யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/18

டெபிட் கார்டு, பீம் செயலி சலுகை அமலுக்கு வந்தது

டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் ரூ.2,000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு வர்த்தகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற சலுகை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு கடந்த வாரம் முடிவு செய்தது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "டிஜிட்டல் 2018 மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பீம் செயலி மூலம் நடைபெற்ற பரிமாற்றம் 86 சதவீதம் அதிகரித்து ரூ.13,174 கோடியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
 பொருள்கள் விற்பனையின்போது, டெபிட், கிரெடிட் கார்டு, பீம் செயலி உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்காக வர்த்தகர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இக்கட்டணம், எம்டிஆர் என்றழைக்கப்படுகிறது.


 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில், பொருள்களின் வர்த்தகத்தில் டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகையை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை இச்சலுகையை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

750 தனி ஊதிய முரண்பாடுகளை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு

வருமான வரி கணக்கு உதவி மைய எண் மாற்றம்

ஆண்டு வருமான வரி கணக்கை, 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வோருக்கான உதவி மைய எண் மாற்றப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை, 'இ - பைலிங்' எனும், 'ஆன்லைன்' வழியில் தாக்கல்
செய்வோருக்காக, தனி உதவி மையத்தை வரித்துறை அமைத்துள்ளது. அதற்கு, புதிய எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வருமான வரித்துறையின்,www.incometaxindiaefiling.gov.inஎன்ற இணையளத்தில், ஆண்டு வரி கணக்கை தாக்கல் செய்வோர், 1800 103 0025 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் விளக்கம் பெறலாம். அது போல், 8049 612 2000 என்ற எண்ணிலும், 'இ - பைலிங்' தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை

தமிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற வகுப்பு
மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளை, பல பள்ளிகள் துவக்கியுள்ளன.

இதையடுத்து, 'அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள அனுப்பியுள்ள கடிதம்: மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும்.
கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்தில் பால் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!!

மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
டெல்லி : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்கும் விதமாக மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை அளித்துள்ளது.



அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் இலவச மதிய உணவுத் திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ஏழை மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வி, கற்கவும், பசி இல்லாமல் கல்வியறிவு பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மதியஉணவுத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு வாரம் இரு முறை சத்துணவில் முட்டை, காய்கறிகள், சுண்டல் மற்றும் கலவை சாதங்கள் என்று ஒரு பட்டியலையே ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.


குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இந்நிலையில் நாடு முழுவதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், குழந்தைகள் நல அமைச்சகம் ஆய்வு நடத்தியது. இதில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.




மாநிலங்களுக்கு கடிதம்

பால்வழங்க கடிதம்

இதன்அடிப்படையில் மத்திய வேளாண் அமைச்சகம் இன்று அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்படும் மாநிலங்களில் மாணவர்களுக்கு பாலும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சத்துணவில் பால்

சத்துணவோடு பால்

சத்துணவுடன் பாலையும் சேர்த்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாநிலங்களை மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




மதியஉணவுத் திட்டத்திலே குறை

மதியஉணவே சரியாக தரப்படுவதில்லை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டமே சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல்
வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று     வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!