யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/6/17

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு !!

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு
பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, 'பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்' என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை. மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை.

எனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி.ஆர்க்., இணையதள தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது.

இந்த இணையதளத்தில், மாணவர் சேர்க்கை விதிகள், கல்லுாரிகளின் பெயர் விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஆர்க்., பதிவுக்கு, www.annauniv.edu, barch.tnea.ac.in மற்றும் www.tnea.ac.in என்ற இணையதளங்களிலும், மாணவர்கள் விபரங்களை பெறலாம்.

முதுகலை மருத்துவ மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு!!!

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை 4–ந் தேதி நடைபெறுகிறது.

முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6–ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9–ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது.
இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும், அரசாணைகளின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் மறுநாள் வெளியிட்டது.

இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ‌ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த 16–ந் தேதி உத்தரவிட்டனர்.
மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் ஏற்கனவே மருத்துவ படிப்பில் முதுகலை பட்டப்படிப்புக்கு சேர்க்கை பெற்ற 973 மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவ மேல்படிப்புக்கான சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்த இடங்கள் அனைத்தும் நிரப்ப முடியாமல் காலியாக இருக்கும்.

அது இந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை உருவாக்கும். எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.சப்ரே, சஞ்ஜய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆஜராகி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 4–ந் தேதியன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

நல திட்டங்களுக்கு 'ஆதார்' கட்டாயம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

மதிய உணவு திட்டம் உட்பட, பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலனை பெறுவதற்கு, 'ஆதார்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு, கல்வி உதவித்தொகை உட்பட, மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டப் பலன்களை பெறுவதற்கு, வரும், 30க்குள், ஆதார் எண் குறிப்பிடுவதை 
கட்டாயமாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அவகாசம்

'ஆதார் இல்லாதவர்கள், அரசின் சமூகநலத் திட்டங்களை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும் என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, தன் வாதத்தின் போது, ''ஆதார் இல்லாதவர்கள், அதன் விபரங்களை தாக்கல் செய்வதற்கு, செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதார் உள்ளவர்கள், வரும், 30க்குள் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு, 'பான்' கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். புதிய 'பான் கார்டு' வாங்க, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்ற வருமான வரி சட்டத்திருத்தத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒத்திவைப்பு

அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், 'ஆதார் உள்ளவர்கள், அதை குறிப்பிடுவது கட்டாயம்; அதே நேரத்தில், ஆதார் இல்லாதவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கும், அது பொருந்தும். அதனால், இந்த வழக்கில் இடைக்கால தடை ஏதும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கின் விசாரணை, ஜூலை, 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறி உள்ளது.

நெருக்கடியில் காரைக்குடி நகராட்சி பள்ளி திணறல்:கோப்புகளை கிடப்பில் போட்ட வருவாய்த்துறை!!

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட ராமனாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால், தமிழ், ஆங்கில வழி பிரிவு மாணவர்கள் ஒரே கட்டடத்துக்குள் நெருக்கடியில் படிக்கும் நிலை தொடர்கிறது.
காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 7-வது வீதியில் நகராட்சிக்கு உட்பட்ட ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி செயல்பட்டு 
வருகிறது. நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி, கடந்த 2013--14-ம் கல்வி ஆண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு பெற்றது.ஒரே பள்ளி இரண்டாக பிரிக்கப்பட்டது. உயர்நிலை பள்ளியில் 2013-ம் கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. 2014--15-ல் 318, 2015--16-ல் 478, 2016--17-ல் 650, இந்த ஆண்டு 954 ஆக உயர்ந்துள்ளது. தமிழ் வழியில் 317 மாணவர்களும், ஆங்கில வழியில் 637 மாணவர்களும் படிக்கின்றனர்.
கட்டட வசதி இல்லாத நிலையில் நகராட்சி சார்பில் ரூ.ஒரு கோடிக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு ஓரளவு நெருக்கடி சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நடப்பாண்டில் இட நெருக்கடியால் பல மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பிட, கைகழுவும் வசதி, மைதான வசதி இல்லை.தொடக்க பள்ளியை பொறுத்தவரை கடந்த 2014--15-ல் 217, 2015--16-ல் 350, 2016--17-ல் 460, நடப்பாண்டில் 500 மாணவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர்.ஒரு வகுப்பில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடக்க பள்ளிக்கு கட்டடம் கட்ட தாலுகா அலுவலக பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தை தேர்வு செய்து, வருவாய் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்தது.அப்போதைய நகராட்சி தலைவர் கற்பகம் இதற்கான அனுமதி பெற முழு முயற்சியை எடுத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவி காலமும் முடிவடைந்ததால், இதற்கான கோப்பு நில நிர்வாக இயக்குனரகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறும்போது: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. தொடக்க பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய அனுமதியை காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமி மற்றும் தற்போதைய நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல்: ஜெட்லி!!!

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல் உள்ளிட்டபல்வேறு அறிவிப்புகளை மத்திய
அரசு வெளியிட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

* 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்திய நிறுவனம் தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகள் முழுவதும் விற்கப்படும்.

* உ.பி.,யில் சாக்ரி-அலகாபாத் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* ஒய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர மருத்துவ படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

* மிக உயர்ந்த பனி பிரதேசமான காஷ்மீரில் உள்ள சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான படி ரொக்கமாக வழங்கப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஜெட்லி தெரிவித்தார்