யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு

வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராகபோர்ச்சுகல் நாட்டின்
முன்னாள் பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தற்போதைய பொதுச்செயலாளர் பான்கீ மூன்பதவி பிரமாணம்செய்து வைத்தார்.

ஐக்கிய நாடுகள் அவையில்தற்போதைய பொதுச்செயலாளராகதென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன்பதவி வகித்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்புவகிக்கும் பான்கி மூனின்பதவிக் காலம்வரும் டிசம்பர்31-ம் தேதியுடன்நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறுகட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர்பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதிகட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில்புதிய பொதுச்செயலாளரைதேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்கடந்த அக்டோபர்5-ம் தேதிரகசிய வாக்கெடுப்புநடத்தப்பட்டது.

இதில், போர்ச்சுகலின் முன்னாள்பிரதமர் அந்தோனியோகுத்தேரஸ் ஐ.நா. புதியபொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின்புதிய பொதுச்செயலாளராகஅந்தோனியோ குத்தேரஸ்நேற்று பதவியேற்றார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின்நகல் அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. 9-வது பொதுச்செயலாளராக குத்தோரஸிற்கு, பான் -கி-மூன் பதவியேற்புசெய்து வைத்தார்.


ஐக்கிய நாடுகள் அவையின்அகதிகள் முகமையின்தலைவராகப் பதவிவகிக்கும் குத்தேரஸ், ஐ.நா. அவையின் 9ஆவதுபொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்அடுத்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரைபதவி வகிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக