யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/16

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பதுமற்றும் தேவையானசலுகைகளை வழங்கவழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு
மாநிலங்களவை ஒப்புதல்அளித்துள்ளது.இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்துஉறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
 இதன் மூலம்மசோதா ஒருமனதாகநிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு5 லட்சம் ரூபாய்வரை அபராதம்மற்றும் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கமசோதா வழிசெய்கிறது.

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குஇட ஒதுக்கீட்டை3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதாவழிவகை செய்கிறது.தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கானவரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்நிலையில் அவற்றை21 ஆக உயர்த்தப்படும்என மசோதாவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனநல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல்பால்சி, தசைசிதைவு உள்ளிட்டகுறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள்வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர் கல்வி நிறுவனங்களில்மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டைமூன்றில் இருந்துஐந்து சதவிகிதமாகஅதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும்மத்திய மற்றும்மாநில அரசுத்துறைகளில் உள்ளமாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கானஅதிகார வரம்பும்அதிகரிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக