யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/16

நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!’ பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால்,அங்கீகாரம் கிடையாது‘ என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில்,இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர,பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில்,எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது.‘இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில்,

பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தரகல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை‘ என,ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து,அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம். கல்லுாரிகளில்,

இரண்டு பிரிவு வகுப்புகள் என்றால், தலா, 50மாணவர் வீதம், இரு ஆண்டுகளுக்கு, 200மாணவர்களை சேர்க்கலாம். இதற்கு, 16ஆசிரியர்கள் கண்டிப்பாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல்,ஒரு பிரிவு வகுப்பு என்றால், 50 மாணவர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு, 100மாணவர்களை சேர்க்கலாம். இந்த கல்லுாரிகளில், எட்டு பேர் நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.இந்த ஆசிரியர்களின் பட்டியலை, பல்கலையில் ஆவணங்களுடன் அளித்தால் மட்டுமே,கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும் புதியப் பாடத் திட்டம் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அமையும் என நம்புகிறோம். 

இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றி நடைபெற ஏதுவாக அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில் 4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CPS NEWS : ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை.

ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,

அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது. இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள்நேற்று சந்தித்தனர்.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

EMIS ல் COMMON POOLல் எவரும் இல்லை, எந்த மாணவரும் பதியாமல் இல்லை. பதிவுகள் சரியானவை. என்று கல்வித்துறைக்கு தலைமையாசிரியர் சான்று அளித்து தரவேண்டிய படிவம்.

CCE Worksheet result analysis

குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: 'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, 1,863 காலியிடங்களை நிரப்ப, ஜன., 24ல், 'குரூப் - 2 ஏ' எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூன், 8ல் வெளியாகின. வெற்றி பெற்றோருக்கு, ஜூலை, 4 முதல், 19 வரை, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை, சென்னையிலுள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும். அழைப்பு கடிதம் குறித்த விபரங்களை தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி அதிகாரிகள் தகவல்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், 500 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பின், 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய, 500 ரூபாய் நோட்டுகளை, தமிழகத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. அது, 13ம் தேதி மாலை, சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது; ஆனால், இன்னமும் மற்ற வங்கிகளுக்கு சென்று சேரவில்லை. அதனால், 500 ரூபாய் நோட்டுகள், இன்று மாலை, சென்னையில் மட்டும் கிடைக்கும். மற்ற பகுதிகளில் கிடைப்பதற்கு, ஓரிரு நாட்கள் ஆகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

CRC level science exhibition topics !!

1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்
6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்


Primary level - 2 models or 2 projects

Upper primary level -2 models or 2 projects.

CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தற்போது வாட்ஸ் அப் வீடியோ கால் வசதி புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களால் ஆன போன் வைத்திருப்பவர்கள் இந்த வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்த முடியும்.

இதுநாள் வரை குரல் அழைப்பு வசதி மட்டுமே வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது. வீடியோ அழைப்பு வசதியை எப்போது ஏற்படுத்துவார்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தற்போது சோதனை முயற்சியாக வீடியோ காலிங் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காலிங் வசதியானது தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் மட்டும் வேலை செய்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற இயங்குதளங்களில் இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.