யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

CBSE., பள்ளிகளில் கரன்சிக்கு 'நோ '

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்த முடியும். மோடி தலைமையிலான மத்திய அரசுபணமில்லா வர்த்தகம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் மூலம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என அரசு நம்புகிறது. 
இதன் முக்கிய நடவடிக்கையாக சமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக அறிவித்தது. இதன் மூலம் பணம் பதுக்கிய, பண முதலைகள் தங்களின் கள்ளப்பணத்தை வெள்ளையாக மாற்ற பகீர பிரயத்தனம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் , வருமான வரி மற்றும் அமலாக்க துறையினரின் கடும் நடவடிக்கையால் நாடு முழுவதும் கோடி, கோடியாக பணம் , கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே பள்ளிக்கட்டணம் செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாக பெற்று கொள்ள முடியாது , இந்த முறை வரும் ஜனவரி மாதம் 17 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து பள்ளிதலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி மாதம் 17 ம் தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இ கட்டணம் செலுத்தும் முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல் போனே உங்களின் வங்கி என்று , வாலட், டெபிட் கார்டு, ஸ்வைப்பிங் மூலம் பணமில்லா வர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாக நாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்திய அரசு துறைகளும், அரசு சார்ந்த அமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக