யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/16

திருத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - வருமான வரி செலுத்துவோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

வருமான வரி கணக்குதாக்கலில் திருத்தம்செய்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்என்று வருமானவரி செலுத்துவோருக்குஅதிகாரிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்றுஅறிவிப்பையடுத்து வருமான வரித்துறைக்கு வந்துள்ள படிவங்களில்பல மாற்றங்கள்இருப்பதாகவும், முந்தைய வருமானத்திற்கும், தற்போதைய வருமானத்திற்கும்தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான தொழிலதிபர்கள் வருமானத்தை அதிகரித்துகாட்டியிருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாகவிளக்கம் அளிக்கவேண்டும் என்றுநோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வருமான வரி கணக்குதாக்கலில் திருத்தம்போன்ற நடவடிக்கைகள்மேற்கொண்டால், அபராதம் அல்லது சிறை தண்டனைபோன்றவைகளை சந்திக்க நேரிடும் என்று வருமானவரித்துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்டவீரர் பீலேவின்வாழ்க்கையை சித்தரிக்கும் படம் ‘’பீலே’’. இப்படத்திற்குஇசையமைத்ததற்காக
இசையமைப்பாளர் ஏ.ஆ.ரகுமான்பெயர் ஆஸ்கர்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்கர் விருது வழங்கும்விழா 2017ம்ஆண்டு ஜனவரி26ம் தேதிநடைபெறும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

AIRCEL வழங்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா சலுகை!

 தங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டட்  டேட்டாசலுகைகளை
வழங்குபடியானபுதிய சலுகைஅறிவிப்புகளை  ஏர்செல்வெளியிட்டுள்ளது.
                            

இன்று அந்த நிறுவனம்வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏர்செல் வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளRC 249 என்ற ரீசார்ஜை பயன்படுத்துவதன் மூலம் எல்லாநெட் ஒர்க்குகளுக்கும்அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளைமேற்கொள்ளலாம்.  அதேபோல்அன்லிமிட்டட்  2G டேட்டாவைபயன்படுத்தலாம். 4G  வசதி உள்ள அலைபேசியைபயன்படுத்துபவர்களுக்கு மேலும் 1.5 GB  டேட்டா கூடுதலாக கிடைக்கும்.இதற்கான வேலிடிட்டிஒரு மாதம்ஆகும்.

இதனைப் போலவே RC 14 என்றமற்றொரு ரீசார்ஜும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன்மூலம் எல்லாநெட் ஒர்க்குகளுக்கும்அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளைமேற்கொள்ளலாம். ஆனால் இதற்கான வேலிடிட்டி ஒருநாள்மட்டுமே ஆகும்.


இவ்வாறு அந்த அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில்,
மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.


இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

FLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல் !!

உத்தரப் பிரதேசத்தில்முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையில்
லக்னோவில் நேற்றுஅமைச்சரவை கூட்டம்நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்களுக்கு7வது ஊதியக்குழுபரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆங்கிலபுத்தாண்டு போனசாக அரசு
ஊழியர்களுக்கு சம்பள உயர்வுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர்அகிலேஷ் யாதவ், “ஜனவரி ஒன்றாம்தேதி முதல்அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின்பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய்கூடுதல் சுமைஏற்படும். எனினும்இதன் மூலம்லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.

2017-ம் ஆண்டு ஜூன்மாதம் 10-ம்தேதி நடைபெறஉள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தைமத்திய அரசுவெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு:  1956 ஆம்ஆண்டு இந்தியமருத்துவ சபைசட்டம் மற்றும்2016ம் ஆண்டதிருத்தி அமைக்கப்பட்டசட்டம் 10வதுபிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச்சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வினை தேசியதேர்வுகள் வாரியம்நடத்த உள்ளது.

பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில்இந்த தேர்வு2017 ஜூன் மாதம்10-ம் தேதிநடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலானதேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில்இந்திய மருத்துவக்கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால்நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின்சுகாதார குடும்பநலத்துறை அமைச்சகத்தின்முன் அனுமதியைப்பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத்தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கானஒற்றைச் சாளரநுழைவுத் தேர்வுஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைபருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்தவகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபைசட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள்அளவிலோ எந்தஒரு பல்கலைக்கழகம்/ மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு செல்லுபடிஆகாது. 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்புபாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ஆகும்.
2017-ம் கல்வி ஆண்டுக்கானஇந்தத் தேர்வில்நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ளடி.எம்/ எம்.சிஹெச்/ பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவைஅடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின்கீழ் வராதநிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானநிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்டமேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரிஜிப்மர் ஆகியநிறுவனங்கள் NEET-SS –ன் கீழ்வராது.

தேசிய தேர்வுகள் வாரியம்மத்திய அரசால்1982-ம் ஆண்டுஉருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்தியஅடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவதுஅதன் முக்கியநோக்கமாகும். தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்டமேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்குNEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டுNEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையானகாலத்தில் அகிலஇந்திய பட்டமேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்திஉள்ளது. இவ்வாறுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிராகரிப்பு !!

ரூபாய் 600 ல் நவீன சிறுநீர் கழிப்பிடம் ,அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் !!

TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST DIRECTOR | NO. OF VACANCIES 12 | LAST DATE 12.01.2017







>> Employment Type
Govt Job
>> Application
Online
>> Website
>> Name of the Post
ASST DIRECTOR
>> கல்வித் தகுதி
DEGREE
>> காலியிடங்கள்
12
>> சம்பளம்
15600-39100+5400
>> தேர்வு செய்யப்படும் முறை
Competitive Exam
>> கடைசித் தேதி
12.01.2017
>> தேர்வு நாள்
08.04.2017

SHAALA SIDDHI KEY DOMAINS - FORMATS

தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில்தேர்வு நேரத்தில்உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்குஎதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும்உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொருஆண்டும் ஆசிரியர்கள்பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டுஆக.,1ல்மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைகணக்கிடப்பட்டன.
தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில்மட்டும் உபரிஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில்பணி நிரவல்செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்கழக மாவட்டச்செயலாளர் இளங்கோகூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்மே மாதம்நடக்கும் கவுன்சிலிங்கில்தான் பணிநிரவல்செய்யப்படுவர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைதிடீரென தேர்வுசமயத்தில் பணிநிரவல் செய்யஉள்ளனர். கல்வியாண்டின்இடையில் ஆசிரியர்களைமாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அவர்களைதேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாது, என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பதுமற்றும் தேவையானசலுகைகளை வழங்கவழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு
மாநிலங்களவை ஒப்புதல்அளித்துள்ளது.இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்துஉறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
 இதன் மூலம்மசோதா ஒருமனதாகநிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு5 லட்சம் ரூபாய்வரை அபராதம்மற்றும் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கமசோதா வழிசெய்கிறது.

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குஇட ஒதுக்கீட்டை3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதாவழிவகை செய்கிறது.தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கானவரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்நிலையில் அவற்றை21 ஆக உயர்த்தப்படும்என மசோதாவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனநல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல்பால்சி, தசைசிதைவு உள்ளிட்டகுறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள்வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர் கல்வி நிறுவனங்களில்மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டைமூன்றில் இருந்துஐந்து சதவிகிதமாகஅதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும்மத்திய மற்றும்மாநில அரசுத்துறைகளில் உள்ளமாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கானஅதிகார வரம்பும்அதிகரிக்கப்பட உள்ளது.