யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/3/18

புதிய அப்டேட்களுடன் வாட்ஸ் அப்!

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது. அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும் வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது. இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.

Blackboard Jungle. | ஆசிரியர் மாணவர் பற்றிய கதை :

நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி.
போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள்.
கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம்.
கற்பித்தலில் ஆர்வமுடன் புதிய ஆசிரியர் வருகிறார். டேடியே என்பது அவர் பெயர்.
மாணவர்களின் ஒழுங்கீனச்செயல்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது‌.
தலைமையாசிரியர் முதல் மூத்த ஆசிரியர்கள் அனைவருமே அவர் கூறுவதை ஏற்காமல் மாணவர்கள் அமைதியானவர்கள் என்று கூறுகின்றனர்.
வகுப்பிற்குப் போ. மாணவர்களைப் பார்த்து நின்று பாடம் நடத்திவிட்டு வந்துவிடு. அவர்களுக்கு உன் முதுகைக் காட்டிவிடாதே. வேறு எதையும் கவனிக்காதே. என்பது மூத்த ஆசிரியரின் அறிவுரை.

ஆசிரியர் மீது எதையாவது எறிவது, அவரின் பொருட்களை உடைத்தெறிந்து, பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ய முயல்வது என்று மாணவர்களின் செயல்கள் அனைத்துமே வன்முறையின் உச்சம்.

இருந்தாலும் தொடர்ந்த முயற்சியால் மாணவர் மனங்களை மாற்ற முடியும் என்று டேடியே நம்புகிறார்.

ஆசிரியருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று அவர் மனைவிக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பார்த்து எழுதக்கூடாது என்று எச்சரிக்கும் போது ஒரு மாணவர் கத்தியைக்காட்டி மிரட்டுகிறார்.
கத்தியைப் பறிக்கும் போராட்டத்தில் ஆசிரியரின் கையில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது.
சிறிய கண்டிப்புடன் அவனையும் அவனது நண்பரையும் ஆசிரியர் மன்னிக்கிறார்.
மாணவர்களிடையே மாற்றம் மலர்கிறது.

வகுப்பறை ஒரு வித்தியாசமான போர்க்களம். குழந்தைகளின் வயதுக்கேற்ற சேட்டைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் தமது பக்குவத்திற்கேற்ப செயல்படவேண்டும். மாற்றம் என்பது நொடியில் மலர்வதல்ல. தொடர்ந்த முயற்சியின் கனி என்பதைச் சொல்லும் படம்
கரும்பலகைக்காடு.

முக்கியக் குறிப்பு.
இந்தப்படம் வெளியான  ஆண்டு 1955.
நாம எவ்வளவு பின்தங்கி இருக்கோம்! நம்ம பசங்க இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க!

- கலகல வகுப்பறை சிவா

பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழக அரசு திரும்பி பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம்!!!

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை :

நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார். 

புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு, நேரடி நியமனம்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண்

எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட் டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். 

2018-2019 ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

உதவித் தொகை
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ITI, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், M.Phil ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த, சீக்கிய, ஜெயின், பார்லி மதத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அனைத்து கல்வி நிலையங்களும் இணைய தளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே 2018 - 2019 ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற முடியும்.

கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்ய CLICK HERE

10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பிளஸ் 1 தேர்வு எழுத முடியாமல் திணறும் மாணவ, மாணவிகள்!!

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு!!!

புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை
ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது