திருவனந்தபுரம்: இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், 'சார்ஜ்' இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'இன்ஸ்பையர்' குழு
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில் ஒரு குழுவை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் 20 சதவீத சார்ஜ் ஏற்றும் எமர்ஜென்சி பவர் பேங்க்குகளை உருவாக்கி உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்க்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் இன்ஜி., மாணவர்கள் செய்த உதவியை கேரள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முதல்கட்டமாக, 100 பவர் பேங்க்குகளை மாணவர்கள் தயாரித்தனர். மேலும், 200 பவர் பேங்க்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக