யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/16

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில்,
மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.


இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக