யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/8/18

சிபிஎஸ்சி தரம் எங்கே?- நீதிபதி கிருபாகரன் வேதனை!!!

'2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள்  பற்றிய கேள்வி என வழக்கறிஞர் புகார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா
?- நீதிபதி.
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்- சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக சுமையை குறைக்கவும் 
, அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்களை படிக்க உத்தரவிட கோரி மனுவில் நீதிமன்றம் உத்தரவு.

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் திராட்சை!

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. 
திராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. <திராட்சையை அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். >சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
மார்பகப் புற்று நோய் தாக்கப்பட்ட பெண்களுக்கு, அருமருந்தாக உள்ளது திராட்சைப் பழம்! பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?

அனைத்து வங்கிகளும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்த முடியாத ரூபாய் வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். மாற்ற முடியாத ரூபாய் நோட்டுகள்: மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது

குப்பைகளின் மூலம் 3 மாதத்தில் 5 கோடி லாபம் பார்த்தவர்…

குழந்தைகளின் கைகளில் குப்பைகளைப் போல சிக்கியிருக்கும்….
வகையற்றுப் போன அந்த பொருட்களில் இருந்து புறப்பட்ட ஒரு பொறி தான், அந்த இளைஞனை கோடீஸ்வரனாக மாற்றியிருக்கிறது. பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். எல்லோருக்கும் மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.
உதயமானது ஆலை 2015 ஆம் ஆண்டில் நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஆலையைத் தொடங்கி, மின்கழிவுகளை சுத்திகரிக்கத் தொடங்குகிறான். அடுத்த 3 மாதத்தில் 5.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கிறான். அதற்கு ஏதுவாக 2017-18 ஆம் நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாயை சம்பாதித்து விட்டான்.
சுத்திகரிக்க திட்டம் பழைய மின்னணு பொருட்கள் எக்சேஞ்சாகவோ, வேர்க்கடலைகாரனிடமோ மாற்றுவது வழக்கம். இல்லையென்றால் தூக்கி எறிவது பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தூக்கி எறியப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் அக்ஷய் .
மின்னணு கழிவுகள் மின்பொருட்களில் செயல்படாதவை அகற்றப்படுகிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பழுதுபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒயர்கள் மற்றும் மெட்டல் போன்றவை சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தேவையயில்லாத கழிவுகள் அரசு அங்கீகரித்த குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 டன் மின்கழிவுகள் வீதம் ஆண்டுக்கு 5500 டன் கழிவுகள் சுத்திகரிக்கலாம் என்று அக்ஷய் தெளிவுபடுத்தினார்.
கல்வித் தகுதி டெல்லியில் பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பையும், கோஸ்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மெண்டில் பி டெக் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார் அக்சய். லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தை முடித்து 2012 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.
மதிப்பெண் உதவாது நான் சாதாரணமான மாணவன் தான். படிப்பாளியும் இல்லை முட்டாளும் இல்லை. பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் ஆர்வம் இருந்தது. சும்மா இருக்கும்போது புத்தகம் படிப்பேன். மற்ற நேரங்களில் மனிதர்களின் அனுபவங்களில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொண்டேன். மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் ஆர்வம்தான் இருந்திருக்கிறது என்றார் அக் ஷய்
கடனில் தொடங்கிய ஆலை லண்டனில் படிப்பை முடித்து பரீதாபாத் திரும்பியதும் மாருதியில் 38000 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைகிறார். லண்டனில் மின்கழிவு மறு சுழற்சி முறையில் பின்பற்றிய நேர்த்தியை பார்த்த அக்ஷய், அப்பாவிடம் 1 கோடி ரூபாய் கடனை வாங்குகிறார். பரீதாபாத்தில் மறுசுழற்சி தொழிற்சாலையைத் தொடங்குகிறார்.
வணிக மந்திரம் முதலீட்டை விட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அப்பாவின் வணிக மந்திரம் கைகொடுப்பதாக கூறும் அக் ஷய், 30 விழுக்காடு கடனை வட்டியுடன் அப்பாவுக்கு செலுத்தி விட்டதாக தெரிவிக்கிறார்.
மின்னணு கழிவு சேகரிப்பு மின்கழிவுகளை வீடுகளில் மட்டும் சேகரிக்காமல் பல்வேறு இடங்களில் அதற்கான தொட்டிகளை வைத்து சேகரித்து வருகிறார்கள். இப்போது 23 மாநிலங்கள் மற்றும் 7 முகமைகள் மூலமாக மின்கழிவுகளை பெறப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. சாம்சங், கோத்ரெஜ், ஏசர் வோல்டாஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களிலும் சேதமடைந்த மின்பொருட்களை மொத்தமாக வாங்கி வருவதாக அக்சய் கூறுகிறார்

புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை!!!

காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில், பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையை மேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள் தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில், 'கியூ.ஆர்., கோடு' உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில் புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் கூறுகையில், 'ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். 'பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது' என்கின்றனர்.

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம்

சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான
பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் அறிவானந்தம். இவரது அலுவலகத்தில் கடந்த 17.10.2017ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 50 பறிமுதல் செய்தனர். உடனடியாக அவரை கள்ளிக்குடிக்கு மாற்றினர். பின்னர் கடந்த ஜூலை 31ல் ஓய்வு பெறுவதற்கு முன்தினம் அவரை சஸ்பெண்ட் செய்தனர். அந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதித்து தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி அறிவானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ''குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்திற்காக ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையில் பங்ேகற்காமல் இருக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை தினசரி அடிப்படையில் விரைவாக விசாரிக்க வேண்டும். 7 வேலை நாளுக்கு மேல் விசாரணையை ஒத்திவைக்காமல் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் 1981ம் ஆண்டு சட்டத்தில் சில திருத்தம் செய்யலாம். இதன்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியருக்கு முதல் 6 மாதத்திற்கு 75 சதவீத பிழைப்பூதியம் வழங்க வேண்டும். 
6 மாதத்திற்குள் விசாரணை முடியாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர் ஏதேனும் நீதிமன்ற உத்தரவு பெறாத நிலையில் 75 சதவீத பிழைப்பூதியத்தை 50 சதவீதமாக குறைக்கலாம். ஓராண்டுக்கும் மேல் விசாரணை இழுத்தடிக்கப்பட்டால் அதிலிருந்து 25 சதவீதத்தை குறைக்கலாம். சஸ்பெண்ட் ஆகி ஓராண்டுக்கும் மேலான நிலையில் அவர் மரணமடைந்தால், விசாரணை தாமதத்திற்கு அவர்தான் காரணம் எனத் தெரிய வந்தால், அவரது வாரிசுதாரர்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டியதில்லை," என்று உத்தரவிட்டார்.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா...?

                                        
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும்  அழைக்கப்படுகின்றது.

இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள்  எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி  கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே  அழைக்கப்படுகிறது.


பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணம்:

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து  வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு  பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது,  அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின்  அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த  இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள்  தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'!

                                       
திருவனந்தபுரம்: இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.




கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், 'சார்ஜ்' இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


'இன்ஸ்பையர்' குழு

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில் ஒரு குழுவை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் 20 சதவீத சார்ஜ் ஏற்றும் எமர்ஜென்சி பவர் பேங்க்குகளை உருவாக்கி உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்க்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் இன்ஜி., மாணவர்கள் செய்த உதவியை கேரள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முதல்கட்டமாக, 100 பவர் பேங்க்குகளை மாணவர்கள் தயாரித்தனர். மேலும், 200 பவர் பேங்க்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

How to calculate new Profession Tax amount

IAS FREE COACHING | குடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.