யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/4/18

கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் செயல்படுகின்றன.
இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார்.

ப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயல்வழி கற்றல்மூலம் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வதுகுறித்து நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இவை உதவும் என்றார். 
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, "ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். வர இருக்கிற புதிய பாடத்திட்டம், 12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் தரமான பாடத்திட்டமாக அமையும். இந்த ஆண்டு, தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்றும், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி, நீட் தேர்வுக்குப் பயிற்சிபெற வழிவகை செய்துள்ளதாகவும் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது, "முறைகேடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

சென்னையில் ‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி கண்காட்சி 14, 15-ந் தேதிகளில் நடக்கிறது

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேர்வு செய்வதுதான் வாழ்க்கையின் திருப்பு முனையாகும்.

 அவர்களுக்கு உதவும் விதமாக, தினத்தந்தி வழங்கும் கல்வி கண்காட்சி-2018 நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 14, 15 ஆகிய தேதிகளில்நடைபெறுகிறது.

இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 70-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள், அவர்களது சிறப்பம்சங்கள், பயிற்றுவிக்கப்படும் படிப்புகள், அதற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்த அனைத்து விவரங்களையும் இந்த கண்காட்சியில் பெறுவதோடு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விபரங்கள் போன்றவற்றையும் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய படிப்புகள்

காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும்புதிய படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி இந்த கண்காட்சியின் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் பெற்றோர்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு, மாணவர்களின் விருப்ப பாடங்கள் பற்றியும், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். உடனடி வேலை வாய்ப்புகள் கொண்ட படிப்புகள் பற்றி அறிந்து, அவற்றை அருகில் உள்ள கல்வி நிறுவனத்திலேயே பெறுவதற்கும் இந்த கண்காட்சி ஒரு வாய்ப்பாகும்.இந்த கல்வி கண்காட்சியை சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், வேல்ஸ்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம், கலசலிங்கம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், செயிண்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மீனாட்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் ரெமோ சர்வதேச விமான கல்வி நிறுவனம் ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன. கண்காட்சியானது காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

டான்செட் 2018 விண்ணப்பங்கள் வரவேற்பு

10 ஆம் வகுப்பு ஆங்கிலம் 2 ம் தாள் ஈசி:

அரசு பெண் ஊழியருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட விவரம்

தனி ஊதியம் 750அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு திருப்பூர் Deeo- CM cell reply

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி-வேதியியல், சிறப்புத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. மே 16-ல் முடிவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 7-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 18-ம் தேதியும், மார்ச் 16-ல் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வருகிற 20-ம் தேதியும் நிறைவடைகின்றன. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் Grade D மாணவர்களுக்கு "தமிழில் கற்பித்தல் சிறப்பு பயிற்சி முகாம்"-2 நாட்கள்:

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு??* *நல்ல வேலைக்கு போகவா??* *ஆங்கிலம் சரளமாக பேசவா??* *குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??* *எதற்கு? ? ஏன்? ? என்று சிந்தித்ததுண்டா??*

Pre kg 25000 ல் துவங்குகிறது*
*Lkg 40000*
*Ukg 50000*
*1st.60000*
*2ND 70000*
*3D. 80000*
*4TH 90000*
*5TH 100000*
*6TO8 1.20000*
*9TO10. 150000*
*11TO12 200000 லச்சம் ஆக மொத்தம்*
*9,85000 ரூபாய்  இது கிராமங்கள்ல இருக்கிற CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.*

*சரி இதெல்லாம் இருக்கட்டும் இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா???*

*உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள் அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்* . *மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.*

 *ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??*

*தமிழகத்தில் 9 ன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராக?? பொறியாளராக வரமுடியுமா??*

*உங்கள் பிள்ளையும் இவ்வாறு வரவேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தீர்கள்.  சரி இப்போது அவர்களால் மருத்துவராகவோ பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சென்று சேர்ப்பீர்கள்???*

*CBSE கல்லூரியிலா??*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??*

*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரிதான் இல்லையா???*

*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா???*

*இல்லை?? இல்லவே இல்லை ??இப்போது உங்கள் பிள்ளைகளோடு சாதாரண அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள்தான் படிப்பார்கள் என்பதை உணருங்கள்.???*

*பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் எங்கே? ?*

*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?? உங்கள் பிள்ளை சாதனையாளனா??*

 *இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா???*

*உங்களுக்கு தெரியுமா TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று? ??*

*TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று????*

 *இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று??*

*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்???*

*உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா?? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று? ?*

*அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??*

*இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே??*

 *அரசுப்பள்ளிகள் அடித்தளமான பள்ளிகள் என்று அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள் அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??*

*வாருங்கள் குரல் கொடுப்போம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.*

*அப்படி சட்டம் இயற்றுவார்களா? ? அரசியல்வாதிகள்  இயற்றினால் என்ன நடக்கும்? ?அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடன் நம்பிள்ளை கலெக்டர் மகனுடன் நம்பிள்ளையும் படிப்பார்கள் கட்டட வசதிகள் அதிகமாகும்.* *சத்துணவு சத்தான உணவாகும். நவீன கருவிகள் முறையில் பாடம் கற்பிக்கப்படும் CBSE பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்படும்.*
*செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும். சிந்தித்து மற்றவரிடம் கொண்டு சேர்ப்போம்*

*என்றும் அன்புடன்*
*அரசு பள்ளி.*

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நீதிபதிக்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கடிதம் :

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடக மாநிலம் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பினர். 
அதுபற்றிய விபரம் வருமாறு:-
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளில், மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஒன்று. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 80 மாணவர்கள், 90 மாணவிகள் என மொத்தம் 170 பேர் படித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் என மொத்தம் 10 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாணவ- மாணவிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு தங்கள் கைப்பட கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
அந்த கடிதத்தில், “தமிழகத்தில் விவசாயம் குறைந்துவிட்டது. காரணம் காவிரி நீர் போதிய அளவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காவிரி பிரச்சினை குறித்த தங்களின் மேலான உத்தரவை உறுதியாக அமல்படுத்தும்படி, கர்நாடக மாநிலத்திற்கு அறிவுரை வழங்க தங்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள இந்த மாணவ-மாணவிகளின் செயல் பாராட்டுக்கு உரியதாக உள்ளது.