டெல்லி: டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 13வதுகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்
ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்படி குடியரசுத் தலைவர் நடப்பட உள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்ஜைதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும்; ஜூலை 20ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 120 எம்எல்ஏக்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர்.
மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி, எம்எல்ஏக்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். சட்டப்பேரவை செயலாளர்கள் தேர்தல் அதிகாரிகளாகவும், மக்களவை, மாநிலங்களவை செயலர்கள் தேர்தல் துணை அதிகாரிகளாக செயல்படுவார்கள்.