்கிய நாடுகள் அவையில்தற்போதைய பொதுச்செயலாளராகதென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன்பதவி வகித்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்புவகிக்கும் பான்கி மூனின்பதவிக் காலம்வரும் டிசம்பர்31-ம் தேதியுடன்நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறுகட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர்பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதிகட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில்புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்கடந்த அக்டோபர்5-ம் தேதிரகசிய வாக்கெடுப்புநடத்தப்பட்டது.

இதில், போர்ச்சுகலின் முன்னாள்பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் ஐ.நா. புதியபொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின்புதிய பொதுச்செயலாளராகஅந்தோனியோ குத்தேரஸ்நேற்று பதவியேற்றார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின்நகல் அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. 9-வது பொதுச்செயலாளராக குத்தோரஸிற்கு, பான் -கி-மூன் பதவியேற்புசெய்து வைத்தார்.


ஐக்கிய நாடுகள் அவையின்அகதிகள் முகமையின்தலைவராகப் பதவிவகிக்கும் குத்தேரஸ், ஐ.நா. அவையின் 9ஆவதுபொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்அடுத்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரைபதவி வகிப்பார்.

NMMS - SYLLABUS

NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கானபாடத்திட்டம்
தேசிய திறனாய்வு தேர்வுக்கானபாடத்திட்டம்

MATHS
1.Number Series
2.Identifying The Wrong Number In The Series

3. Letter Series


  4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type
SAT Syllables
கணிதம்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
அறிவியல்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
*சமூக அறிவியல்*
VII  I Term, II Term, III Term

VIII I Term, II Term Only

BRC அளவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிகளின் தலைப்புக்கு கட்டுரை மாதிரிகள்..



CPS நீக்க கோரி 33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி 3097 மனுக்கள் பெறப்பட்டுள்ளன RTI மூலம் பதில்.



வசூலில் கறாராக இருக்கும் கல்வி அதிகாரி !!தினமலர் -டீ கடை பெஞ்ச்

அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஆள் மாறாட்டத்தை தடுக்கஅனைத்து மத்தியதேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்றுமத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மந்திரி
பிரகாஷ் ஜவடேகர்தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர்கூறியதாவது:-

ஆதார் கார்டை பல்வேறுவி‌ஷயங்களுக்கும்பயன்படுத்தி வருகிறோம். இனி மத்திய அரசுநடத்தும் அனைத்துதேர்வுகளுக்கும் இதை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்என திட்டமிட்டுஇருக்கிறோம்.

இதை எப்படி செயல்படுத்துவதுஎன்பது பற்றிஆய்வு நடந்துவருகிறது. ஆதார்அட்டையில் புகைப்படம்மற்றும் அனைத்துவிவரங்களும் இருப்பதால் இதில் ஆள் மாறாட்டம்செய்ய முடியாது. சில மாநிலங்களில்ஆள் மாறாட்டம்நடப்பதாக தொடர்ந்துபுகார் வந்தவண்ணம் உள்ளன. இனியும் இப்படிநடக்க கூடாதுஎன்பதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநிலங்கள்தவிர, அனைத்துமாநிலங்களிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் மத்தியதேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படும்.

சேவை திட்டங்கள் சம்பந்தமாகஆதார் கார்டைகட்டாயமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டுகூறி உள்ளது. ஆனால், தேர்வுஎன்பது சேவைதிட்டம் அல்ல. ஒரு அடையாளஅட்டையாகத்தான் நாங்கள் ஆதார் கார்டை பயன்படுத்ததிட்டமிட்டுள்ளோம். எனவே, இதுசுப்ரீம் கோர்ட்டுஉத்தரவுக்கு பொருந்தாது.

இதுவரை மத்திய தேர்வுகளைமத்திய செகன்டரிகல்வி வாரியம்நடத்தி வந்தது. இனி, தேர்வுநடத்துவதற்காகவே தேசிய தேர்வு கல்வியகம் ஒன்றைதொடங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இது சம்பந்தமாகமத்திய மந்திரிசபையில்விவாதித்து முடிவு எடுக்கப்படும்.


இனி இந்த வாரியம்மூலம்தான் என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

பணிப்பதிவேடு -சரிபார்ப்பு படிவம்



சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் !!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே கட்டணம்செலுத்த முடியும். மோடி தலைமையிலானமத்திய அரசுபணமில்லாவர்த்தகம்
கொண்டுவர பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் மூலம்ஊழலற்ற இந்தியாவைஉருவாக்க முடியும்என அரசுநம்புகிறது.  இதன் முக்கிய நடவடிக்கையாகசமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக
அறிவித்தது. இதன் மூலம்பணம் பதுக்கிய, பண முதலைகள்தங்களின் கள்ளப்பணத்தைவெள்ளையாக மாற்றபகீர பிரயத்தனம்செய்ய முயற்சிசெய்து வருகின்றனர். ஆனால் , வருமானவரி மற்றும்அமலாக்க துறையினரின்கடும் நடவடிக்கையால்நாடு முழுவதும்கோடி, கோடியாகபணம் , கிலோகணக்கில் தங்கம்பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.மத்தியஅரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே பள்ளிக்கட்டணம்செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாகபெற்று கொள்ளமுடியாது , இந்த முறை வரும் ஜனவரிமாதம் 17 ம்தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர்ஜோசப் இம்மானுவேல்அனைத்து பள்ளிதலைமைநிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜனவரி மாதம் 17 ம்தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இகட்டணம் செலுத்தும்முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல்போனே உங்களின்வங்கி என்று, வாலட், டெபிட்கார்டு, ஸ்வைப்பிங்மூலம் பணமில்லாவர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாகநாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்தியஅரசு துறைகளும், அரசு சார்ந்தஅமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன.

(14.12.2016) இன்று காலை 11.00 மணியளவில் மனித உரிமைகள் குறித்த உறுதி மொழி எடுக்க வேண்டும் !!

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை

இணையதள சேவை பாதிப்பால்குரூப் 1 தேர்வுக்குவிண்ணப்பிக்க
முடியாத நிலை ஏற்பட்டதுதமிழ்நாடுஅரசுப் பணியாளர்தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சிகுரூப் 1 பதவியில்அடங்கிய 85 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துதேர்வை பிப்ரவரி19ம்தேதிநடத்துகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க  டிசம்பர் 12ம் தேதிகடைசி நாள்என்று அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் வர்தா புயல் தாக்க தொடங்கியதுஇதுநேற்றுமுன்தினம் 3 மாவட்டங்களைதுவம்சம்  செய்ததுஇதனால் செல்போன்சேவைஇணையதளசேவை உள்ளிட்டஅனைத்துசேவைகளும்முடங்கியது.


ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாதநிலை ஏற்பட்டதுஅது மட்டுமின்றிமக்களின்இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதுஇணையதளம் சேவைதுண்டிப்பால்  குரூப்தேர்வுக்கு 2 நாட்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனதுஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளதுஎனவேதேர்வுக்கு  விண்ணப்பிக்கும்தேதியைடிஎன்பிஎஸ்சிநீட்டிக்க வேண்டும்என்ற கோரிக்கைவலுத்துள்ளதுஆனால்டிஎன்பிஎஸ்சியில்இருந்து எந்தவிதஅறிவிப்பும் வராததால்  தேர்வர்கள் குழப்பத்தில்உள்ளனர்.

அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்

தமிழகத்தில் அரசு மற்றும்உதவி பெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசு சார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும்பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார்செய்யும் பணிகள்நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்துவருவதால், சைக்கிள்வினியோகம் செய்வதில்காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள்திறந்த பிறகு, இலவச சைக்கிள்வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா

எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்'
முறையில் மாற்றம்கொண்டு வரும்வகையில், கல்விஉரிமை சட்டத்தில்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது,'' என, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கும் முறை தற்போதுஉள்ளது. இந்தகொள்கையில் மாற்றம் செய்யும அதிகாரம், மாநிலங்களுக்குஅளிக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வி உரிமைசட்டம், திருத்தம்செய்யப்பட உள்ளது.மத்திய அமைச்சரவைகூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின், மசோதா தாக்கல்செய்யப்படும். ஒரு மாணவனுக்கு, ஓராண்டு காலம்வீணாகக் கூடாது. அதனால், ஆண்டுதேர்வில் தோல்விஅடையும் மாணவனுக்குஇடைப்பட்ட காலத்தில்மறுவாய்ப்பு அளித்து, கல்வியைத் தொடர வாய்ப்புஅளிக்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ., எனப்படும்மத்திய கல்விவாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்புமாணவர்களுக்கு, மீண்டும் பொதுத் தேர்வு கொண்டுவருவது குறித்து, இம்மாத இறுதியில்நடக்கும் சி.பி.எஸ்.இ., கூட்டத்தில்முடிவு செய்யப்படும். அடுத்த கல்வியாண்டுமுதல், சி.பி.எஸ்.இ., 10ம்வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!

மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம்
நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கானபணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.
இதன்அடிப்படையில் மாணவர்களின் பெயர், புகைப்படம், பெற்றோர் பெயர், மாணவரின் ஜாதி, பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் ஆன் -லைனில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கான&'ஸ்மார்ட்கார்ட்&' வழங்கும் பணிகளும் இதன் அடிப்படையில் துவங்கப்பட்டது. இதுவரை, பதிவுகள் மட்டுமே செய்யப்படுகிறதே தவிர, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவசர கதியில், சுற்றறிக்கை அனுப்பி, மாணவர்களின் விவரங்களை அடிக்கடி கேட்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர்.
தற்போதுஇப்பணிகளில் கூடுதலான பிரச்னையும் கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரப் பட்டியல் மற்றும் தேர்வுதுறைத்துக்கு அனுப்பப்படும் பெயர் பட்டியலையும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் அனுப்ப கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பட்டியல் அனுப்பப்பட்ட பல பள்ளிகளுக்கு அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.மாணவர்களின் பெயருக்கு பின்னால், புள்ளி வைக்கப்பட்டுள்ளதும், இடையில் கமா இருப்பதையும் காரணமாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும், தேர்வுத்துறைக்கான பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பதால், தலைமையாசிரியர்கள்குழப்பமடைந்தனர்.

கல்வித்துறைபுள்ளிகள் இல்லாமல் பெயர்களை அனுப்பும் படியும், பெயர் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாதென தேர்வுத்துறை அறிவிப்பதாலும், செய்வதறியாது திண்டாடி வருகின்றனர் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள். இப்பிரச்னையால், பள்ளிகளின் செயல்பாடுகளைக்கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறை ஏற்படும் இவ்வாறான குழப்பங்களால், பள்ளிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு

Image may contain: text

ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Image may contain: text

RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.

THANKS: MR.A.JAYAPRAKASH
  தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லையென நிதித்துறை பதில்
வழங்கி உள்ளது. அதன்விவரம் பின்வருமாறு
பழைய ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம், பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின்கணவன் (அ) மனைவிக்கு
மாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை
ஓய்வூதியம், ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்,
மற்றும் இரக்க ஓய்வூதியம்என்னும் ஓய்வுபெறும் தன்மைக்குஏற்ப 7 வகையான ஓய்வூதியம் நடைமுறையில் தமிழகஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்ததிரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமென, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளஅரசாணை எண்(ம) நாளைகுறிப்பிடவும்,
மேலும் இந்த அரசாணையின்நகலை வழங்கவும். என்று தமிழகஅரசின் நிதித் துறைக்கு 26.09.2016 நாளிட்ட மனுவில்வரிசை எண்1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன்கீழ் கடிதம்அனுப்பினார். நிதித் துறையின் கடித எண்.53857/நிதி(PGC-1)/2016 நாள்:24.10.2016. என்ற கடிதத்தில்மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்குஅரசாணை இல்லைஎன பதில் வழங்கப்பட்டுள்ளது.

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திரஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,விருப்ப ஓய்வூதியம், இயலாமைஓய்வூதியம் ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்மற்றும் இரக்கஓய்வூதியம் என்னும் 7 வகையான ஓய்வூதியம் வழங்குவதுதொடர்பாக தமிழகஅரசிடம் அரசாணைஇல்லை.

அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால்அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

FLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்

மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்குமீண்டும் குழு அமைக்கப்படும்

புதிய தேசிய கல்வி வரைவு கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது. இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்வி வரைவு கொள்கையை கடந்த மே மாதம் சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலான அம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவு கொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டி அமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறி உள்ளார்.அவர் அளித்த பேட்டியில்,

‘‘சிறந்த கல்வியாளர்கள் கொண்ட புதிய குழு இன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில் அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றை மேற்கொள்ள அரசுதயங்குவதாக ஏற்கனவே சுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழு அமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா என அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின் வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

CBSE., பள்ளிகளில் கரன்சிக்கு 'நோ '

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்த முடியும். மோடி தலைமையிலான மத்திய அரசுபணமில்லா வர்த்தகம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் மூலம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என அரசு நம்புகிறது. 
இதன் முக்கிய நடவடிக்கையாக சமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக அறிவித்தது. இதன் மூலம் பணம் பதுக்கிய, பண முதலைகள் தங்களின் கள்ளப்பணத்தை வெள்ளையாக மாற்ற பகீர பிரயத்தனம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் , வருமான வரி மற்றும் அமலாக்க துறையினரின் கடும் நடவடிக்கையால் நாடு முழுவதும் கோடி, கோடியாக பணம் , கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே பள்ளிக்கட்டணம் செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாக பெற்று கொள்ள முடியாது , இந்த முறை வரும் ஜனவரி மாதம் 17 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து பள்ளிதலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி மாதம் 17 ம் தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இ கட்டணம் செலுத்தும் முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல் போனே உங்களின் வங்கி என்று , வாலட், டெபிட் கார்டு, ஸ்வைப்பிங் மூலம் பணமில்லா வர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாக நாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்திய அரசு துறைகளும், அரசு சார்ந்த அமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. 

பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!

மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கானபணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.இதன் அடிப்படையில் மாணவர்களின் பெயர், புகைப்படம், பெற்றோர் பெயர், மாணவரின் ஜாதி, பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் ஆன் -லைனில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கான &'ஸ்மார்ட் கார்ட்&' வழங்கும் பணிகளும் இதன் அடிப்படையில் துவங்கப்பட்டது. இதுவரை, பதிவுகள் மட்டுமே செய்யப்படுகிறதே தவிர, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவசர கதியில், சுற்றறிக்கை அனுப்பி, மாணவர்களின் விவரங்களை அடிக்கடி கேட்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர்.தற்போது இப்பணிகளில் கூடுதலான பிரச்னையும் கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரப் பட்டியல் மற்றும் தேர்வுதுறைத்துக்கு அனுப்பப்படும்பெயர் பட்டியலையும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில்அனுப்ப கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பட்டியல் அனுப்பப்பட்ட பல பள்ளிகளுக்கு அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் பெயருக்கு பின்னால், புள்ளி வைக்கப்பட்டுள்ளதும், இடையில் கமா இருப்பதையும் காரணமாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும், தேர்வுத்துறைக்கான பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பதால், தலைமையாசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

கல்வித்துறை புள்ளிகள் இல்லாமல் பெயர்களை அனுப்பும் படியும், பெயர் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாதென தேர்வுத்துறை அறிவிப்பதாலும், செய்வதறியாது திண்டாடி வருகின்றனர் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள். இப்பிரச்னையால், பள்ளிகளின் செயல்பாடுகளைக்கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறை ஏற்படும் இவ்வாறான குழப்பங்களால், பள்ளிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

CPS NEWS: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரம்பிற்குள் PFRDAவின் ஓய்வூதிய நிதி மேலாளர் UTI இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விபரம் வழங்க இயலாது. RTI பதில்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான (NMMS) பாடத்திட்டம்

MAT Syllabus

1.Number Series
2.Identifying The Wrong Number In The Series
3. Letter Series
4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type

SAT Syllables

கணிதம்
VII I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

அறிவியல்

VII I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

சமூக அறிவியல்

VII I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா

பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கை ஒன்றை மாநில அரசு வெளியிட்டு உறுதி கூறியிருந்தது.
அறிவிக்கை வெளியிட்டு 5 மாதங்கள் ஆகியும் பணியை முறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக ஆர்ப்பாட்டம் செய்து வந்த ஒப்பந்தப் பணி ஆசிரியர்கள், நிதியமைச்சர் பிரதீப் குமார் அமத், உள்ளாட்சித் துறை அமைச்சர் அருண் சாஹு, மின் துறை அமைச்சர் பிரணாப் தாஸ், உணவுத் துறை அமைச்சர் சஞ்சய் தாஸ் வர்மா, சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் விக்ரம் கேசரி அரூகா, பள்ளிக் கல்வி அமைச்சர் தேவிபிரசாத் மிஸ்ரா ஆகிய 6 அமைச்சர்களின் இல்லங்களை செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பணியை உடனடியாக நிரந்தரம் செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மாநிலப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூறியதாவது:
பணிநிரந்தரம் தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டு ஐந்து மாதங்களாகிவிட்டன. பணியை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பணி வரன்முறைக்கான வழிகாட்டுதல்களில் ஒடிஸா ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அரசு நிபந்தனை விதிக்கிறது. இதனால் ஒப்பந்தப் பணியில் இருக்கும் சுமார் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநிரந்தரம் செய்யப்படாமல் போகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மூன்றடுக்கு ஊராட்சித் தேர்தல் பணியைப் புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 14.12.2016 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.