யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/8/16

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.



இந்த வரிசையில், நான்கு பரிமாணங்களில் படங்களை காட்டும்,மொபைல் போன் ஆப் மற்றும் காணொலி காட்சி குறுந்தகடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆப், ஆண்ட்ராய்ட் போனில், tnschools live என்ற பெயரில், கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:இந்த மொபைல் போன், 'அப்ளிகேஷனை' கேமரா மொபைல் போனில் பயன்படுத்தும் போது, அந்த கேமரா மூலம் புத்தகத்தில் உள்ள அறிவியல் பாட படங்கள் நான்கு பரிமாணமாக தெரியும்.

10ம் வகுப்பில் அறிவியல், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், 141 படங்கள் இந்த தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.இது தொடர்பான, காணொலி காட்சி குறுந்தகடுகள், 6,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.


           
தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர்.

அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.

பணி விடுவிப்பு சான்றிதழ்



மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற,
பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று வித படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள் உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று முன்தினம் கடைசி நாள். மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 'அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்; இம்மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:

ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.

*கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்,  அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.

*ஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய  அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.

சிறப்பம்சங்கள்:

*    தற்போது நடைமுறையில் உள்ள சம்பள விகிதம் மற்றும் தர ஊதியத்தை, ஆணையம் பரிந்துரைத்துள்ள புதிய ஊதிய கணக்கீட்டின்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் நிலை,  அதாவது தர ஊதியம் நிர்ணயிக்கப்படுவது என்பது, தற்போது ஊதிய கணக்கீட்டு அளவுப்படி நிர்ணயிக்கப்படும். அரசு துறையில் இருப்பவர்கள், பாதுகாப்புப் படையினர், ராணுவ செவிலிலியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தனித்தனியாக ஊதிய கணக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுகளின் கொள்கை ஒரே மாதிரியானது.

*    நடைமுறையில் உள்ள அனைத்து அளவுகளும், புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அளவு எதுவும் உருவாக்கப்படவில்லை.அதேபோல, எந்த அளவும் நீக்கப்பட வில்லை. ஒவ்வொரு பதவியிலும் பணியில் அதிகரிக்கும் பங்களிப்பு, பொறுப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக சீரான குறியீட்டை பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*    குறைந்தபட்ச ஊதியம் மாதத்துக்கு ரூ.7000-லிலிருந்து ரூ.18,000-மாக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்க்கப் படும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-மாக இருக்கும். அதாவது, கீழ்நிலையில் முதல்முறையாக சேரும் ஊழியரைவிட, நேரடியாக தேர்வுசெய்யப்படும் முதல் வகுப்பு அதிகாரிக்கு மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும்.

*    ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்துக் காக, தகுதிநிலைகாரணி (fitness factor) 2.57-ஆக இருக்கும். அதாவது, ஊதியம் 2.57 மடங்காக உயரும். இது அனைத்து மட்டத்துக்கும் பொருந்தும்.

*    ஊதிய உயர்வு விகிதம், 3%-ஆக நீடிக்கும். எனினும், அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு தற்போது கிடைப்பதைவிட 2.57 மடங்காக ஊதிய உயர்வு கிடைக்கும்.

* பாதுகாப்புத் துறையினருக்கான ஊதிய கணக்கீட்டில், கூடுதல் பிரிவுகளை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

*    பணிக்கொடைக்கான (Gratuity)  வரம்பு ரூ.10 லட்சத்திலிலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி50% உயரும்போதெல்லாம், பணிக்கொடையின் வரம்பு 25% அதிகரிக்கும்.

*    அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே கட்டமாக வழங்கப்படும் நிவாரண நிதி, பல்வேறு பிரிவுகளில்தற்போதுள்ள ரூ.10 லட்சம்  ரூ.20 லட்சம் என்பது, ரூ.25 லட்சம்  ரூ.45 லட்சமாக இருக்கும்.

*    மருத்துவமனை விடுப்பு, சிறப்பு உடல்ஊன விடுப்பு, உடல்நலக் குறைபாட்டு விடுப்பு ஆகியவை ஒரே பெயரில், அதாவது, பணி தொடர்பான உடல்நலக் குறைபாடு மற்றும் காய விடுப்பு (Work Related Illness and Injury Leave) என்று அழைக்கப்படும். இந்த விடுப்பு எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், மருத்துவமனையில் இருக்கும் காலம் முழுமைக்கும் முழு ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.*    தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 வகையான வட்டியில்லா முன்பணம் தொடரும். அதாவது, மருத்துவ சிகிச்சை,சுற்றுலா அல்லது பணிமாற்றத்துக்கான போக்குவரத்துப்படி, உயிரிழந்த ஊழியர் களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துப்படி, எல்.டி.சி. ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும். மற்ற வட்டி இல்லாத முன்பணங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

*    மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தில் (CGEGIS)  ஊழியர்களின் மாதாந்திர பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஊதிய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை என்று அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

*    ஓய்வூதியம் மற்றும் அதுதொடர்பான பலன்களுக்காக ஆணையம் வழங்கியுள்ள பொதுவான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஆணையம் வழங்கிய அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.

*    ஓய்வூதிய மாற்றம் தொடர்பான இரண்டாவது பரிந்துரையான 2.57 மடங்கு அளவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை, உடனடியாக அமல் படுத்தப்படும். முதலாவது வழிமுறையை பின்பற்றுவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க குழு அமைக்கப்படும்.

*    இந்தக் குழு தனது அறிக்கையை 4 மாதங்களில் அளிக்கும்.அதில், முதலாவது வழிமுறையை அமலாக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தால், அது அமல்படுத்தப்படும்.

*    ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 196 வகையான படிகளையும் ஆணையம் ஆய்வுசெய்தது. இதனை சீராக்கும் வகையில், 51 படிகளை நீக்கவும்,37 வகையான படிகளாக ஒன்றிணைக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதால், படிகள் தொடர்பாக 7-வது ஊதிய ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை விரிவாக ஆய்வுசெய்ய நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழுவை அமைக்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தக் குழு தனது பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, 4 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள படிகள் அனைத்தும், தற்போதைய அளவிலேயே வழங்கப்படும்.

*    இரண்டு தனிப்பட்ட குழுக்களை அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இதில், ஒன்று, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரை களை வழங்கும். இரண்டாவது, 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதால் எழும்பிரச்சினைகளை ஆராயும்.

   * ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிறபரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், நிர்வாக அடிப்படையில், தனிநபர் பதவி விவகாரங்களில் எழும் பிரச்சினைகளை அந்தந்த அமைச்சகங்களே ஆய்வுசெய்வது என மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. ஏனெனில், இந்த விவகாரத்தில் ஊதிய ஆணையத்தால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

*    ஏழாவது மத்திய ஊதிய ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்துவதால், 2016-17-ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.1,02,100 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-16-ஆம் நிதியாண்டில் இரண்டு மாதங்களுக்கு ஊதியம்மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதால், ரூ.12,133 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.

அதில்
1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் கிடையாது.

2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை  விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்றுஉள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது.

உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது. இவற்றை நன்கு புரிநதுகொண்டு பொறுப்பாளர்கள் விழிப்போடு செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பணி நிரவலின்போது ஏதேனும் விதி மீறல்கள் ஏற்பட்டால் உடனே சங்க பொருப்பாளர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

 பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்...நாமும் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்


1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு 

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம் 

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால �
[3:59 AM, 8/7/2016] +91 96552 99169: ட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு
அன்பு நண்பர்களே

தொடக்க கல்வித்துறை யில் பணி நிரவல்,ஒன்றிய அளவில்  பள்ளியில் சேர்ந்த தேதியில் இளையோர் பணி நிரவல் செய்யப்பட்ட வேண்டும்.  .

இயக்குனரின் செயல்முறைகள் 024064 நாள் 22.7.2016 ந் படிதான் செய்யப்பட்ட வேண்டும்.

surplus proceeding படிதான் நடத்த வேண்டும் என வலியுறுத்துங்கள்.