யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/8/18

TRB - சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், மற்றும் இசை பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான,டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு ஆசிரி யர்களுக்கான தேர்வை நடத்தும், தேர்வுத்துறையோ, தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என, அறிவித்துள்ளதால், தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியில், தமிழ் வழி சான்றிதழ் பெற முற்பட்டனர்; அதுவும் முடியவில்லை.மேலும், அரசு தேர்வுத்துறை மட்டுமே, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை நடத்தியது. ஆனால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பிலும், இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி, சிலர் சான்றிதழ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்துஉள்ளனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்குமா; தள்ளி வைக்கப்படுமா என, தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.'வழக்கு உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, கலை ஆசிரியர் நல சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது

1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை :

சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் உள்ளிட்ட கோர்ட்டுளில் 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 056 வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 92 ஆயிரத்து 766 வழக்குகளும், ஐகோர்ட்டுகளில் 39 ஆயிரத்து 66 வழக்குகளும், சுப்ரீம்கோர்ட்டில் 6 ஆயிரத்து224 வழக்குகளும் உள்ளன.

பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மேலும் மறை முக வரி ஏய்ப்பு வழக்குகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம்31-ம் தேதி வரையில் 44 ஆயிரத்து 077 ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஆயிரத்து 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக பழமையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்காக1973-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இணையதள பெயர்கள்; விரைவில் அமலுக்கு வருகிறது

பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் வசதி, விரைவில் அமலுக்கு வரவுள்ளது. 
டி.என்.எஸ்., எனப்படும், உலகளாவிய, இணையதள பெயர் சூட்டும் நடைமுறையை, ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், பெயரிடல் மற்றும் எண்களுக்கான இணையதள கழகம் என்ற நிறுவனம் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் இணையதள பெயர் சூட்டும் நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி ஆகிய ஒன்பது, இந்திய மொழிகளில், இணையதளங்களுக்கு பெயரிடும் பணிகள் நடக்கின்றன. இதை, ஐ.சி.ஏ.என்.என்., நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர், சமிரான் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தமிழ் தொடர்பான இணையதளங்களின் பெயர்களை, தமிழிலேயே தட்டச்சு செய்து, பெற முடியும். தற்போதைய நடைமுறையில், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ளது.

உலக மக்கள் தொகையில், 52 சதவீதம் பேர், இணையதளம் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள, ஆங்கிலம் தெரியாத, 48 சதவீத மக்கள், அவர்களின் சொந்த மொழிகளில் தட்டச்சு செய்து இணையதளத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், சமிரான் குப்தா கூறினார்.

வேளாண் கல்லூரிகளில் 358 இடங்கள் காலி

வேளாண் இளங்கலை படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு
நிறைவடைந்தது. தனியார் கல்லுாரிகளில், 358 அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் காலியாக உள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலையின்,
14 உறுப்பு கல்லுாரிகள், 26 இணைப்புக் கல்லுாரிகள் வாயிலாக,
12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 - 19ம்
கல்வியாண்டுக்கு, 3,422 இடங்களுக்கு, 42 ஆயிரத்து, 676 பேர்
விண்ணப்பித்திருந்தனர்.


வேளாண் பல்கலை டீன் மகிமை ராஜா கூறியதாவது:
சிறப்பு ஒதுக்கீடுகள், தொழில் கல்வி,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 7
முதல், 18 வரை நடந்தது. இதில், 2,672 இடங்கள் நிரப்பப்பட்டன.
ஜூலை, 31 முதல் ஆக., 10 வரை நடந்த, இரண்டாம் கட்ட
கலந்தாய்வில், 392 இடங்கள் நிரப்பப்பட்டன; உறுப்பு
கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பின. இணைப்பு
கல்லுாரிகளில், 65 இடங்கள், பல்கலையால் நிரப்பப்படும்
 நிலையில், 358 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.இளநிலை
முதலாமாண்டு மாணவர்களுக்கு, இன்று கல்லுாரி துவங்குகிறது.
ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில், மாலை, 5:00 மணிக்குள்
மாணவர்கள், சேர்க்கை பதிவு செய்ய வேண்டும்

போலீஸ் தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில், இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, 2017ல், அறிவிப்பு வெளியானது.இதற்கான எழுத்து தேர்வு, இந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது; 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றோரின் விபரமும், இட ஒதுக்கீடு ரீதியிலான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரமும், மாவட்ட வாரியாக, www.tnusrb.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியோர், தங்களுக்குரிய ரகசிய எண்களை பதிவேற்றம் செய்து, மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சுதந்திர தினத்தில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை Photo எடுத்து Workplace @ Facebook இல் வெளியிட உத்தரவு.

சுதந்திர தினத்தன்று விழா முடிந்ததும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
பள்ளிக்கல்வி துறை சார்பில், இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்
72வது சுதந்திர தினத்தை வரும் 15ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும், சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும், அவர்கள் பட்ட இன்னல்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வு பூர்வமாக கொண்டாட வேண்டும்
பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்துதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது
நடப்பு கல்வி ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்
எனவே, ஆண்டுதோறும் இதனடிப்படையில், இந்தியாவின் 72வது சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தில் மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள் மற்றும் அடைவு திறன் குறித்தும், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள்(மின்னல் கல்விச் செய்தி) குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளை கேட்டறிதல் சார்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.நிகழ்ச்சிகள் நிறைவுற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்பட்டது தொடர்பான புகைப்படங்களை தலைமையாசிரியர்களது ''லாக் இன்'' மூலம், ''ஒர்க் பிளேஸ்''ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 ஜூன் 2018 துணைத் தேர்வு முடிவுகள் இன்று அரசு தேர்வுத்துறை இணையதளத்தில்

சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
'குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூவேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு, 2017ல், தமிழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதாவது, மொபைல் போனில், 'ப்ளூவேல்' என்ற, ஆன் லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்தால் போதும். அவர்களுக்கு, 50 நாட்களுக்கு, 'டாஸ்க்' தரப்படும்.கட்டளைகள் உதாரணமாக, 'உன் கையில் பிளேடால், மூன்று முறை கிழித்துக் கொள்; அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலையில் பேய் படம் பார்; 'செல்பி' எடுத்து அனுப்பு. 'நள்ளிரவில், ரயில்வே டிராக்கில் நில்; அந்த, 'வீடியோ' காட்சியை, சமூக வலைதளங்களில் பதிவேற்று. உயரமான கட்டடம் மற்றும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்' என, அடுக்கடுக்காக, கட்டளைகள் பிறப்பிக்கப்படும். இதை எல்லாம் செய்யமாட்டேன் என்று, சொல்ல முடியாது. ஏனெனில், இந்த ஆன்லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்யும் போதே, உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும், இந்த விளையாட்டு தொடர்பான, சர்வருக்கு சென்று விடும். 'டாஸ்க்கை செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மிரட்டல் வரும். மொபைல் போன்களை, 'ஹேக்' செய்பவர்களால் நடத்தப்பட்டு வந்த, இந்த விளையாட்டால், பலர் பலியாகினர். தமிழகத்தில், மதுரையை சேர்ந்த, விக்கி, 19 என்ற, தனியார் கல்லுாரி மாணவர், 'ப்ளூவேல்' விளையாட்டில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, புளூவேலுக்கு நிகராக, ஆன்லைனில் விளையாடக் கூடிய, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி உள்ளான். இந்த விளையாட்டிற்கான இணைய இணைப்பு, 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.
கண்காணிக்க வேண்டும் : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இணையதளம் வழியாக தகவல் திருட்டில் ஈடுபடும், ஹேக்கர்களால், 'ஆன் லைன்' விளையாட்டிற்கான, 'ஆப்'வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ப்ளூவேல், மோமோ என, பல்வேறு பெயர்களில், 'ஆப்'கள் துவங்கி, பலவீனமானவர் களை தற்கொலைக்கு துாண்டி வருகின்றனர். இதுபோன்ற விளையாட்டு களை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெற்றோர், தங்கள் குழந்தைகள், நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கணினி மற்றும் மொபைல் போனில், நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனரா என, பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவர்களுடன் பேசி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, 
ஓவியம், தையல், மற்றும் இசை பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு ஆசிரி யர்களுக்கான தேர்வை நடத்தும், தேர்வுத்துறையோ, தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என, அறிவித்துள்ளதால், தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியில், தமிழ் வழி சான்றிதழ் பெற முற்பட்டனர்; அதுவும் முடியவில்லை.மேலும், அரசு தேர்வுத்துறை மட்டுமே, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை நடத்தியது. ஆனால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பிலும், இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி, சிலர் சான்றிதழ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் எழுந்து உள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்துஉள்ளனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்குமா; தள்ளி வைக்கப்படுமா என, தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.'வழக்கு உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, கலை ஆசிரியர் நல சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.

பள்ளியில் இறை வணக்க கூட்டம் மாணவர்களுக்கு இனி கட்டாயம்

பீஹார் மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில் நடக்கும் இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

பீஹார் மாநிலத்தில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநில கல்வித் துறையின் முதன்மை செயலர், ஆர்.கே.மஹாஜன், மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில், கண்டிப்பாக, இறை வணக்கக் கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தவறாது பங்கேற்க வேண்டும்.இதன் மூலம், மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நேர தவறாமை அதிகரிக்கும். இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகள், பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்க வேண்டும்.இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்னெறி கதைகளை கூற வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரக் கூடிய அளவில், அறிவுரைகள் வழங்க வேண்டும். மேலும், வகுப்பு அட்டவணையில், கடைசி பாடவேளையை, விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை- வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர்கழக கூட்டம் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க உத்தரவு


கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்

கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளாக கல்வித் துறையில் வாராக் கடன்கள் ஏற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 
வரையில் கல்வித் துறையிலுள்ள செயல்படா சொத்துகளின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்படி, கல்வித் துறையில் வாராக் கடன்கள் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.3 விழுக்காடும், பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.67 விழுக்காடும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 8.67 விழுக்காடும் அதிகரித்துள்ளது.  2017-18ஆம் ஆண்டில் கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.71,724.65 கோடியாக இருந்துள்ளது. இதில் ரூ.6,434.62 கோடி வாராக் கடன்களாக இருந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 7.86 லட்சம் மாணவர்களுக்கு ரூ.13,470 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களை பொதுத் துறை வங்கிகள் வழங்கியுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.5 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த 99,314 மாணவர்களும், கர்நாடகாவைச் சேர்ந்த 90,630 மாணவர்களும் கல்விக் கடன் பெற்றுள்ளனர்.