யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/6/17

நல திட்டங்களுக்கு 'ஆதார்' கட்டாயம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

மதிய உணவு திட்டம் உட்பட, பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலனை பெறுவதற்கு, 'ஆதார்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு, கல்வி உதவித்தொகை உட்பட, மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டப் பலன்களை பெறுவதற்கு, வரும், 30க்குள், ஆதார் எண் குறிப்பிடுவதை 
கட்டாயமாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அவகாசம்

'ஆதார் இல்லாதவர்கள், அரசின் சமூகநலத் திட்டங்களை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும் என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, தன் வாதத்தின் போது, ''ஆதார் இல்லாதவர்கள், அதன் விபரங்களை தாக்கல் செய்வதற்கு, செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதார் உள்ளவர்கள், வரும், 30க்குள் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு, 'பான்' கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். புதிய 'பான் கார்டு' வாங்க, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்ற வருமான வரி சட்டத்திருத்தத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒத்திவைப்பு

அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், 'ஆதார் உள்ளவர்கள், அதை குறிப்பிடுவது கட்டாயம்; அதே நேரத்தில், ஆதார் இல்லாதவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கும், அது பொருந்தும். அதனால், இந்த வழக்கில் இடைக்கால தடை ஏதும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கின் விசாரணை, ஜூலை, 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக