யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/10/18

பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன

                                      

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன்


5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?" - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்

புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்  ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்...


புதுக்கோட்டை,அக்.4 : அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை  புதுக்கோட்டை பொதுத்துறை அலுவலக வளாகம் முன்பு  ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இரா.ரெங்கசாமி,மு.ராஜாங்கம்,க.சு.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தினை தொடங்கி வைத்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது: 1.4.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும்.

இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி,அமைச்சுப் பணியாளர்கள்,கண்காளிப்பாளர்கள் ,தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக பல்வேறு துறைகளிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள்,ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.சிறப்பு கால முறை ஊதியம் சத்துணவு,அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊராட்சி செயலாளர்கள்,ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியமும்,கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமும் வழங்கப் பட வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்கிட வேண்டும்.5000 அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு சமூக நீதியினைப் பாதுகாத்திட வேண்டும்.இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்க கூடிய வகையில் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை ரத்து செய்திட வேண்டும்..எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும்,நவம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என்றார்..

போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் குமரேசன்,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கணேசன்,முதுகலை ஆசிரியர் சங்கம  மணிமேகலை,கல்லூரி பேராசிரியர்  சங்கம் நாகேஸ்வரன்,அங்கன்வாடி ஊழியர் சங்கம் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்கம் மலர்விழி ,ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மகேந்திரன்,கணேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்..

கூட்டத்தில் ஏராளமான  ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

சொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத "மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்"..! இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..!

                                       

ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.


அதன்படி, .
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது..? அது உண்மை தானா..? இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.
ஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது
அதன்படி,
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 - 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.
அதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் - மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்


அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது...தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்
என்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்வர்:- அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் 4399 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை


ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் கிராம சபை கூட்டத்தில் 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை (பத்திரிகை செய்தி)

                                                         
திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி, தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற் றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா ளர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாள ராக ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி) குமாரி பங்கேற்றார். கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத் துவதை தவிர்த்தல், குடிநீரை சிக்க னமாக பயன்படுத்துதல், சுகாதா ரத்தை கடைபிடித்தல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல, வந்தவாசி அடுத்த சளுக்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி தலைமை வகித்தார். கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தடையில்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி,' தான் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்