யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/17

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்



TRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வழங்கியது அம்பலம். தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!!

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

சென்னை: 'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொதுத் தேர்வு தேதியை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரில், அரசு தேர்வுத் துறை அறிவிக்கும். இந்த ஆண்டு, பள்ளிக் கல்விச் செயலர், உதயசந்திரன் உத்தரவில், இறுதி தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே, பொது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனால், தேர்வு நாளை, முன்கூட்டியே கணக்கிட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், மாணவர்கள் படிக்கவும் வசதியாக இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அதே தேதிகளில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடக்கும் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்துள்ளது



ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.

குரூப் - 4' தேர்வு பதிவுக்கு 20ம் தேதி வரை அவகாசம்

சென்னை: 'குரூப் - 4' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., பிப்., 11ல் போட்டி தேர்வை நடத்துகிறது. இதில், பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு, நவ., 14ல் துவங்கி, டிச., 13ல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், வரும், 20 வரையும், தேர்வு கட்டணம் செலுத்துவது, 21ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் அறிவித்துள்ளார். நேற்று வரை, இத்தேர்வுக்கு, 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்த, குரூப் - 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களில், இதுவே அதிகபட்சம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளை விட, அதிக விண்ணப்பங்கள், இந்த முறை பதிவாகி உள்ளன.'ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் தேதியில், எந்த மாற்றமும் இல்லை' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

STATE TEAM VISIT - கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் !



மார்கழி : _ மாதம்

மார்கழி :

மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே  ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.


மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதிகாலை அற்புதம்

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று  அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த  அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது  பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது  சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

சரணாகதியே வழி

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும்,  புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை  சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும்,  ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில்  ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு  பெற்றது.

மதிப்புக்குரிய மார்கழி

மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும்  பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர்  பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற  மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.