யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/8/17

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

அரசுபள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும்
கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2012ல், தமிழக அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதலில், 5,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பின், 2014ல், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, 700 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்க, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு, 9,200 ரூபாய் மாத ஊதியம் நிர்ணயித்துள்ளது. அந்த தொகையை, தமிழக அரசு முறையாக பெற்று, அதை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

FLASH NEWS : JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்



மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த
வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்தவேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இம்மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதுடன் தமிழகம் முழுவதும்  சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒரு நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்த 3-வது கட்டப் போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளோம்.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம், மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை' என்றார்.

முதல்வருடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: செங்கோட்டையன்

ஈரோடு: வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ந் தேதியன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஆனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ஆண்டு 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

அந்தமாணவர்கள் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.’

சி.பி.எஸ். என்றால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அலறியடித்து
ஓடுகிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது சி.பி.எஸ்.சில்.
.பி.எஸ். என்றதும் ஏதோ ஒரு கல்வித்திட்டம் என்று நினைக்க வேண்டாம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம்தான் சி.பி.எஸ்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ‘கான்ட்ரிபியூட்டரி பென்சன் ஸ்கீம்’ என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

சி.பி.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், இதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அமல்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லை.

சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து உள்ளது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியபோது இந்த கோரிக்கை முதலிடத்தை பிடித்து இருந்தது. தற்போது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டமும், 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடத்த இருக்கும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே முக்கிய கோரிக்கையாக கூறப்பட்டு உள்ளது.

தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த சில விமர்சனங்கள் இருந்தாலும், ஊழியர்களிடம் அதற்கான எதிர்ப்பு எதுவும் இல்லை.

இந்தநிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, பணியில் இருந்தபோது உயிரிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே முதல் அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது.

விபத்தில் இறக்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று யாருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

எனவேஜேக்டோ-ஜியா போன்ற அமைப்புகள் இதுபற்றிய ஆய்வினை நடத்தியபோது, 2004-ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகைக்கான கணக்கு என்னவானது என்றே தெரியவில்லை என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டம் அளித்த பல்வேறு கொடைகள், பண பலன்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

முன்பு அரசு பணியில் சேர்ந்துவிட்டால் ஓய்வுக்குப்பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஓய்வுக்கு பின்னர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் மட்டுமே ஒரு அரசு ஊழியரின் வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது. அதுவே இல்லை என்கிறபோது பணியில் பிடிப்பு இல்லாத நிலையில் இருப்பதாகவே பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தெரிவிக்கிறார்கள்.


எத்தனையோ போராட்டத்துக்கு பின்னரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படாமல், ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்வதை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அலறுகிறார்கள்.

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடுமுழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை
மத்திய அரசு கேட்டுள்ளது.
மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.


இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்  21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் 
கருத்துகளை கேட்க உள்ளது.

தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில், அரசும், ஊழியர்களும், ஓய்வூதிய தொகையை பங்கிட்டுச் செலுத்த வேண்டும்.ஆனால், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, 14 ஆண்டுகளான நிலையில், ஊழியர்களின் பங்களிப்பு தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஊழியருக்கான முழுப் பலன் வழங்கப்படவில்லை.

'இது, பாதுகாப்பில்லாத திட்டம்' எனக் கூறி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இதை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2016 பிப்ரவரியில், தொடர் போராட்டமும் நடத்தினர். அதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, வல்லுனர் குழுவை அரசு அமைத்தது.இக்குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது தலைமையில், வல்லுனர் குழுவினர், 21ம் தேதி முதல், மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினரின் கருத்துக்களை கேட்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ( GRAFF ) பத்திரிக்கை செய்தி!

JACTO - GEO | 22.08.2017 ONE DAY STRIKE - REG NEW PRESS RELEASE




JACTO-GEO ASSOCIATION -NEW LIST....

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை

கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர்
பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார், 'டிவி'க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!!


நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேசி -அரசு ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை -தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் அறிக்கை

நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேசி -அரசு ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை -தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் அறிக்கை

அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்,
நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.
அதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ'வும், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ'வும் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பாக, போராட்டத்தில் குதித்துள்ளன.நாளை, மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பளத்தை உயர்த்துதல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக, போராட்டம் நடக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 10 லட்சம் பேர் வரை, போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாமலும், அரசு அலுவலகங்களில், நிர்வாக பணிகளும் முடங்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், 'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், ஒழுங்கு நடவடிக்கை பாயும். தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர், மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:
ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அஞ்ச மாட்டார்கள்.'எஸ்மா, டெஸ்மா' போன்ற சட்ட நடவடிக்கைகளையே, ஜாக்டோ - ஜியோ சங்கங்கள் எதிர் கொண்டு போராடின. மத்திய அரசின், 'மிசா' காலத்தையும், எதிர்கொண்டவர்கள் ஆசிரியர்கள்.எனவே, திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். சங்க பிரதிநிதிகளை அழைத்து, அரசு பேச்சு நடத்தாவிட்டால், செப்., 7 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடத்துவோம், என்றார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .

முக்கிய தகவல்  2011 ஆம்ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.

பதிவுதாரர்கள் இந்த ஆண்டு தங்களது பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்  அறிவித்துள்ளார்.

Renewal செய்ய தவறிய நண்பர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் இருப்பின் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும்.

என்றாவது எம்ப்ளாயிமெண்ட் கார்டு தேவைப்படும் . அதனால் இதை பயன்படுத்தி கொள்ளவும்.