யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/9/17

வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம் : செங்கோட்டையன் தகவல்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்,'' என, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை தரிசனம் செய்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், கல்வித் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக, 412 தேர்வு மையங்கள் துவங்கப்படும். அடுத்த மாதம் முதல், அந்த மையங்கள் செயல்படும். மேலும் கூடுதல் மையங்கள் திறக்கப்படும்.
அதுபோல, 32 மாவட்டங்களின் தலைநகரங்களில், அரசு நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கான நுால்கள் அளிக்கப்படும்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். கற்றலுக்கு ஏற்றபடி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது.  இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
 இதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.
 கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை  அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை  நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி

தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின.
இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன. 
தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற சான்றிதழ் பெற்றுள்ளன.
அவற்றுக்கு வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., அந்தஸ்து கிடைக்கும். இன்னும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்து உள்ளன. கடந்த கல்வியாண்டில், 600ஆக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த கல்வியாண்டில் 800ஐ தாண்டி உள்ளன

பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ௨௮ பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தை புதுப்பிக்கும் பணியில், எஸ்.சி.இ.ஆர்.டி., ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஒன்பது புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இந்தத் துறையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க, ௨௮ பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், ௧௧ துணை இயக்குனர்கள் மற்றும், ௧௭ மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, பள்ளிக்கல்வி 
அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, பதவி உயர்வு ஆணைகளைவழங்கினார்.

சாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்தரம் குறித்து உலகவங்கி கவலை !!

DGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவலர்களே சரிபார்த்துக்கொள்ள கடவுச்சொல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்



ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.   
ஆண்டுதோறும் ஊதியம், ஆண்டுக்கு இருமுறை உயரும் அகவிலைப்படியால்  ஊதியமானது அதிகரித்துக்கொண்டு போகும் என்றாலும் ‘ஊதிய மேம்பாடு’ தருவது ஊதியக்குழு பரிந்துரையால்தான். ஏனென்றால், ஓர் ஊதியக் குழுவுக்கும், அதற்கடுத்த ஊதியக் குழுவுக்குமான பத்தாண்டு கால இடைவெளியில் தரப்படும் அகவிலைப்படி மொத்தத்தையும் அடிப்படை ஊதியமாக (Basic Pay) அங்கீகரித்துத் தருவது ஊதியக்குழுதான். இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஊதியத்தைத்தான் ‘உண்மை ஊதியம்’ (Real Pay) என்று குறிப்பிடுகிறது ஏழாவது ஊதியக்குழு. இதற்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு தரவே அகவிலைப்படி உயர்வு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

நான்கு அம்சங்கள் 
அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்பட ஊழியர்களின் ‘திருப்தி’ அவசியம் என்பதால், ஏழாவது ஊதியக்குழு கீழ்க்காணும் நான்கு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு தனது ஊதிய நிர்ணய பரிந்துரையை அளித்துள்ளது. 
1. ஊதியமானது, திறன்மிகுந்த ஊழியர்களை ஈர்த்து, தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ளும் வகையில் போதுமான அளவு இருக்க வேண்டும்.
2. ‘கடுமையாக உழைக்க வேண்டும்’ என்ற உந்துதலை ஊழியரிடையே ஏற்படுத்தக்கூடியதாக  இருக்க வேண்டும்.
3. ஊதியக் கொள்கையானது (Pay Policy) இதர மனிதவள மேலாண்மைச் சீர்திருத்தங்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.
4. அமைக்கப்படும் ஊதிய நிலைகள், நாட்டின் நிதிநிலை ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
இதன்படி, புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும், தர ஊதியமும் சேர்ந்தது 100%. அன்றைய தேதியில் தரப்பட்டிருந்த அகவிலைப் படி 125%.  ஊதியம் + அகவிலைப் படியின் கூட்டுத் தொகை 225%. ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரையில் 14.2 சதவிகித உயர்வை வழங்கியுள்ளது. அதன்படி, 225 சதவிகிதத்தில் 14.2% உயர்வு என்பது 32% ஆகும். அப்படியானால் 100+125+32 = 257%. இதுதான் அனைவருக்கும் பொதுவான ஊதிய நிர்ணயமுறை.
இந்த 257 சதவிகிதம்தான் 2.57 மடங்கு எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, 1.1.2016 அன்று பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி, பெருக்கி வரும் தொகையை ரூ.100-ன் மடங்குகளில் அமைத்து, ஊதிய நிர்ணய அட்டவணை ஒன்று அமைந்துள்ளது. இதன்படி நிர்ணயம் செய்யப்படுவதே ‘உண்மை ஊதியம்’ என்று சொல்லப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கும். 1.1.2016-க்குப் பிறகு தர ஊதியம் கிடையாது.
இவ்வாறு புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்தபிறகு, பணியில் உள்ள ஊழியர்களுக்கு 1.1.2016-க்குப் பிறகு கிடைக்கும் சில பணிப் பலன்கள் பின்வருமாறு இருக்கும்.
ஊதிய உயர்வு 
வருடத்துக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதிய உயர்வானது, 1.1.2016-க்கு முன்பு இருந்த ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் மூன்று சதவிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.10-ன் மடங்குகளில் இருந்தது. 
01.01.2016-ல் தர ஊதியமானது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால்,      1.1.2016-க்குப் பிறகு தரப்படும் ஊதிய உயர்வானது அடிப்படை ஊதியத்தில் மூன்று சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.22,850 அடிப்படை ஊதியமும் ரூ.5,400 தர ஊதியமும் பெற்றிருந்த ஒரு சிறப்பு நிலை செவிலியருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வு தொகையாக ரூ.850 தரப்பட்டிருக்கும். அதாவது, 22,850+5,400 = 28,250. இதற்கான மூன்று சதவிகித உயர்வு ரூ.850.
இந்தச் சிறப்பு நிலை, செவிலியரின் மொத்த ஊதியமான ரூ.28,250-க்கு நிர்ணயம் செய்யப்படும் புதிய ஊதியம்,  ஊதிய நிர்ணய அட்டவணைப்படி (Pay Matrix) ரூ.73,200-ஆக இருக்கும். எனவே, இவரது வருடாந்திர ஊதிய உயர்வு ரூ.2,200-ல் துவங்கி ரூ.2,300, ரூ.2,400 என ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகும்.
அகவிலைப்படி உயர்வு 
31.12.2015 அன்று ரூ.32,400 அடிப்படை ஊதியமும் ரூ.7,600 தர ஊதியமும் பெற்றிருந்த ஓர் அலுவலருக்கு ரூ.40,000-க்கு அகவிலைப் படி கணக்கிடப் பட்டிருக்கும். (32,400+7,600 = 40,000) இவரது புதிய ஊதியம் ரூ.1,02,800-ஆக நிர்ணயம் செய்யப்படும். ஆகையால், இனி இவரது அகவிலைப்படி ரூ.1,02,800-க்குக் கணக்கிடப் படும்.
ஊதிய முன்பணம் 
அரசு ஊழியர், ஆசிரியர் முதலானோர் பணிமாறுதல் (Transfer) செய்யப்படும்போது ஒரு மாத அடிப்படை ஊதியத்தை முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதனை மூன்று சம தவணை களில் மூன்று மாதங்களில் திரும்பச் செலுத்தலாம். இதன்படி, 31.12.2015 அன்று ரூ.20,900 அடிப்படை ஊதியம் +
ரூ4
,800 தர ஊதியம் பெற்றிருந்த ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கக்கூடிய முன்பணம் ரூ.25,700-ஆக இருந்திருக்கும். புதிய ஊதிய நிர்ணயத்தின்படி, இவரது அடிப்படை ஊதியம் ரூ.68,000-ஆக உயரும் என்பதால், இவர் ரூ.68,000-யை வட்டி இல்லாத முன்பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். (இந்த ஊதிய முன்பணமானது சொந்த விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கே சென்றாலும் கிடைக்கும்.) மேற்கண்டவை அனைத்தும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவுள்ள, புதிய அடிப்படை ஊதியம் வழங்கவுள்ள மேம்பட்ட பணிப்பலன்களே.
இனி, உண்மை ஊதியமான அடிப்படை ஊதியம் புதிய பணியாளர்களுக்கு எப்படி மேம்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். 
புதிய ஊழியர்கள்
புதிதாகப் பணிக்கு வருவோர்க்கான தொடக்கநிலை ஊதியம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 01.01.2016-க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேருபவருக்குத் தரப்பட்ட ஊதியம் + தர ஊதியம் + 125% அகவிலைப் படி= 9,300+4,600+17,375 = ரூ.31,275 இது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கத்துக்கு முந்தைய நிலை. ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தபின் பட்டதாரி ஆசிரியர் பெறக் கூடிய ஊதியம், 01.01.2016 அன்று, ரூ.44,900. அதாவது, தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.44900, முந்தைய ஊதியமான ரூ.31,275-யைவிட 43.56% அதிகம். 
இந்த 43.56% அடிப்படை ஊதிய உயர்வு என்பது பட்டதாரி ஆசிரியருக்கு மட்டு மன்றி, ரூ.9,300-34,800 என்ற ஊதிய ஏற்றமுறையும் ரூ.4,600 தர ஊதியமும் கொண்ட பழைய ஊதிய நிலைக்கு இணை யாகத் தற்போது மேம்படுத்தப் பட்டுள்ள புதிய ஊதிய நிலையில், நேரடி நியமனம் பெறும் அனைத்துப் பதவிகளுக்கும் பொருந்தும். இன்ன பதவிக்குத்தான் மேம்படுத்தப் பட்ட தொடக்க நிலை ஊதியம் என்றில்லாமல், நேரடி நியமனம் பெறத்தக்க அனைத்து பதவிகளுக்குமே அடிப்படை ஊதியத்தில் 62.22% வரை அதிகரித்த ஊதியத்தைத் தந்துள்ளது (Pay Matrix) ஊதிய நிர்ணய அட்டவணை.
‘மூத்த ஊழியரின் ஊதியம், அதே பதவியில் உள்ள இளைய ஊழியரின் ஊதியத்தைவிட குறைவாக இருக்கக்கூடாது’ என்பது விதிமுறை. இந்த விதிமுறையைப் பயன்படுத்தி சில வருடங்கள் முன்னதாகவே பணிக்கு வந்து, புதிய ஊதியத்தில் குறைவான ஊதியம் பெறுவோர், தமது இளையவரின் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் பெற முடியும். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தொடக்கநிலை ஊதியத்தின் பலன், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு வந்த ஊழியர்களுக்கும் போய்ச் சேரும்.
சுருக்கமாகச் சொல்வதானால், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் சிறப்பம்சமே தொடக்க நிலை ஊதிய மேம்பாடுதான். இந்த மேம்பாடானது, தற்போது பணியில் சேரும் ஊழியர்களுக்கு, கால ஓட்டத்தில் நிறைவான பணப்பலனை வழங்கக்கூடும்.  ஊதிய ஏற்றம் கருதி தனியார் துறைக்குச் செல்ல விரும்பும் திறன்மிகு இளைஞர்களை அரசுப் பணிக்குக் கொண்டு வந்துசேர்க்கும்! 

ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு! சிறப்பு கட்டுரை :

ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு !!! ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை 23ன்படி 2011லிருந்து வழங்கி வரும் தனி ஊதியம் 750 ஐ 1.1.2006ல் 2800 தர ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்காது 1.1.2011 முதல் வழங்குவதால் ஏற்பட்டுள்ள இளையோர் மூத்தோர் முரண்பாடுகளை களைய முடியாமல் தமிழக கல்வித்துறை திணறி வருகிறது .ஊதியக்குழவில் வழங்கப்படும் திருத்தம் அனைத்தும் அவ்வூதியக்குழுவின் ஆரம்ப காலம்(1.1.2006) முதல் வழங்காமல் குறிப்பிட்ட தேதியை (1.1.2011)வைத்து ஆசிரியர்களை பிரிவிணைப்படுத்தியதே இதற்கு காரணம் ..

அனைத்து பணப்பலன்களுக்கும் பொருந்தும் தனி ஊதியம் 750ஐ ஆறாவது ஊதியக்குழவின் மையத்திலிருந்து வழங்குவதும் 1.1.2006 லிருந்து 31.12.2010 முடிய 2800தர ஊதியம் பெற்ற சாதாரண இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் எந்த பணப்பலனுக்கும் வழங்காமல் மறுப்பதும் அரசாணை 23 ன் தவறாகும் ...
  
ஓர் ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக அல்லது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது எப்படி தனி ஊதியம் கையாளப்பட வேண்டும் என்பதை அரசு தெளிவாக விளக்காமல் போனதாலும் ...தனி ஊதியம் 5200-20800 க்கு மாற்றாக அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்பட்டதா ? அல்லது 4200க்காக வழங்கப்பட்டதா ? என்பது பற்றி அரசு தெளிவு படுத்தவில்லை ...
  
கேட்டதோ 9300-34800  கிடைத்ததோ 750 மட்டும் ....இது எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே இன்னும் முடிவாக வில்லை ....எப்படி இருப்பினும் இத்தனி ஊதியம் எல்லோருக்கும் 1.1.2006லிருந்து வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ...வழங்காத காரணத்தால் பணியில் பதவி உயர்வில் மூத்தோர் பல ஆயிரக்கணக்கானோர் குறைவான ஊதியம் பெறும் நிலை தமிழகமெங்கும் உருவாகி உள்ளது .
    
❇8764 தெளிவுரை பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் எக்காரணம் கொண்டும் தொடரக்கூடாது என்று கூறியுள்ள நிலையில் ..எல்லோருக்கும் 1.1.2011க்குப்பின் பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் பதவி உயர்வு பெற்ற பிறகும் தனி ஊதியமாக தொடராமல் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இணைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது ....
  
⏰ஆறாவது ஊதியக்குழவில் pay in the pay என்றும் grade pay என்றும் ஊதியம் வழங்கும் நிலையில் இத்தனி ஊதியம் 750 இந்த இரு நிலைகளில் எதில் வருகிறது என்பதை தமிழக கல்வித்துறை விளக்காமல் பணியில் மூத்தவருக்கு குறைந்த ஊதியத்தையும் ..பணியில் இளையோருக்கு தனி ஊதியம் 750 பதவி உயர்வில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது தவறானது என தணிக்கை தடைகளை காரணம் காட்டி பிடித்தம் செய்வதும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பான சூழலை உருவாக்கி உள்ளது ...
  
 தனி ஊதியத்தை 1.1.2006 முதல் கொடுக்காமல் மறுப்பதும் ..1.1.2011 முதல் பதவி உயர்வில் சேர்த்து கொடுத்ததை எடுப்பதும் பல நீதிமன்ற வழக்குகளுக்கு வித்திட்டு காலத்தையும் பணத்தையும் நிர்வாக குழப்பங்களையும் ஏற்படுத்தும் ..
  
அரசின் முறையற்ற அரசாணை 23 ஆல் தெளிவற்ற 8764 நிதித்துறை தெளிவுரையால் தமிழக கல்வித்துறையில் 750 பெற்றவரும் பெறாதவரும் அல்லல் படும் சூழல் உருவாகி உள்ளது ..ஐந்தாவது ஊதியக்குழவில் தனி ஊதியம் கையாண்டு வந்த முறையும் .ஆறாவது ஊதியக்குழவின் தனி ஊதியமும் ஒன்றா ? அல்லது எப்படி வேறுபட்டது என கல்வித்துறை விளக்காமல் அதிக ஊதியம் வழங்குவதும் பிறகு பிடுங்கி எடுப்பதும் தேவையற்ற நடவடிக்கைகள் ..
  
கீழ்நிலை அலுவலக பணியாளர் செய்தது தவறெனில் தமிழகம் முழுதும் தெளிவாக அரசாணைகளை வழங்குதல் அரசின் கடமை ஆகிறது ...அரசின் இத்தகைய ஆசிரியர் விரோத போக்கினால் ஆயிரக்கணக்கான ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்ட மேலும் மேலும் குழப்பமான நடைமுறைகள் தொடர்கிறது ..
  
ஆறாவது ஊதியக்குழவின் முரண்பாடுகள் களைய ஒரே தகுதி .ஒரே பணி .ஒரே ஊதியம் என்பதை தமிழக அரசும் கல்வித்துறையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும் ...