யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்

புதிய தேசிய கல்வி வரைவுகொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்கஇருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில்
சீர்திருத்தம்மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகம் நியமித்தது.
இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்விவரைவு கொள்கையை கடந்த மே மாதம்சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலானஅம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவுகொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டிஅமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்றுகூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறந்தகல்வியாளர்கள் கொண்ட புதிய குழுஇன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில்அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்யவேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றைமேற்கொள்ள அரசு தயங்குவதாக ஏற்கனவேசுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழுஅமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா எனஅமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின்வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்கவேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக