யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/7/18

அடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மாணவர்கள்: உதயச்சந்திரன்

சேலம் மாவட்டம் ஓமலூரில்,
புதிய பாடத் திட்டம் குறித்து, கருத்தாளர்களுக்கு நடந்த ஆலோசனைக் கூட்டம், பள்ளி கல்வித்துறை அரசு செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.


அப்போது அவர் பேசியதாவது: பாட புத்தகங்களை எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து தயாரிப்பர். இந்த முறை அவை மாற்றப்பட்டு, பாடப்புத்தகம் எழுதுவதை, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய அளவில் கல்வியாளர்கள், நிர்வாக அதிகாரிகள், பல மாநில கருத்தாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், என்.ஜி.ஓ.,க்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பலருடைய ஆலோசனைகள், கருத்துகளை உள்வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டுவரை பயிலும் மாணவர்கள், எதில் வலிமையாக உள்ளனர், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை பல்வேறு வடிவில் ஆராய்ந்து, புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரை படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதால், அதிக பக்கங்கள் கொண்டதாக உள்ளது. நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்வி கேட்கப்படுகிறது. அதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
அதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டனர். பிளஸ் 1 பாட புத்தகத்தில், முன்னுரைக்கு பின், அனைத்து பாட பிரிவினருக்கும், மேல்படிப்பு பற்றி என்ன, எங்கு படிக்கலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொழில்நுட்பம் பதிந்துள்ளது. 2.825 க்யூ.ஆர்.கோடு நமது புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பி.பி.சி., வீடியோ காட்சிகள் இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு, க்யூ,ஆர்.கோடு மூலம், இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களோடு கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டி தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது ஆசிரியர்கள் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி இணை இயக்குனர் பொன்.குமார், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

இனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..!*

ஒரு தகவலை அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில் வாட்சப் புதிய சோதனையை மேற்கொண்டுள்ளது.வதந்தி பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வாட்சப் மேற்கொண்டு வருகிறது.


வாட்சப்பில் பரவும் வதந்தியால் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கும்பலின் தாக்குதலால் எந்தவித குற்றமும் புரியாதவர் கூட பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முழு முதற் காரணம் வாட்சப்பில் பரப்பப்படும் வதந்திதான். எனவே வாட்சப்பில் பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வாட்சப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஃபார்வேர்டு தகவல் என்பதை காட்டும் வசதி கொண்டு வரப்படும் என அரசிடம் வாட்சப் உறுதியளித்திருந்தது. ஆனால் வேறு என்ன வசதியை ஏற்படுத்தி தரப் போகிறீர்கள் என்று வாட்சப் நிறுவனத்தை மத்திய அரசு வினவியிருந்தது.



இந்நிலையில் ஒரு தகவலை அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில் வாட்சப் நிறுவனம் புதிய சோதனையை மேற்கொண்டுள்ளது. வதந்தி பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வாட்சப் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் மக்கள் வாட்சப்பை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் நாள்தோறும் ஏகப்பட்ட மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்கின்றனர். தங்களுக்கு வரும் மெசேஜ்கள் உண்மையானது தானா..? அல்லது போலியானதா..? என்பதை கூட கண்டறியாமல் அவர்கள் அப்படியே ஃபார்வேர்டு செய்து விடுகின்றனர். உலகில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் அதிக மெசேஜ்கள் ஃபார்வேர்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு மெசேஜ்ஜை 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வசதியை வாட்சப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. மேலும் அது ஃபார்வேர்டு மெசேஜ் என்கிற குறிப்பும் நமக்கு தெரிந்துவிடும். இதன்மூலம் பலபேருக்கு மெசேஜ் ஃபார்வேர்டு செய்வது தடுக்கப்படும். மேலும் 5 பேருக்கு ஒரு மெசேஜை ஃபார்வேர்டு செய்த பின் மீண்டும் ஃபார்வேர்டு செய்ய முயற்சித்தால் அந்த பட்டன் இயங்காது. இதன்மூலம் போலி தகவல்கள்  தேவையில்லாமல் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்பது வாட்சப் நிறுவனத்தின் திட்டம். விரைவில் இந்த சோதனை முழுமையான அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம்

மாணவர்களின் அறிவுத்திறனை
மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்க.பாண்டியராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னை ரோட்டரி சங்கம் கேளக்ஸி சார்பில் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான விநாடி-வினா போட்டி, சென்னை காமராஜர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பரிசுகள் வழங்கிப் பேசியது: மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வியை சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், நமது பண்டைய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பாடத்துடன் பொது அறிவு, வரலாற்றையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி, கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவைபரிசாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சென்னை ரோட்டரி சங்கம் கேளக்ஸியின் மாவட்ட ஆளுநர் பாபு பேரம், விஐடி கல்வி நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் ஆர்.கே.மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, பல்வேறு காரணங்களால் தொல்லியல் துறையில் 60 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றில் 500 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. தேனி,நாமக்கல் மாவட்டங்களில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது' என்றார் அவர்.

CBSE - பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ.மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
அரசின் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மகாதேவன், அரசின் இந்த ஆணைக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி தடை விதித்திருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு விசாரித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்தவும், ஆய்வு செய்யும்
தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையையும்  நீக்கம் செய்துள்ளது.

தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த தனி நீதிபதி மகாதேவன் உத்தரவையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழக அரசு அதில் தலையிடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு:

பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, கட்டட வடிவமைப்பியல் படிப்புக்கான, 'ஆர்கிடெக்' கல்லுாரிகளில், பி.ஆர்க்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, கடந்த, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, 15ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

IGNOU - படிப்பில் சேர கூடுதல் அவகாசம்!

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்னோவில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை, 'டிப்ளமா' உள்ளிட்ட வற்றை, தொலைநிலையில் படிக்க, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான கடைசி தேதி முடிய இருந்த நிலையில், ஜூலை, 31 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சி.ஏ., படித்து கொண்டிருப்போர், பி.காம்., மற்றும் எம்.காம்., சிறப்பு படிப்பிலும் சேரலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர், onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பில், பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், சென்னை, வேப்பேரியில் உள்ள, மண்டல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், rcchennaiignou.ac.in என்ற இ- - மெயில் மற்றும் 044- 26618438/ 26618039 ஆகிய, தொலை பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்

இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.

ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.

மூன்றாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் துவங்கிய, தொழிற்கல்வி கவுன்சிலிங், இன்று முடிகிறது

ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி:

பல்கலை ஆசிரியர் பணியிடங்களில், இட ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்,.ராஜ்யசபாவில், இது பற்றி அவர் கூறியதாவது:
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.

  இந்த உத்தரவை எதிர்த்து, சிறப்பு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அது, ஆகஸ்ட், ௧௩ல், விசாரணைக்கு வருகிறது.

இதனால், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி களில், ஆசிரியர் பணிகளுக்கான, அனைத்து நேர்காணல்களையும், நிறுத்தி வைத்துள்ளது.பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர் நியமனங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான, சரியான ஒதுக்கீட்டை பேணிக்காக்க முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது.அதை இழக்கவோ, மற்றவர்கள் அதைக் கலைக்கவோ அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்:

சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

 சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:

வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர்.


இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.

G.O -126,127,128,129 - DEE & DSE Special Rules