பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறினார்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. இதில் கள்ள நோட்டுகளை அச்சிடுவது சாத்தியமில்லை. இந்த நோட்டுகள் காகித கரன்சிகளை விட தெளிவானதாக இருக்கும். தவிர, பல ஆண்டுகள்(5 வருடங்கள்) புழக்கத்தில் இருக்கும் என்பதாலும் மேற்கத்திய நாடுகள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு உள்ளன.
இந்தியாவில் இதுபோல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கள ஆய்வுக்காக 100 கோடி எண்ணிக்கையில் ரூ.10 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேசுவரம் ஆகிய 5 நகரங்களில் அறிமுகம் செய்யும் என அறிவித்தது.
மத்திய அரசு முடிவு
இந்த நிலையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ராஜாங்க நிதி மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கையில், “பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ஆகியவற்றினால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன” என்று குறிப்பிட்டார்.
இன்னொரு கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
அதிகாரிகள் மீது நடவடிக்கை
2015-ம் ஆண்டு பாதுகாப்பு இழைக்கோடு இல்லாத 1,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சில தங்களுக்கு வந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் ஹொசாங்காபாத் பாதுகாப்பு காகித ஆலையில் இருந்து வினியோகிக்கப்பட்டு நாசிக்கில் அச்சிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக இலாகாபூர்வ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மீது சட்டவிதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
எதிர்காலத்தில் குறைபாடு இல்லாத வகையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.