யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/7/18

சிறுபான்மையினர் பகுதிகளில் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது; அதன் விபரம்:சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர், பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்.இதன் மூலம், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கல்வியறிவு பெறுவர். முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில், உருது நடுநிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். அங்கு, தாய்மொழியாக உருது இருக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாளில் கூட்டல் பிழை : ஆசிரியர்கள் உட்பட, 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்'

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின், தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகின. இந்தத் தேர்வை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய, சலுகை வழங்கப்பட்டது.இந்த சலுகையை பயன்படுத்தி, 2,500க்கும் மேற்பட்டவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள், இரு வாரங்களுக்கு முன் வெளியாகின. அதில், 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது.இந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை ஆய்வு செய்து, அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் யார் யார் என, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட, 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேர்வுத்துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 

எந்த தரவரிசைக்கு எந்த இன்ஜி., கல்லூரி? : 3 ஆண்டு விபரம் வெளியிட்டது பல்கலை

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது. இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும். 

கால்நடை மருத்துவ படிப்பு : இன்று தரவரிசை பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம் போன்ற
படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன. அதேபோல, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற, பி.டெக்., படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 12 ஆயிரத்து, 217 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இன்று காலை, வெளியிடப்படுகிறது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் வெளியிட உள்ளார்.

நீட் தேர்வு: வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள்  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை

* நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? 

* நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

* தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தையை, தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்கபட்டுள்ளதா?

* கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும்.

* சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு படம் கற்பிக்கப்படுகிறதா?

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

*IT returns தொடர்பான விளக்கங்கள்

நமதுநண்பர்கள் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:

✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

✍🏻 *அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*.

✍🏻 ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

✍🏻 தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் *2.5லட்சத்தை தாண்டினால்* கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.

✍🏻 சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.

✍🏻 *அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது*

✍🏻 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர்.

மேலும் ஒருசில ஊழியர்கள்

✍🏻 *சம்பளம் தவிர*
Fixed Deposits,
Shares,
Mutual Fund
உள்ளிட்ட *பிற முதலீடுகள்* ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் *வட்டி, டிவிடென்ட்* போன்ற *ஆதாயத் தொகையும்* *26as படிவத்தில் update ஆகும்*.

✍🏻 அந்த ஆதாயத் தொகைக்கான வரியையும் நாம் *தனியாக செலுத்த வேண்டும்* அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),
குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31*

*கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.*