யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/12/16

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது

TET சிலபசில் மாற்றம் வருமா ? -ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

TET சிலபசில்மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
ஆசிரியர்தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாடவாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற
கோரிக்கை வலுத்துள்ளது.
மத்தியஅரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர்தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது.



  இந்த அறிவிப்புக்கு, தமிழகஅரசு,2011 நவ., 11ம் தேதியில்தான், அரசாணை வெளியிட்டது.ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்ததேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்தவேண்டும்.அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சிபெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும்.


 இதனால், 2011 ஆக., 23ம் தேதிக்குமுன்பு, சீனியாரிட்டி அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்புநடைமுறைகள் முடித்தவர்களுக்கு, டெட் தேர்வில் இருந்துவிலக்குஅளிக்கப்பட்டது.இதற்கு பின் பணியில்சேர்ந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுதவேண்டியது அவசியம். ஆனால் தமிழகத்தில், கடந்தமூன்றரை ஆண்டுகளாக,தேர்வு நடக்கவில்லை. இதனால், நிபந்தனை காலம் முடிந்தும், டெட்தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர்கள்கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:டெட்தேர்வு வினாத்தாள் படி, சமூக அறிவியல்பாடத்திற்கு மட்டும் 60 மதிப்பெண்களும், மற்ற பாடவாரியான பகுதிகளுக்கு, 30 மதிப்பெண்கள் மற்றும் உளவியல் பாடத்திற்கு, 30 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதற்குபதிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யும், முதன்மைபாடத்திற்கு, 60 மதிப்பெண்களும், மற்ற பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் இடம்பெறும்படி, வினாத்தாள் திட்ட முறையை, மாற்றியமைக்கவேண்டும். மேலும், டெட் என்பது, தகுதியை நிரூபிக்கும் தேர்வு தான்.

வேறு பள்ளிக்குப் போகச் சொன்னால் நடவடிக்கை - பள்ளிக்கல்வி இயக்குனர்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ’ஸ்லோ லேனர்ஸ்’ எனப்படும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பொதுதேர்வு எழுத அனுமதிக்காமல், அவர்களை வேறு பள்ளிக்குப் போகச் சொல்லி, கட்டாயப்படுத்தி வருகின்றன பல பள்ளிகள். இந்நிலையில், கல்வித்

தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, இக்கல்வி ஆண்டு வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் அதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தள்ளிவைப்பு ஏன்?

அண்மையில் உயர் நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்தது. அவர்கள் ஆளும்கட்சியின் பிரமுகர்களாக இருப்பதால் அவர்களின் நியமனத்தை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த உறுப்பினர்கள் தலைமையில்தான் நேர்முகத் தேர்வு குழுக்கள்

அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி களுக்கான நேர்முக உதவியாளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான நேர்காணல் தள்லீ வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதி களுக்கான நேர்முக உதவியா ளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14,15 மற்றும் டிசம்பர் 7, 14, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாகக் காரணங் களுக்காக நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.